Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

10TH MATERIALS

10th Tamil Important 2 mark Questions – Collection

10th Tamil Important 2 mark Questions – Collection for 10th students:- 10th Tamil important questions are given in this page. Tamil Nadu SSLC Students want to get full marks in the Public examination. So we did a good collection of very important two marks on this page.

For 2021 students the government announced the reduced syllabus. So no one wants to study the full syllabus. Because of that concern we share reduced syllabus study materials on this page. For important 10th Tamil study materials please view this page


மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

Answer:

  • சீவக சிந்தாமணி,
  • வளையாபதி,
  • குண்டலகேசி
    இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழுணர்வை உலகெங்கும் பரப்ப காரணமாய் இருந்த இதழ்கள் யாவை?
Answer:

  • தென்மொழி
  • தமிழ்ச்சிட்டு

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?
Answer:

  • உலகியல் நூறு
  • கனிச்சாறு
  • பாவியக்கொத்து
  • மகபுகுவஞ்சி
  • நூறாசிரியம்
  • பள்ளிப் பறவைகள்
  • எண்சுவை எண்பது

வண்டு – தேன் தமிழர் – தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
வண்டு – தேன் :
உள்ளத்தில் கனல் மூள வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுகின்றது.

தமிழர் – தமிழ்ச்சுவை: தமிழர் செந்தமிழைச் சுவைத்து தமிழின் பெருமையை எங்கும் முழங்குகின்றனர்.

‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

Answer:
பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன் .
வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
நாற்று – நெல் நாற்று நட்டேன்.
கன்று – வாழைக்கன்று நட்டேன்.
பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.

கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?
Answer:
சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு, தேரைக்காய், அல்லிக்காய், ஒல்லிக்காய், கோட்டான்காய் (அ) கூகைக்காய்.

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா: சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்.

– இத்தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.

  • சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
  • சீனிவாசகனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் யாவை?
Answer:

  • முத்தும், அமிழ்தமும் கிடைக்கிறது.
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகள் கிடைக்கிறன.

சிலேடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை:

  • செம்மொழிச் சிலேடை
  • பிரிமொழிச் சிலேடை

சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை:

  • உயிர்மெய்
  • ஆய்தம்
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலுகரம்
  • ஆய்தக் குறுக்கம்
  • ஐகாரக்குறுக்கம்
  • ஒளகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • குற்றியலிகரம்

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
Answer:
குறுக்கங்கள் நான்கு வகைப்படும். அவை:

  • ஐகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஔகாரக் குறுக்கம்
  • ஆய்தக் குறுக்கம்

அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
அளபெடை இரண்டு வகைப்படும். அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

உயிரளபெடை என்றால் என்ன? சான்று தருக.
Answer:

  • செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும்.
  • அளபெடுக்கும் போது அவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் பக்கத்தில் வரும்.
  • சான்று: உழாஅர்.

‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’
– இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

Answer:
உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!

தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!

மூச்சுப்பயிற்சி குறித்துத் திருமூலர் கூறிய செய்தி யாது?
Answer:
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.

பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்ப காற்றிற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களைக் கூறு.
Answer:
தென்றல் காற்று, பூங்காற்று, கடல் காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல் காற்று, கீழ்க்காற்று, மென் காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல் காற்று, பேய்க்காற்று, சுழல் காற்று, சூறாவளிக்காற்று.

வசன கவிதை – குறிப்பு வரைக.
Answer:

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்.
  • கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்.
  • ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்.
  • தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்.

பாரதியாரின் பன்முகங்கள் யாவை?
Answer:
கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை, ஆசிரியர், இதழாசிரியர், கேலிச்சித்திரங்கள், கருத்துப்படங்களை உருவாக்குபவர்.

காற்றிடம் எதனைக் கொண்டுவந்து கொடுக்குமாறு பாரதியார் வேண்டுகிறார்?
Answer:
மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன், இலைகள் மற்றும் நீரலைகள்மீது உராய்ந்து மிகுந்த உயிர்வளியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம் பாரதியார் வேண்டுகிறார்.

பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
Answer:
தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்து விடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.

முல்லைப்பாட்டு நூல் குறிப்பு வரைக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • 103 பாடல் அடிவரையறை கொண்டது.
  • ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.
  • பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்.

விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
Answer:

  • ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய்,
  • தெய்வத்தைத் தொழுது நிற்பர். அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.
  • அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும்.
  • தீய மொழியைக் கூறின் தம் செயல் தீயதாய் முடியும் என்று எண்ணுவர்.

