Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Article

தாயுமானவர் கட்டுரை – Thayumanavar Katturai

தாயுமானவர் கட்டுரை – Thayumanavar Katturai :- தாயுமானவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் கவி ஆவார் ,இவர் இயற்றியுள்ள பல பாடல்களும் பாடல்களும் தமிழ் காப்பியங்கள் மற்றும் பாடல்கள் தொகுப்பில் இடம்பெறுகின்றன,தமிழக அரசின் அரசுடைமையாக்க பட்ட படைப்புகளில் இவரது பாடல்களும் இடம்பெறுகின்றன.

தாயுமானவர் வரலாறு

சைவ வேளாளர் குளத்தில் கேடிலியப்பப் பிள்ளை மற்றும் கெஜவல்லி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்,இவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு ஆகும் .ஆரம்ப களங்களில் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக பணிபுரிந்தார்.

அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.

தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.

துறவு

மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார்.பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார்.திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும் ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார்.அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தின் ஒரு பகுதியுள்ள இலட்சுமிபுரமாகும்

இவரது படைப்புகளில் சில இங்கே கொடுக்க பட்டுள்ளன

S.No                   Unicode              Romanized Text
1திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்thiruvaruL vilAsap parasiva vaNakkam
2பரிபூரணானந்தம்paripUraNAnan-tham
3பொருள் வணக்கம்poruL vaNakkam
4சின்மயானந்தகுருsinmayAnan-thakuru
5மௌனகுரு வணக்கம்maunakuru vaNakkam
6கருணாகரக்கடவுள்karuNAkarakkadavuL
7சித்தர்கணம்siththarkaNam
8ஆனந்தமானபரம்Anan-thamAnaparam
9சுகவாரிsukavAri
10எங்கு நிறைகின்ற பொருள்engku n-iRaikinRa poruL
11சச்சிதானந்தசிவம்sassithAnan-thasivam
12தேசோ மயானந்தம்thEsO mayAnan-tham
13சிற்சுகோதய விலாசம்siRsukOthaya vilAsam
14ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம்AkArapuvanam – sithampara rakasiyam
15தேன்முகம்thEnmukam
16பன்மாலைpanmAlai
17நினைவு ஒன்றுn-inaivu onRu
18பொன்னை மாதரைponnai mAtharai
19ஆரணம்AraNam
20சொல்லற்குஅரியsollaRkuariya
21வம்பனேன்vampanEn
22சிவன்செயல்sivanseyal
23தன்னையொருவர்thannaiyoruvar
24ஆசையெனும்Asaiyenum
25எனக்கெனச் செயல்enakkenas seyal
26மண்டலத்தின்maNdalaththin
27பாயப்புலிpAyappuli
28உடல்பொய்யுறவுudalpoyyuRavu
29ஏசற்ற அந்நிலைEsaRRa an-n-ilai
30காடுங்கரையும்kAdungkaraiyum
31எடுத்த தேகம்eduththa thEkam
32முகமெலாம்mukamelAm
33திடமுறவேthidamuRavE
34தன்னைthannai
35ஆக்குவைAkkuvai
36கற்புறுசிந்தைkaRpuRusin-thai
37மலைவளர்காதலிmalaivaLarkAthali
38அகிலாண்ட நாயகிakilANda n-Ayaki
39பெரியநாயகிperiyan-Ayak
40தந்தைதாய்than-thaithAy
41பெற்றவட்கேpeRRavadkE
42கல்லாலின்kallAlin
43பராபரக்கண்ணிparAparakkaNNi
44பைங்கிளிக்கண்ணிpaingkiLikkaNNi
45எந்நாள்கண்ணிen-n-ALkaNNi
46காண்பேனோ என்கண்ணிkANpEnO enkaNNi
47ஆகாதோ என்கண்ணிAkAthO enkaNNi
48இல்லையோ என்கண்ணிillaiyO enkaNNi
49வேண்டாவோ என்கண்ணிvENdAvO enkaNNi
50நல்லறிவே என் கண்ணிn-inRan-ilai
51பலவகைக்கண்ணிpalavakaikkaNNi
52நின்றநிலைn-inRan-ilai
53பாடுகின்ற பனுவல்pAdukinRa panuval
54வண்ணம்vaNNam
55அகவல்akaval
56ஆனந்தக்களிப்புAnan-thakkaLippu