Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th MATERIALS

12th Basic Automobile Engg TM Assignment 2021 with Answerkey (TNSCERT )

12th Basic Automobile Engg TM Assignment:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

பனிரெண்டாம் வகுப்பு ஒப்படைப்பு 2021 உங்களுக்காக விடையுடன் கொடுக்க பட்டுள்ளது ,மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்ட இந்த விடை குறிப்புகளை நீங்கள் கீழே உள்ள PDF லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

இந்த விடை குறிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பினால் கேளே குறிப்பிடவும் ,உடனுக்குடன் தவறான விடையை மற்றயமைக்க படும்

Download 12th Basic Automobile Engg TM – Click Here

12th Basic Automobile Engg TM Assignment 2021 with Answerkey

12th Basic Automobile Engineering Tamil Medium Assignment

வகுப்பு 12 பாடம் : அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் 
இயல் – 1 சக்தி கடத்தும் அமைப்பு 
பகுதி அ 
1. பலவுள் தெரிவு வினாக்கள் 
1. ஆட்டோமொபைல் வாகனங்களில் என்ஜினிலிருந்து கிடைக்கும் சக்தி 
அ )   சுழல் சக்தி  ஆ ) முன்பின் நகரும் சக்தி 
இ ) எக்சன்ட்ரிக் சக்தி  ஈ ) வெப்ப கடத்தும் சக்தி 
விடை  அ ) சுழல் சக்தி 
2.முன்புற என்ஜின் பின்சக்கர இயக்கம்  ……………………… வாகனங்களில் பயன்படுத்த படுகிறது 
அ )  ஒரு சில  ஆ ) பெரும்பாலான 
இ ) வெவ்வேறு  ஈ ) மிகச்சில 
விடை  ஆ ) பெரும்பாலான 
3. முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கம் ………….தன்மை அதிகம் உடையது ?
அ )  சாலை பிடிப்பு  ஆ ) சாலையில் வழுக்கல் 
இ ) வேகமாக செல்லும்  ஈ ) நிற்கும் 
விடை  அ )  சாலை பிடிப்பு 
4.மேற்கூடு நீங்கலாக பிற பாகங்களை கொண்ட தொகுப்பின் பெயர் 
அ )சேஸிஸ்  ஆ )பிரேம் 
இ ) வாகனம்  ஈ )  சஸ்பென்ஷன் அமைப்பு 
விடை  அ )சேஸிஸ்
5.முன்புற என்ஜின் நான்கு சக்கர இயக்கத்தில் எத்தனை டிப்ரன்சியல் இருக்கும் 
அ )ஒன்று  ஆ )இரண்டு 
இ )மூன்று  ஈ )நான்கு 
விடை  ஆ )இரண்டு 
6. பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தில் …….வழி அமைப்பது எளிது 
அ )ஆயில் வெளியேறும்  ஆ )காற்று வெளியேறும் 
இ )என்ஜின் புகை வெளியேறும்  ஈ )எரிபொருள் வெளியேறும் 
விடை  இ )என்ஜின் புகை வெளியேறும் 
7. சாய்வு தடையின் சூத்திரம் 
அ ) Rg = W Cos θ ஆ )Rg = W Sec θ
இ )Rg = W Sin θ ஈ ) Rg = W tan θ
விடை  இ )Rg = W Sin θ
8 ட்ராஃக்டிக் எபோர்டை நழுவ விடாமல் கடத்துவதற்கு பெயர் 
அ ) ட்ராக்சன்  ஆ )ஆக்சன் 
இ )ரியாக்சன்  ஈ ) ஆப்போசிட் ரியாக்சன்
விடை 
அ ) ட்ராக்சன்
9 புரொபல்லர் ஷாப்ட் மற்றும் யுனிவேர்சல் ஜாயிண்ட் என்பது…………. க்கும்  டிப்ரன்சியலுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் 
அ ) கியர்பாக்ஸ்  ஈ ) என்ஜின் 
இ ) மோட்டார்  இ ) கம்ப்ரஸர் 
விடை  அ ) கியர்பாக்ஸ் 
10 பிரேக் என்பது கார்களில் ………. சக்கரத்தில் பொறுத்த பட்டிருக்கும் 
அ ) ஒன்று  ஆ ) இரண்டு 
இ ) மூன்று இ ) நான்கு 
விடை 
இ ) நான்கு 
   
