Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

11th Materials Uncategorized

11th Tamil Public Exam Original Question Paper & Answerkey 2022 ( 10.05.2022)

Tamilnadu 11th Tamil public exam may 2022 original question papers and answer key available on this Page. The Educational department will not publish the original question papers and answer keys until May 2022 for this academic year, This public exam may 2022 answer keys are prepared by the qualified teachers and shared via tamilsolution.com and padasalai .co educational websites.

After the corona outbreak, the Tn government officials conducted the +1 Public Exam May 2022 this week. To is the scheduled +1 Public exam May 2022 for English subject, So lots of students are eagerly waiting to verify their answers, to help those students we shared the 11th English public exam may 2022 original question paper and answer key in this page.

Download Tn 11th Tamil Original Question Paper 2022

DOWNLOAD PDF NOW

11th Tamil public exam

Higher secondary Tamil First Year Examinations for Tamilnadu students are scheduled today 10.05.2022, As per the government guidance, the educational department conducting the public exam may 2022 with safety precautions. Today the public exam for English subjects is conducted by the pallikalvithurai. More than four lakhs of students write this examination in their examination centers. 11th English public exam May 2022 answer keys preparation is a challenging task. So we have a good preparation on board, more than 11 teachers online for you to provide the 11th English Public Exam answer key.11th English Public Exam May 2022 answer key are also available in pdf , please share it with your friends



மொழிப்பாடம் – பகுதி 1 – தமிழ்


கால அளவு : 3.00 மணி நேரம் ] [ மதிப்பெண்கள் : 90
அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின், அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
எழுதுவதற்கும்.
குறிப்பு : விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.



பகுதி – 1


குறிப்பு :(i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

1. பொருத்தமான இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) முத்துலிங்கம் -யுகத்தின் பாடல்
(ii) பவணந்தி முனிவர்-நன்னூல்
(iii) சு. வில்வரத்தினம்-ஆறாம் திணை
(iv) இந்திரன் – பேச்சுமொழியும் கவிதைமொழியும்


(அ) (ii), (iv)
(ஆ) (i), (ii)
(இ) (i), (iii)
(ஈ) (i), (iv)

Answer:- (அ) (ii), (iv)


2. ”இனிதென’ ‘இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகள் :


(அ) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே, தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
(ஆ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.

(இ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும். முற்றும் அற்று ஒரோவழி.
(ஈ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும். உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

Answer:- (ஆ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.


3.துன்பப்படுபவர் :

(அ) பொருளைக் காக்காதவர்

(ஆ) தீக்காயம்பட்டவர்.
(இ) நாவைக் காக்காதவர்

(ஈ) தீயினால் சுட்டவர்

Answer:- (இ) நாவைக் காக்காதவர்


4.ஒப்புரவு என்பதன் பொருள் :

(அ) ஊருக்கு உதவுவது

(ஆ) அடக்கமுடையது
(இ) செல்வமுடையது

(ஈ) பண்புடையது

Answer:- (அ) ஊருக்கு உதவுவது


5.சீறாப்புராணத்தின் ஆசிரியர்:

(அ) உமறுப்புலவர்

(ஆ) சீதக்காதி

(இ) கம்பர்
(ஈ) அம்மூவனார்

Answer:- (அ) உமறுப்புலவர்


6. பொருத்துக:

(1) விரியன் – (i) தண்டை
(2) திருகுமுருகு – (ii) காலாழி
(3) நாங்கூழ்ப்புழு (iii) சிலம்பு
(4) குண்டலப்பூச்சி – (iv) பாடகம்


(அ) (1) – (iv), (2) – (iii),(3) – (ii), (4) – (i)
(ஆ) (1) (iii), (2) (iv). (3) (ii), (4) (i)
(இ) (1) – (iv). (2) – (i), (3) – (iii), (4) – (ii)
(ஈ) (1) – (ii), (2) – (i), (3) – (iv), (4) – (ii)

Answer:- (ஈ) (1) – (ii), (2) – (i), (3) – (iv), (4) – (ii)


7.ஆஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

(அ) ஏ.ஆர். இரகுமான்
(இ) சித்ரா
(ஆ) பாரதிராஜா
(ஈ) இளையராஜா

Answer:- (அ) ஏ.ஆர். இரகுமான்


8.ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல். தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும். உடல் மேல் உயிர் வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் :


(அ) நல்லாடை
(ஆ) மூதூர்
(இ) பைந்தளிர்
(ஈ) வெற்றிடம்

Answer:- (அ) நல்லாடை


9. தவறான இணையைத் தேர்வு செய்க :


(அ) தமிழ் +உணர்வு – மெய் + உயிர்
(ஆ) மொழி +ஆளுமை – உயிர் + உயிர்

(இ) மண் + வளம் – மெய் + மெய்
(ஈ) கடல் + அலை – உயிர் + மெய்

Answer:- (ஈ) கடல் + அலை – உயிர் + மெய்


10.யானை டாக்டர் என்னும் குறும் புதினத்தின் ஆசிரியர்


(அ) ஜெயமோகன்

(ஆ) ஜானகிராமன்
(இ) சின்னப்பா
(ஈ) ஜெயராமன்

Answer:- (அ) ஜெயமோகன்


11.பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று :


