Site icon Tamil Solution

பிஎஃப் அக்கவுண்ட்..உங்கள் பணத்தை எடுக்க இந்த நம்பர் தெரியுமா உங்களுக்கு

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.

ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையையும், நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும் பங்களிப்பு செய்யும் தொகைக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட தொகை வட்டி விகிதமாக சேர்த்து கொடுக்கப்படுகிறது.

அந்த தொகையை ஓய்வுக்குப் பின்னரோ அல்லது தேவைப்படும் சமயத்தில் விண்ணப்பித்து ஊழியர்கள் முன்கூட்டியே கூட பெற்றுக்கொள்ளலாம்.

மாதச் ஊதியம் பெறும் அடிப்படை ஊதியத்தில் 12 விழுக்காடு வரை பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யப்படும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வழங்கிய தனித்துவ அடையாள எண் என்பது 12 இலக்க குறியீடாகும், இது கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற EPF விவரங்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்.

எனினும் இந்த UAN-ஐ ஆக்டிவேட் செய்த பின்னர் தான் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் இந்த UAN எண் தெரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

அதிகாரப்பூர்வ EPFO ​​போர்ட்டலான https://unifiedportal-mem.epfindia.gov.in./memberinterface/ பக்கத்தில் உள்நுழைய வேண்டும். முகப்புப்பக்கத்தில் இருக்கும் புதிய பக்கத்திற்கு செல்லவும்.

* இப்போது உங்கள் EPFO ​​கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

* பின்னர் உங்கள் எண்ணற்கு வரும் OTP எண்ணை கொடுக்கவும். இதனை தொடர்ந்து பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கும்படி கேட்கப்படும். அதில் உங்கள் விவரங்களை நிரப்பவும்.

* கடைசியாக உங்கள் ஆதார், பான் எண் உள்ளிட்டவற்றை கொடுக்கவும். இப்போது Show My UAN என்பதை கிளிக் செய்யவும்.

* இப்போது உங்கள் UAN எண்ணை திரையில் காட்டப்படும். அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து கொள்ளலாம் அல்லது உங்கள் எண்ணை குறிப்பாக எழுதி வைத்து கொள்ளலாம்.

உங்கள் UAN இன்னும் activate செய்யப்படவில்லை என்றால், அதனை activate செய்ய கிழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.,

* அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலான https://unifiedportal-mem.epfindia.gov.in./memberinterface/ பக்கத்தில் உள்நுழைய வேண்டும். முகப்புப்பக்கத்தில் இருக்கும் Activate UAN என்பதை கிளிக் செய்யவும்.

* இப்போது உங்கள் UAN எண், உறுப்பினர் ஐடி, ஆதார், பான் எண் , பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும்.

* சரிபார்ப்புக்காக பெட்டியில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். இப்போது நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

* அந்த OTP-ஐ உள்ளிட்டு Activate UAN-ஐ என்பதை கிளிக் செய்யவும்.

* இப்போது உங்கள் UAN number ஆக்டிவேட் செய்யப்படும், மேலும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பாஸ்வோர்டு அனுப்பப்படும்.

* இதன்பின்னர் நீங்கள் EPFO போர்ட்டலில் உள்நுழைய உங்கள் UAN எண், பாஸ்வோர்டு கொடுத்து எளிமையாக உள்நுழையவும்.

Exit mobile version