Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th MATERIALS

12th Bio Zoology Assignment 2021 with Answerkey (TNSCERT ) Tamil Medium

12th Bio Zoology Assignment TM:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

பனிரெண்டாம் வகுப்பு ஒப்படைப்பு 2021 உங்களுக்காக விடையுடன் கொடுக்க பட்டுள்ளது ,மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்ட இந்த விடை குறிப்புகளை நீங்கள் கீழே உள்ள PDF லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

இந்த விடை குறிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பினால் கேளே குறிப்பிடவும் ,உடனுக்குடன் தவறான விடையை மற்றயமைக்க படும்

Click Here to Download 12th Bio Zoology English medium Assignment

12th Bio Zoology Assignment 2021 with Answerkey
ஒப்படைப்பு 
வகுப்பு :12              பாடம்: உயிரி விலங்கியல்
அலகு – 1 உயிரிகளின் இனப்பெருக்கம்
பகுதி – அ  I.ஒரு மதிப்பெண் வினா 
1.கல்லீரல் புழுவின்ஸ் போரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியாலார்வாக்கள் இவ்வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன
அ) இணைவுமுறை இனப்பெருக்கம் ஆ) பிளவுமுறைஇனப்பெருக்கம்
இ) இளம்உயிரிகன்னிஇனப்பெருக்கம் ஈ) ஸ்போர்உருவாக்கம்
Answer இ) இளம்உயிரிகன்னிஇனப்பெருக்கம்

2. பின்வரும் கன்னி இனப்பெருக்கவகைகளை பொருத்துக.

A அரீனோடோக்கி 1 ஆண்/பெண்உருவாகும்முறை
B தெலிடோக்கி 2 ஆண்உயிரிஉருவாகும்முறை
C ஆம்பிடோக்கி 3 இளம்உயிரி,பங்குபெறுதல்
D பீடோஜெனசிஸ் 4 பெண்உயிரி உருவாகும்முறை
  A B C D
அ) 4 3 2 1
ஆ) 2 4 3 1
இ) 2 4 1 3
ஈ) 4 2 3 1
Answer இ 2 4 1 3
3.பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ்க்கண்ட எந்தமு றையில் நடைபெறுகிறது?
அ) கேமிட்உருவாக்கம் ஆ) எண்டோஸ்போர்உருவாக்கம்
இ) இணைதல் ஈ) சூஸ்போர்உருவாக்கம்
Answer இ) இணைதல்
4. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்
அ) பாலிலி இனப்பெருக்கம் ஆ)கன்னி இனப்பெருக்கம்
இ) பாலினப்பெருக்கம் ஈ) அமற்றும் ஆஇரண்டும்
Answer இ) பாலினப்பெருக்கம்
5. ‘முழுசேர்க்கை’ வகையிலான கருவுறுதல் நடைபெறும் உயிரினம்
அ) மனிதன் ஆ) ஆக்டினோஸ்போரியம்
இ) மோனேசிஸ்டிஸ் ஈ) டிரைக்கோநிம்ஃபா
Answer ஈ) டிரைக்கோநிம்ஃபா
6. பாரமீசியத்தில் காணப்படும் கருவுறுதல்முறை
அ) அயல் கருவுறுதல் இ) இனம்செல்சேர்க்கை
ஆ)சுயகருவுறுதல் ஈ) வெளிக்கருவுறுதல்
Answer ஆ)சுயகருவுறுதல்
7.எவ்வகை இனப்பெருக்கத்தின் மூலம் ஆண்உயிரிகள் தோற்றுவிக்கப்படுவதில்லை?
அ) இயற்கையான கன்னிஇனப்பெருக்கம் ஆ) முழுமையான கன்னி இனப்பெருக்கம்
இ) முழுமையற்றகன்னிஇனப்பெருக்கம் ஈ) மேற்கண்டஎதுவுமில்லை
Answer ஆ) முழுமையான கன்னி இனப்பெருக்கம்
8. முழுமையற்ற கன்னி இனப்பெருக்கமுறையை மேற்கொள்ளும் உயிரி
அ) நாடாப்புழு இ) மொழுக்கு
ஆ)கடல் அர்ச்சின் ஈ) தேனீக்கள்
Answer ஈ) தேனீக்கள்
9. “வளைதசைபுழுக்களில்” மேற்கொள்ளப்படும் கன்னி இனப்பெருக்கமுறை
அ) இளம் உயிரிகள்ளிஇனப்பெருக்கம் ஆ)செயற்கையானகன்னிஇனப்பெருக்கம்
இ) முழுமையானகன்னி இனப்பெருக்கம் ஈ) முழுமையற்றகன்னிஇனப்பெருக்கம்
Answer ஆ)செயற்கையானகன்னிஇனப்பெருக்கம்

10 ஒரு உயிரியல் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் வளர்ச்சிக்காலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

அ) இளம் உயிரிநிலை ஆ) இனப்பெருக்கநிலை
இ) முதிர்ச்சிநிலை ஈ) முதுமைநிலை
Answer அ) இளம் உயிரிநிலை

பகுதி ஆ 

II.குருவினா .