பகுதி ஆ  குறுவினாக்கள் 
1. சக்தி கடத்தும் அமைப்பின் வகைகள் யாவை ?

  • முன்புற என்ஜின் பின்சக்கர இயக்கம் (Front Engine Rear Wheel Drive)
  • முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கம் (Front Engine Front Wheel Drive)
  • முன்புற என்ஜின் நான்குசக்கர இயக்கம் (Front Engine Four Wheel Drive)
  •  பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கம் (Rear Engine Rear Wheel Drive)
2. கிளட்ச் என்றால் என்ன?
  • என்ஜின் திறனை தேவையான போது கடத்தவும், துண்டிக்கவும் பயன்படுவது  கிளட்ச் ஆகும் 
  • என்ஜினுக்கும் கியர்பாக்ஸ்க்கும் இடையில் கிளட்ச் பொருத்தப்பட்டிருக்கும் 
3. புரொபல்லர் ஷாப்ட் மற்றும் யுனிவேர்சல் ஜாயிண்ட் என்றால் என்ன ?
  • இது ஒரு நீண்ட ஹாலோ ஷாப்ட் ஆகும்.
  • இது கியர்பா க்ஸிற்கும் டிபரன்சியலுக்கும் இடையில் அமைக்க ப்பட் டு இருக்கும்.
  • கியர்பாக்ஸிலிருந்து திறனை பெற்று யுனிவர்சல் ஜாயிண்ட் வழியாக டிபரன்சியலுக்கு இறக்க கோணத்தில்சுழல் சக்தியை கடத்த  உதவுகிறது .
4. பிரேக் என்றால் என்ன ?
  • ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் வாகனத்தை நிறுத்துவதற்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கும் உதவுவது  பிரேக் சிஸ்டம்
  • பிரேக்குகள் மெக்கானிக்கல் இணைப்புகள் ,ஹைட்ராலிக் மற்றும் காற்று மூலம் வேலை
    செய்கின்றன.
  • இவை வாகனத்தின் நான்கு சக்கரங்களில் பொறுத்த பட்டிருக்கும் 
5. சக்கரங்கள் மற்றும் டயர்கள் எதற்கு பயன்படுகின்ற 
  • சக்கரங்கள் மற்றும் டயர்கள் வாகனத்தின் முழு எடையை தாங்க பயன்படுகின்றன 
  • வாகனத்தின் முன் அச்சு மற்றும் பின் அச்சில் பொருத்தப்படுவதால் சாலைகளில் ஏற்படும் அதிர்வுகளை தாத்தாவும் டயர்கள் மென்மையாக இயங்கவும் உதவுகிறது 
பகுதி – இ 
சிறுவினாக்கள் 
1. சக்தி கடத்தும் அமைப்பின் தேவைகள் யாவை ?
  • என்ஜினிலிருந்து கிடைக்கும்சுழல் சக்தியை பின் அச்சிற்கு கடத்தவும்,
    துண்டிக்கவும் தேவை ப்படுகிறது.
  • என்ஜின் இயங்கும் போது  சக்தி கடத்தும் அமைப் பு மென்மையாக சத்தமின்றி
    இணைந்து சக்தியை சாலையில் ஓடும் சக்கரங்களுக்கு கடத்துகிறது.
  • என்ஜினில் கிடைக்கும் சுழல் சக்தியை அதிர்வின்றி சாலையில் ஓடும் சக்கரங்களுக்கு கடத்துகிறது.
  • சாலையில் சக்கரங்களை தேவையான இழுவிசையில் இயக்க பயன்படுகிறது.
  • சாலையில் ஓடும் சக்கரங்களை பலவித வேகத்தில் இயக்க பயன்படுகிறது.

2. முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கத்தின் படத்தை வரைக 


3. காற்று எதிர்ப்பு தடை பற்றி சிறுகுறிப்பு வரைக 
சாலையில் வாகனம் செல்லும் திசைக்கு எதிராக வீசும் எதிர்காற்றும், வாகனத்தின் திசை
வேகம் காரணமாக அதன் முகப்பில் எதிர்க்கும் காற்றும் வாகனம் நகர தடையாக உள்ளன.
இதனையே காற்று எதிர்ப்புத் தடை என்று அழைக்கிரோம்.
4.சாய்வு தடை பற்றி சிறுகுறிப்பு வரைக 
  • ஒரு வாகனம் மலைப் பாதைகள் மற்றும் உயரமான பாலங்களில் செல்லும் போது  அதன் மொத்த  எடை புவி ஈர்ப்பு விசையினால் பின்னோக்கி இழுக்கப்பட்டு வாகனம் நகர எதிர்ப்பு உருவாகிறது,
  • இதனையே சாய்வுத் தடை (அல்லது) ஏற்றத்தடை என்கிறோம் 

5. தானியங்கி வாகன அடிப்படுகையின் படம் வரைக 

தானியங்கி வாகன அடிப்படுகை

பகுதி ஈ 
1. முன்புற எஞ்சின் முன்சக்கர இயக்கத்தை பற்றி படம் வரைந்து விளக்குக 

முன் சக்கர என்ஜின் முன் சக்கர இயக்கம்

  • முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கத்தில் கிளட்ச்,கியர்பாக்ஸ், மற்றும் டிபரன்சியல் ஒரே அமை ப்பாக இருக்கும் என்ஜினின் சக்தி கிளட்ச்,கியர்பாக்ஸ், டிபரன்சியல் மற் றும் சிறிய அச்சு
    மூலம் முன்சக்க ரத்திற்கு கடத்தப்படுகிறது.புரொப்பல்லர் ஷாப்ட் தேவையில்லை .
  • இரு ஜோடி கான்ஸ்டண்ட் வெலாசிட்டி யுனிவர்சல் ஜாயிண்ட்கள் முன் அச்சில் பயன்படுத்தப்படுகிறது.
  • முதல் யுனிவர்ச ல் ஜாயிண்ட் டிபரன்சிய லு க்கு அ ரு கி லு ம் மற்றொன்று ஸ்டப் அச்சுக்கு அருகிலும் இருக்கும்.
  • இவை கோணத் திற்கு ஏற்ப சக்தியை கடத்தவும், ஸ்டியரிங் திறனை சக்கரத்திற்கு கடத்தவும்
    பயன்ப டுகிறது.
  • இவ்வகை இயக்கம் நவீன வகனங்களி ல் பெரும்பான்மையாக பயன்ப டுத்தப்படுகிறது.முன் சக்கர என்ஜின் முன் சக்கர இயக்கம்
2. முன்புற என்ஜின் நான்கு சக்கர இயக்கத்தின் வேலை செய்யும் விதத்தை படத்துடன் விளக்குக 

முன்புற என்ஜின் நான்கு சக்கர இயக்க

வேலை செய்யும் விதம் 

  • என்ஜினின் சக்தி கிளட்ச், கியர்பாக்ஸ்,சிறிய அச்சு (Small Shaft) மூலம் டிரான்ஸ்பர்
    கேஸிற்கு ( Transfer Case) கடத்தப்படுகிறது,
  • டிரான்ஸ்பர் கேஸிலிருந்து இரண்டு புரோப்பல்லர் ஷாப்ட் மூலம் முன்அச்சு, பின்அச்சில் உள்ள
    டிபரன்சியலுக்கு செல்கிறது.
  • டிபரன்சியலில் இருந்து முன்பின் அச்சுகள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தி கடத்தப்படுகிறது.
  • இந்த இயக்கத்தில் அதிக இயங்குதிறன் வெளிப்படுகிறது. நீர் மற் றும் சகதியாக உள்ள சாலை களுக்கு ஏற்றது.
3.பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தின் செயல்பாட்டை படத்துடன் விளக்குக 

பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தின் செயல்பாட்டை படத்துடன் விளக்குக 

பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தின் செயல்பாடுகள்  

  • பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தில் கிளட்ச், கியர்பாக்ஸ் மற்றும் டிபரன்சியல் ஒரே
    அமைப்பாக இருக்கும்.
  • என்ஜினின் சக்தி, கிளட்ச், கியர்பாக்ஸ் டிபரன்சியல் மற்றும் சிறிய அச்சு
    மூலம் பின் அச்சிற்கு கடத்த படுகிறது .
  • இம்முறையில் என்ஜின் புகை வெளியேறும்வழி (Exhaust) அமைப்பது எளிது.
  • வாகன முன்பகுதியில்  ஓட்டுனர் இருப்பதால்  என்ஜின் கி ளட்ச் மற் று ம்
    கியர்பாக் ஸை கட்டுப்படுத்துவது கடினம்.
  • இதற்க்கு நீண்ட இணைப்புகள் (Long Linkages) தேவை .
4.தானியங்கி வாகன அடிப்படுகையின் ஏதேனும் ஐந்து பாகங்களை பற்றி விரிவான குறிப்பு வரைக 

பிரேம்
இரு நீண்ட சட்டங்கள் , பல குறுக்கு சட்டங்களுடன் ரிவட் மூலம் உறுதியாக இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த பிரே ம் வாகனத்தின் முழு எடையையும்  தாங் கும் பொ ரு ட்டு தரமான எஃகு இரும்பினால்
தயா ரிக்க ப்படுகிறது. சே ஸிஸ் பிரே ம் என்பது  வாகனத்தின் முதுகெ லும்பு போன்ற தாகும்.

என்ஜின்
வாகனம் இயக்குவதற்கு தேவையான சக்தியை என்ஜின் உற்பத்தி செய்து கொடுக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் எரி பொருளாக பயன் படுதத்ப்படுகிறது.
என்ஜின் வாகனத்தின் முன்பகுதியில் பொருத்த படுகிறது  . இது வெப்பசக்தியை இயந்திர சக்தியாக மாற்றுகிறது.
எனவே இது வாகனத்தின் இதயம் என்று அழைக்க ப்படுகிறது.

கிளட்ச்
என்ஜின் திறனை தேவையான போது கடத்தவும், துண்டிக்கவும் பயன்படும் கிளட்ச் என்ஜினுக்கும் கியர்பாக்ஸ்க்கும் இடையில் பொருத்தப்பட் டுள்ளது.
கியர்பாக்ஸ்
கியர்பாக்ஸ் பற்சக்கரப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது. வெவ்வேறு வேக நிலையில்
இயங்கக்  கூ டி ய கி யர்களை கொண்ட பெட்டியா கும். வாகனத்தின் எடை , சாலையின்
அமைப்பு ஆகியவற்றுக் கேற்ப வேகத்தை கூட்டவோ , குறைக்கவோ முடியும்
சஸ்பென்ச ன் அமைப்பு
ஸ்பிரிங், ஷாக் அப்சார்ப ர் முன்பின் அச்சுடனும் பி ரே மு டனும் இணைக்க பட்டுள்ளதால் வாகனத்தை 
சாலைகளில் ஏற்படும் அதிர்வுகளிலிருந்து காத் து மென்மையாகவும் மெதுவாகவும் இயக்க உதவுகிறது.