(அ) சிறுதேர்
(ஆ) சாழல்
(இ) சிறுபறை
(ஈ) சிற்றில்

Answer:- (ஆ) சாழல்


12.மாநகர் என்பதன் இலக்கணக்குறிப்பு :


(அ) எண்ணும்மை
(ஆ) முற்றும்மை
(இ) உரிச்சொற்றொடர்
(ஈ) தொழிற்பெயர்

Answer:- (இ) உரிச்சொற்றொடர்


13.Book Review என்பதன் கலைச்சொல் :


(அ) புத்தக மதிப்புரை
(ஆ) ஏடு
(இ) பாடநூல் மதிப்புரை
(ஈ) புத்தகம்

Answer:- (அ) புத்தக மதிப்புரை


14.பேச்சு என்பது மொழியில்…………


(அ) ஓடுவது
(ஆ) பறப்பது
(இ) மூழ்குவது
(ஈ) நீந்துவது

Answer:- (ஈ) நீந்துவது




பகுதி – II
பிரிவு – 1 3×2=6


எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.


15.மருந்து எது ? மருந்து மரமாக இருப்பவர் யார் ?

Answer:- மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் மருந்து : செல்வம்


16. ‘ஒழுக்கமும் பொறையும் உனைப் போல் யார்க்குள’
இவ்வடி எதனைக் குறிப்பிடுகிறது ?

Answer:- எம்மண்ணையும் நன்மண்ணாக்கும் நாங்கூழ்ப் புழுவின் செயல்பாடுகளை, இவ்வடி குறிப்பிடுகிறது.


17. “ஊனமில் ஊக்கமும் ஒளிக் காய்த்தநல் தீன் எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்”
இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது ? பழுத்தது எது ?

Answer:- மதீனா நகரில், திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் தரும் குறைவற்ற ஊக்கமும் காய்த்திருந்தன; தீன் என்னும் செல்வம் பழுத்திருந்தது.


18. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின -தொடரின் பொருள் யாது ?

Answer:-

  • மரங்கள் வெட்டப்பட்டதால், காடுகள் அழிந்து போயின.
  • மழை பெய்யவில்லை. மண்வளம் குன்றியது.
  • இயற்கைச்சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால், வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன.


பிரிவு – 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும். 2×2=4


19.”நாழிக்குள் திணிக்கும் மருந்து போல்” என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

Answer:-

‘வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.

எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு பருருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.


20.”கோட்டை” என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது ?

Answer:- ‘கோட்டை என்னும் சொல், கோட்ட, கோடு, கோட்டே, கோண்டே, க்வாட் எனத் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படுகிறது.


21. “வரை” என்னும் சொல் உணர்த்தும் பொருள்கள் யாவை?

Answer:-



பிரிவு – 3
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும்.7×2=14

22. உயிர்முதல், மெய்ம்முதல் – எடுத்துக்காட்டுடன் விவரிக்கவும்.

Answer:-

உயிர்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் உயிர் எழுத்து வருவது கார் முதல் ஆகும். எ – கா : அம்மா (அ), ஆடு (ஆ), ஐவர் (ஐ), ஔவையார் (ஔ) – முதலில் உயிர் எழுத்துகள் வந்ததால் உயிர் முதலாகும்.

மெய்ம்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து எழுத்துகளில் ஒன்று, முதலில் வருவது மெய்ம்முதலாகும்.
எ – கா : கதவு (க் + அ = க), சங்கு (ச் + அ = ச), பந்து ( + அ = ப) – என, மெய்யெழுத்துகள் முதலில் வந்தன.


23.ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக. (அ) செங்கயல்
(ஆ) இயைவதாயினும்

Answer:-

1. செங்கயல் – செம்மை + கயல்
ஈறுபோதல்” (செம் + கயல்), “முன்நின்ற மெய் தந்தல்” – (செங்கயல்)

2. இயைவதாயினும் – இயைவது ஆயினும்
“உயிர்வரின் உக்குறள் லேயவிட்டோடும்” (இயைவத் + ஆயினும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இயைவதாயினும்)


24. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
(i) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
(ii) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது.

Answer:-

(i) தேர்வெழுத வேகமாகப் போர்கள், நேரம் கழித்துப் போனால் பதற்றமாகிவிடும்.

(ii) முயற்சி செய்தால் அதற்கேற்ற பயன் வராமல் போகாது



25. பின்வரும் மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
கனை, கணை

Answer:- குதிரை கனைத்ததால், வீரன் கணை வீசினான்.


26. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
தங்கை

Answer:- தங்கை – தங்தை த அண்ணனைப் போற்றிப் பேசினாள்.
தம் கை – பண்புல யோர் தங்கையே (தம்கையே) தமக்குதவி என வாழ்வர்.


27.பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களை எழுதுக..
(அ) Emotion
(ஆ) Mass Drill

Answer:-

Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.