1.பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும்சேய் என் “பிரதி” அழைக்கப்படுகிறது?

பிரதி :- மரபு மாறுபாடுகள் இன்றி காணப்படுதல் 

சேய் உயிரிகள் அனைத்தும் பெற்றோர் பண்புகளில் ஒத்து காணப்படுவதால் ,பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ‘பிரதி’ என்றழைக்கப்படுகிறது 

   
2. இனப்பெருக்கமுறைகளின் அடிப்படைப்பண்புகள்யாவை?
  • டி.என்.ஏ இரட்டிப்பதால் 
  • ஆர்.என்.ஏ உற்பத்தி 
  • புரத உற்பத்தி 
  • செல் பிரிதல் 
  • வளர்ச்சி 
  • இனப்பெருக்க அலகுகள் உருவாக்கம் 
  • கருவுறுதல் 
3.இணைவிகள்என்றால் என்ன?

இணைவு முறை இனப்பெருக்கம் என்னும் முறையிலும் , ஒரே சிற்றினத்தை சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் நடைபெறுகிறது 

இவ்விணைத்தலில் ஈடுபடும் உயிரிகள் ‘இணைவிகள்’ என்று அழைக்கப்படுகின்றன 

4. இளம்செல்சேர்க்கை (பீடோகேமி) – வரையறு
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகபிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் செயல் ‘இளம் செல் சேர்க்கை எனப்படும் 
5.கன்னிஇனப்பெருக்கம்என்றால்என்ன? கண்டறிந்தவர்யார்?

அண்ட செல்லானது கருவுறாமை லேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு கன்னி இனப்பெருக்கம் என்று பெயர் .
கன்னி இனப்பெருக்கம் இருவகைப்படும். ]

  • இயற்கையான கன்னி இனப்பெருக்கம்
  • செயற்கையான கன்னி இனப்பெருக்கம் .
  • இது 1745 சார்லஸ் என்பவர் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது

பகுதி ஆ 

II. குருவினா 

1. இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை வரையறு.

இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்

  • முழுமையான கன்னி இனப்பெருக்கம்
  • முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம்

முழுமையான கன்னி இனப்பெருக்கம்

  • சில விலங்குகளில் இது பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் நடை பெறுவதில்லை
  • மாறாக அவை முழுமையான கன்னி இனப்பெருக்கம் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன
  • விலங்குகளில் உயிரிகள் காணப்படுவதில்லை உயிர்கள் மட்டுமே காணப்படுகின்றன
  • முமுமையற்ற இனப்பெருக்கம் :
    முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் ,சில விலங்குகளில் பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறுகின்றன.
  • எடுத்துக்காட்டு: தேனீக்களில் கருவுற்ற முட்டை தனித்தனியாகவும், வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்ச்சி அடைகின்றன.
  • அதேவேளையில் கருமுட்டை ஆண் தேனீக்களாக வளர்ச்சி அடைகின்றன வளர்ச்சி அடைகின்றன
2. வெளிக்கருவுறுதல், உட்கருவுறுதல்வேறுபடுத்துக

வெளிக்கருவுறுதல்

கருவுறுதலின் நிகழ்வு இடத்தைப் பொருத்து ஒருங்கிணைவு இரண்டுவகை பெண் உயிரியின் உடலுக்கு வெளியில் ஆண் பெண் என செல்கள் இணைந்ததால் அவை வாழும் நீர்வாழ் இடத்தில் நிகழ்ந்தால் அவை கருவுறுதல் எனப்படும்.
எடுத்துக்காட்டு கடற்பஞ்சுகள் மீன்கள்

உட்கருவுறுதல்
இருவாழ்விகள் ஆண் பெண் என செல்களின் இணையானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகை கருவுறுதல் கருவுறுதல் என்று அழைக்கப்படுகிறது

எடுத்துக்காட்டு ஊர்வன பறவைகள் பாலூட்டிகள்

3. குறிப்புவரைக: 1) மாறுபட்டசெல்சேர்க்கை, 2) ஒத்தசெல்சேர்க்கை

அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை மாறுபட்ட செல் சேர்க்கை எனப்படும் 

ஒத்த செல் சேர்க்கை 

அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனசெல்கள் ஒன்றிணைந்தால் ஒத்த செல் சேர்க்கை எனப்படும் 

எடுத்துக்காட்டு : மோனோசிஸ்டிஸ் 

4. உயிரிகளின் வாழ்க்கைச் சுழற்சி நிலைகளை வரையறு

உயிரிகள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சியில் மூண்டு நிலைகளை கொண்டுள்ளன அவை 

இளம் உயிரி நிலை 

ஒரு உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்சிதை காலம் இளம் உயிரி நிலை எனப்படும் 