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
Answer:
தண்ணீ ர் குடி

  • தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
  • மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.

தயிர்க்குடம்

  • தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)
  • கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
Answer:

  • பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் சேரும் தொடர்.
  • இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து வரும்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்கும்.
    எ.கா: கரும்பு தின்றான்.

‘தானியம் ஏதும் இல்லாதநிலையில்விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக்குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருதமுடியாது.

உலகம் நிலைத்திருக்கிறதற்கான காரணங்கள் எவையென இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்?
Answer:

  • தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
  • அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது, பிறருக்குக் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலைத்திருக்கிறது.

வாளையும் யாழையும் பணையம் வைத்து விருந்தளிக்கப்பட்ட செய்தியைக் கூறு.
Answer:
பழைய வாள் :
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்

சீறியாழ் :
இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
Answer:

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்.
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு

இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
Answer:
தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

மலைபடுகடாம் – பெயர்க்காரணம் கூறு.
Answer:
மலைக்கு யானையை உருவகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைபடுகடாம் எனப் பெயர் பெற்றது.

கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
Answer:
வழிகாட்டல் :
பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்கள், மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.

‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத் தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
Answer:
‘சிரித்து பேசினார்’ என்பது, உவகை காரணமாக சிரித்து சிரித்து பேசினார்’ என அடுக்குத்தொடராகும்.

தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும். அவை:

  • எழுவாய்த் தொடர்
  • வேற்றுமைத் தொடர்
  • விளித்தொடர்
  • இடைச்சொல் தொடர்
  • வினைமுற்றுத் தொடர்
  • உரிச்சொல் தொடர்
  • பெயரெச்சத் தொடர்
  • அடுக்குத் தொடர்
  • வினையெச்சத் தொடர்

நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
Answer:
நச்சப் படாதவன் என்பதன் பொருள், பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

Answer:
கொடுப்பதூஉம் – இன்னிசை அளபெடை துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடை

பல கற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
Answer:
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலும் கல்லாதவராகவே கருதப்படுவார்.

எப்பொருளைக் காண்பது அறிவு?
Answer:
எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.

வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
Answer:
எ.கா: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo-ரோபோ)
  • செயற்கை நுண்ண றிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)

‘வாட்சன்’ குறிப்பு வரைக.
Answer:

  • 2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.
  • சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
Answer:
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

குலசேகர ஆழ்வார் குறித்து குறிப்பு வரைக.
Answer:
பெயர் – குலசேகர ஆழ்வார்
ஊர் – திருவஞ்சிக்களம் (கேரளம்)
நூல்கள் – பெருமாள் திருமொழி, முகுந்தமாலை.
புலமை – வடமொழி, தென்மொழி
காலம் – எட்டாம் நூற்றாண்டு

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
Answer:
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு.

சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?
Answer:

  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை,
  • அறிவாற்றல்,
  • சமூக உறவு,
  • இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன்.

வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
Answer:
கோடையில் பள்ளி விடுமுறை என்பதால் ஆரல்வாய்மொழிக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் உறுதித்தன்மை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் அமைகிறது.

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்கமாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
Answer:
சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான்.

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுது.
Answer:
தாய்மொழித் தமிழும் உலகப்பொதுமொழி ஆங்கிலமும் தவிர, நான் கற்க விரும்பும் மொழி இந்தி.

இந்தி கற்க விரும்பும் காரணம் :

  • இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
  • இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
  • பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
  • அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
  • வடநாட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவும் மொழி இந்தி.

மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?
Answer:
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை, வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார் மணவை முஸ்தபா.

செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
Answer:
கற்போம்! கற்போம்!
அருளைப் பெருக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
அறிவினைப் பெற கற்போம்!
கற்போம்! கற்போம்!
மயக்கம் விலக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

ஏன் கல்வியைப் போற்றிக் காக்க வேண்டும் எனச் செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?
Answer:
அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே, அதைப் போற்றிக் கற்க வேண்டும் எனச் செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்.

“கழிந்த பெரும்கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்”
– இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?
காதல் மிகு கேண்மையினான் யார்?

Answer:
கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) – குலேசபாண்டியன்.
காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்.

“யாம் அவனிடத்தில் வைத்த அருளினால் வந்தேம்” என்று இறைவன் கூறக் காரணம் யாது?
Answer:
இடைக்காடனாரின் செய்யுளை குலேச பாண்டியன் இகழ்ந்தான். இறைவன் இடைக்காடனாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததனால் இறைவன் கோவிலை விட்டு நீங்கினான்.

இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப்பக்கம் இருக்கிறது? இதோ.
இருக்கிறது! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக
.
Answer:
அ) மின்விளக்கின் சொடுக்கி எந்தப்பக்கம் இருக்கிறது?
– அறியாவினா
ஆ) இதோ…. இருக்கிறதே!
– சுட்டு விடை
இ) சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?
– ஐயவினா

கொடை வினா என்றால் என்ன?
Answer:
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது கொடை வினா எனப்படும். சான்று: என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுதல்.

“நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக மாற்றுக.
Answer:
நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினான்.

இலக்கியத்தில் கரகத்தின் பங்கு யாது?
Answer:
புறநானூறு : ‘
நீரற வறியாக் கரகத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரம் :
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று ‘குடக்கூத்து’ எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

“சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள்” – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
Answer:
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கிற ஒல்லித் தண்டுகளாகக் குறிப்பிடப்படுவோர் பெண்கள். இவர்கள் அமைதியான முறையில் இவ்வுலகத்தைத் தாங்கி நிறுத்தப் போராடும் போராளிகள்.

பூக்களைத் தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும் தளரப் பிணைப்பதாலும் நிகழ்வது என்ன?
Answer:

  • இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.
  • தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்.

குமரகுருபரர் குறிப்பு வரைக.
Answer:
ஆசிரியர் பெயர் – குமரகுருபரர்
காலம் – கி.பி. 17ஆம் நூற்றாண்டு
புலமை பெற்ற மொழிகள் – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி.
இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை

உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

Answer:

  • ‘கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய்’ என்று சொல்லி எழுப்பினார்கள்.
  • வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருள்களைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

Answer:

  • உழவர்கள் வயலில் உழுதனர்.
  • நெய்தல்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர். (அல்லது) தாழைப்பூச் செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.
  • முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே இடையர்கள் காட்டுக்குச் சென்றனர்.

பொருள் இலக்கணம் குறிப்பு வரைக.
Answer:

  • பொருள் என்பது ஒழுக்க முறை.
  • தமிழர் வாழ்வியல் ஒழுக்கங்களை அகம், புறம் என வகுத்தனர்.
  • இவற்றைப் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம்.

ஐவகை நிலங்களின் அமைவிடங்களைக் கூறுக.
Answer:

  • குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
  • முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
  • வயலும் வயல் சார்ந்த இடமும்
  • நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
  • பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.
Answer:
தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்.

எத்தகைய அமைச்சர்களுக்கு முன் சூழ்ச்சியும் நிற்க இயலாது?
Answer:
இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றையுடைய அமைச்சர்களுக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது.

எத்தகையப் பொருளை ஏற்காமல் நீக்கிவிட வேண்டும்?
Answer:
மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.

வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
Answer:

  • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
  • இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
  • இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
  • செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.

1906 ஆம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
Answer:

  • ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906இல் பிறந்தார்.
  • காந்தியடிகள் சத்தியாகிரக’ அறப்போர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் வ.உ.சி.

கு.ப.ராவின் படைப்புகள் அடங்கிய நூல் தொகுப்புகளைக் குறிப்பிடுக.
Answer:
அகலிகை, ஆத்மசிந்தனை.

கு.ப.ராஜகோபாலனின் பன்முகங்களைக் குறிப்பிடுக.
Answer:
சிறுகதை எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்.

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
Answer:
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாதவகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.

இராசராசனின் நாட்டில் புலம்புவதும், அடைக்கப்படுவதும் எது?
Answer:

  • சோழமன்னனின் ஆட்சியில் சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் எதனை நினைத்தும் துன்புற்றுப் புலம்புவதில்லை
  • நீர் மட்டுமே தேக்கி வைக்கும் பொருட்டு அடைக்கப்படும். மக்கள் எதற்காகவும் சிறைப்படுத்தி அடைக்கப்படுவதில்லை

சிலப்பதிகாரத்தின் காண்டங்கள், காதைகள் குறிப்பிடுக.
Answer:
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் மூன்று, காதைகள் முப்பது ஆகும். அவை:

  • புகார்க்காண்டம் – 10
  • மதுரைக்காண்டம் – 13
  • வஞ்சிக்காண்டம் –

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
Answer:

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
  • பல்நிணவிலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

எம்.எஸ் சுப்புலட்சுமியின் இசையைப் பாராட்டியோர் யாவர்?
Answer:

  • ஜவஹர்லால் நேரு
  • சரோஜினி நாயுடு
  • காந்தியடிகள்
  • ஹெலன் கெல்லர் – ஆவர்

எம்.எஸ். சுப்புலட்சுமி தன் இசைத்திறனை எம்மொழிகளிலெல்லாம் வெளிப்படுத்தினார்?
Answer:
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

கிருஷ்ணம்மாள் களப்பணிபுரிந்த இயக்கங்கள் யாவை?
Answer:

  • ஒத்துழையாமை இயக்கம்
  • சட்டமறுப்பு இயக்கம்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • பூதான இயக்கம்
  • உழுபவருக்கே நில உரிமை இயக்கம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்

புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சி
  • கரந்தை
  • வஞ்சி
  • காஞ்சி
  • நொச்சி
  • உழிஞை
  • தும்பை
  • வாகை
  • பாடாண்
  • பொதுவியல்
  • கைக்கிளை
  • பெருந்திணை

பாடாண் திணையை விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை எனப் பிரிக்கப்படும்.
  • பாடப்படும் ஆண்மகனது, கல்வி, வீரம், செல்வம், புகழ், ஈகை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது.
  • போரை மட்டும் சொல்லாது ஒருவரின் பிற மாண்புகளையும் குறிப்பிடுவதே பாடாண்திணையாகும்.

அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?
Answer:

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.

குறிப்பு வரைக: அவையம்.
Answer:

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு.
  • உறையூரிலிருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது.

காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
Answer:

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே’ – என இவ்வடிகளுக்கு இணையான தமிழ்ப்பழமொழி எழுதுக.

Answer:
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

“கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது.”
அ) அடி எதுகையை எழுதுக.
ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக: கொள்க, குரைக்க.

Answer:
அடி எதுகை:
கொள்வோர்
உள்வாய்

கவிஞன் என்பவன் யார்?
Answer:
மனம் என்னும் வயலில் சொல்லோர் கொண்டு உழுது, சிந்தனை விதைகளைத் தூவி, மடமை என்னும் களை பறித்து, தத்துவ நீர்ப் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவனே கவிஞன் ஆவான்.

ஆக்கல் அளித்தல், அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை’ – அவனும் யானும் யாவர்?

Answer:

  • அவன் என்பது இறைவன் (இறைவன்)
  • யான் என்பது கவிஞனாகிய கண்ணதாசன்.

குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
  • முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
    எ.கா: கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

யாப்பின் உறுப்புகள் யாவை?
Answer:
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை ஆகியவை ஆகும்.

ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
Answer:

  • குடியரசுத் தலைவர் விருது
  • சாகித்திய அகாதெமி விருது
  • சோவியத் நாட்டு விருது
  • ஞானபீட விருது
  • தாமரைத்திரு விருது – ஆகியவையாகும்.

ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடுவது யாது?
Answer:
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் இவையே ஜெயகாந்தனின் சிறந்த அடையாளங்கள்.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
Answer:

  • நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு.
  • நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.

வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
“வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்.

நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களைப் பட்டியலிடுக.
Answer:

  • மீட்சி
  • கொல்லிப்பாவை
  • சுபமங்களா
  • குமுதம்
  • புதிய பார்வை
  • இலக்கிய வெளிவட்டம்
  • குங்குமம்

‘தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு’ – ஏன்? யாருக்கு?

Answer:
செங்கற்களைச் சுமந்து , சித்தாளுக்குத் தலைக்கனமே வாழ்வாகிப்போனது

காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?

Answer:
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.

காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?

Answer:
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.

தீவக அணியின் வகைகள் யாவை?
Answer:
தீவக அணி மூவகைப்படும். அவை:

  • முதல் நிலைத் தீவகம்
  • இடைநிலைத் தீவகம்
  • கடைநிலைத் தீவகம் எனப்படும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

Answer:

  • இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி நிரல்நிறையணியாகும்.
  • இலக்கணம்: நிரல் – வரிசை: நிறை – நிறுத்துதல்
  • சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

தன்மையணியின் வகைகளை எழுதுக.
Answer:
தன்மையணி நான்கு வகைப்படும். அவை:

  • பொருள் தன்மையணி
  • சாதித் தன்மையணி
  • குணத் தன்மையணி
  • தொழிற் தன்மையணி ஆகியவை ஆகும்.

தன்மையணியை விளக்குக.
Answer:
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரியச் சொற்கள் அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

Other 10th Tamil Study Materials

We have an expert teachers team, so we have the latest study materials for all subjects.If you want to download this study material in Pdf search this website

10th tamil 2 paper important questions

10th tamil 2nd paper important questions

10th tamil important question download

tamil important questions for 10th

10th important question in tamil