Mass Drill – கூட்டு உடற்பயிற்சி



குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா :
உறுப்பிலக்கணம் தருக.
உண்டான்

Answer:-

உண்டான் – உண் + ட் + ஆன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆன் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.


28.விடைக்கேற்ற வினாவை எழுதுக.
சி.சு. செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழி பெயர்ப்பு முதலாக இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.

Answer:-சி.சு. செல்லப்பாவின் பங்களிப்புகள் யாவை ?


Answer:- அ ) அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக ஆ )


30. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

குமரனை பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள், என் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு.

Answer:- குமரனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகை தாருங்கள். என் வீட்டிற்குப் பக்கத்து வீடுதான் குமரனது வீடு.



பகுதி – III
பிரிவு -1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. 2×4=8


31.புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்கள் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

Answer:-

i. “வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்”
(பழி நீங்கிப் புகழோடு வாழ்பவரே வாழ்பவராவார்; புகழின்றிப் பழியோடு வாழ்பவர் வாழாதவரே ஆவார்.)

ii. “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
(உலகம் அஞ்சும் செயல்களைச் செய்வது அறியாமை; உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல்.)


32. புகழுக்குரிய பண்புகளாக நீவிர் கருதுவன யாவை ? புகழின் பெருமையைப் பொதுமறை வழிநின்று கூறுக.

Answer:-


33.’உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!’ – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

Answer:-

இடம் : பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.
பொருள் : உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.
விளக்கம் : கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதநரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.


34. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை ?

Answer:-

சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; அலை கடலை மலையாகவும், மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.)
மலையில் பொழிந்த மழையானபின், அருவியாய் இறங்கி, குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.
நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.



பிரிவு – 2
2×4=8
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

35.ஜீவாவின் பேச்சு நடை குறித்து சுந்தரராமசாமி கூறுவன யாவை ?


36.”மலை – மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது” என்பதை எடுத்துக்காட்டுடன் விவரிக்கவும்.


37.”நேரடி மொழி” என்பதை நும்பாட வழி நின்று எழுதுக.


38. திராவிடர்களின் மலைக் குடியிருப்புகள் பற்றி எழுதுக.



பிரிவு – 3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடை தருக. 3×4=12


39.உருவக அணி (அல்லது) உவமையணியை விளக்குக.

40.இலக்கிய நயம் பாராட்டுக. மையக்கருத்துடன் மூன்று நயங்களை எழுதுக.


பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி காட்சி கெடுத்திட லாமோ ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்.
—————பாரதியார்.


41.எழுத்து வடிவாக குறியீடுகளை வகைப்படுத்துக



42.புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(கம்பு, மை, வளை, மதி, இதழ், ஆழி)

(அ) எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும்
(ஆ) அடிக்கவும் செய்யலாம்; கோடைக்குக் கூழாகவும் குடிக்கலாம்
(இ) கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம்.
(ஈ) அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுவே தான்.


43 .தமிழாக்கம் தருக :

1.Looking at beauty in the world is the first step of purifying the mind.

2.. Winners don’t do different things, they do things differently

3.A picture is worth a thousand words.

4.Education is the most powerful weapon, which you can use to change the world.


43.காது கேளாதவர்களுக்கான மாற்றுவினா :
‘தமிழ்’ என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ‘தமிழ்’ என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர். ”அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற புறநானூற்றுப் பாடலடியில் ‘தமிழ்’ எனும் சொல் மொழி கவிதை என்பனவற்றைத் தாண்டிப் “பல்கலைப் புலமை” என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. “தமிழ்கெழு கூடல்” என்றவிடத்திலும் “கலைப்புலமை” என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன் “தமிழ்தழீஇய சாயலவர்” என்னும் இடத்து ‘தமிழ்’ என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன. தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் ‘தமிழ்’ பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன “தமிழ் இவை பத்துமே”, “மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்” என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுக்களாலான திருப்பாவையை ஆண்டாள் “தமிழ் மாலை” என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும்.
வினாக்கள் :
(1) தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை ?
(2) பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக. (3) தமிழ் என்றவுடன் உங்கள் மனத்தில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக.
(4) திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது ?



பகுதி – IV
அனைத்து வினாக்களுக்கும் இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.


44.
(அ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்கவும்.
அல்லது
3×6=18
(ஆ) ‘அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்” – இக்கூற்றை முப்பால் வழி விளக்குக.

(அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்வீர்கள் என்பதை விவரிக்கவும்.
அல்லது
(ஆ) ‘இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன” – இக்கூற்றினை மெய்ப்பிக்கவும்.

(அ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றை தொகுத்து எழுதுக.
அல்லது
(ஆ) பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை ?
பகுதி – V

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக.
(அ) ‘சிற்றூரும்’ .. எனத் தொடங்கும் – புரட்சிக்கவி பாடல்.
(ஆ) , ‘யான்’ – என முடியும் குறளை எழுதுக.
4+2=6

3 COMMENTS

Comments are closed.