இனப்பெருக்க நிலை 

ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழி தோன்றல்களை உருவாக்கும் செயல்களை செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும் 

1.பருவகால இனச்சேர்க்கையாளர்கள் : ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் இனச்சேர்கையில் ஈடுபடும் உயிரிகள் 

எடுத்துக்காட்டு தவளைகள் ,பள்ளிகள் ,மான்கள் 

2. தொடர்தியான இனச்சேர்க்கையாளர்கள் :- பால் முதிர்ச்சி காலம் முழுவதும் இனச்சேர்கையில் ஈடுபடும் உயிரிகள் 

எடுத்துக்காட்டு ,தேனீக்கள் ,வளர்ப்பு ,பறவைகள் முயல்கள் 

முதுமை நிலை 

இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல் அமைப்பிலும் செயல் பாடுகளிலும் சிதவு ஏற்படாத் தொடங்கும் நிலை முதுமை நிலை எனப்படும் 

5. “ஸ்போர்உருவாக்கம்” – குறிப்புவரைக.
  • அமீபா களில் சாதகமற்ற சூழ்நிலைகளில் போர் உருவாக்க முறையில் வேறு முறையை உருவாக்காமல் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றன
  • உட்கரு பல சிறு துண்டுகளாகவும் அல்லது கிரோமடின் தொகுப்புகளாக உடைகிறது பின் ஒவ்வொரு துண்டும் சுற்றிலும் கரு உருவாகிறது
  • அவை பின்னர் சைட்டோபிளாசம் சூழப்பட்ட பின் நம்மைச் சுற்றிலும் ஓர் உரையை உருவாக்குகிறது
  • ஒவ்வொன்றிலும் ஒரு இளம் அமீபா வெளிப்படுகின்றது

பகுதி – ஈ 

IV.பெருவினா 

1. உயிரிகளில் நடைபெறும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு (கருவுறுதலை) செயல்முறையை பட்டியலிட்டு ஏதேனும் ஐந்து முறைகளை விளக்குக.

1.சுய கருவுறுதல்

ஒரு செல்லில் இருந்து அல்லது ஒரே உயிரிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன எடுத்துக்காட்டு பாரமீசியம்

2.அயல் கருவுறுதல்

ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்கள் இருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் என செல்கள் ஒன்றிணைந்து கரு முட்டை உருவாகிறது எனவே இது இரு பெற்றோர் வகையானது

எடுத்துக்காட்டு ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி உயிர்கள் காணப்படுதல்

3.முழுசேர்க்கை 

கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிர்களை இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிர்களை தோற்றுவிக்கின்றன

எடுத்துக்காட்டு டிரைக்கோநிம்பா 

4.இளம்செல் சேர்க்கை முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுக பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் இன செல்கள் போன்று செயல்பட்டு ஒருங்கிணைந்து புதிய உயிரியை தோற்றுவிக்கும் செயல்

ஒத்த செல் சேர்க்கை

அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இன செல்கள் ஒருங்கிணைந்த எனப்படும்

எடுத்துக்காட்டு மொனோசிடீஸ்

2.கன்னி இனப்பெருக்கம் – வரையறு. அதன்வகைகளை தொகுத்து எழுதுக.

கன்னி இனப்பெருக்கம்:- 

அண்ட செல்லானது ,கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு கன்னி இனப்பெருக்கம் என்று பெயர் 

இது 1745 இல் சார்லஸ் பானட் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது 

கன்னி இனப்பெருக்கம் இருவகைப்படும் 

  1. இயற்கயான கன்னி இனப்பெருக்கம் 

சில விலங்குகளில் வாழ்க்கை சுழற்சியில் கன்னி இனப்பெருக்கம் தொடர்ச்சியாக ,நிலையாக மற்றும் இயற்கையாக நடை பெறுகிறது , இது இயற்கையான கன்னி இனப்பெருக்கம் எனப்படும் 

அ . முழுமையான கன்னி இனப்பெருக்கம் 

இவ்விலங்குகளில் ஆண் உயிரிகள் காணப்படுவதில்லை பெண் உயிர்கள் மட்டுமே உள்ளன 

ஆ .முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் 

பாலினப்பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறுகின்றன 

எடுத்துக்காட்டு :- கருவுற்ற முட்டை ராணி தேனியாகவும் ,வேலைக்கார தேனியாகவும் வளர்ச்சியுறுகின்றன 

2.செயற்கையான கண்ணி இனப்பெருக்கம் 

கருவுறாத அண்டம் இயற்பியல் (அல்லது ) வேதியியல் தூண்டல்கள் மூலம் தூண்டப்படட்டு முழு உயிரியாக வளர்ச்சியடைகின்றன 

எடுத்துக்காட்டு :- வளைசதை புழுக்கள் மற்றும் கடல் அர்ச்சின்