Site icon Tamil Solution

12th tamil assignment 2 answers 2021 pdf

12th tamil assignment 2 answers 2021 pdf 12th Tamil 2nd Assignment (With Answers) July 2021 Tamilnadu Stateboard 

ஒப்படைப்பு

வகுப்பு:12

 பாடம்: பொதுத்தமிழ்

இயல் -2 (பெய்யெனப் பெய்யும் மழை)

                            பகுதி – அ


ஒரு மதிப்பெண் வினா

1.பொருத்துக

அ ) குரங்குகள் – 1) கன்றுகளைத் தவிர்த்தன

ஆ)விலங்குகள் -2 மரங்களிலிருந்து வீழ்ந்தன

இ)பறவைகள் – 3) குளிரால் நடுங்கின

ஈ ) பசுக்கள்  – 4 ) மேய்ச்சலை மறந்தன

அ) 1,3,4,2                    ஆ) 3,1,4,2 

இ) 3,4, 2, 1                 ஈ)2,13,4

விடை : இ) 3 , 4 , 2 , 1


2. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

அ சூரிய ஒளிக்கதிர்

ஆ) மழை மேகங்கள்

இ) மழைத்துளிகள்

ஈ) நீர்நிலைகள்

விடை : இ) மழைத்துளிகள்


3. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்

அ ) பருவநிலை மாற்றம்

ஆ) மணல் அள்ளுதல்

இ ) பாறைகள் இல்லாமை

ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்

விடை :ஆ ) மணல் அள்ளுதல்


4, பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன – தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு

அ ) வினைத்தொகை

ஆ) உரிச்சொல் தொடர்

இ) இடைச்சொல் தொடர்

ஈ ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை : ஈ ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


5. தமிழில் திணைப்பாகுபாடு —— அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ பொருட்பெயர்

ஆ) சொற்குறிப்பு

இ) தொடர்குறிப்பு

ஈ) எழுத்துக்குறிப்பு

விடை : அ ) பொருட்பெயர்


6 ) ‘ உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே ‘ இந்நுற்பா இடம்பெற்ற இலக்கண நூல்……

அ) நன்னூல்              ஆ) அகத்தியம்

இ)தொல்காப்பியம்  ஈ ) இலக்கண விளக்கம்

விடை : இ ) தொல்காப்பியம் 


7. யார்? எது? ஆகிய வினைச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே —–  —–

அ ஃறிணை, உயர்திணை

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) விரவத்திணை, அஃறிணை

ஈ)விரவுத்திணை, உயர்திணை

விடை : ஆ ) உயர்திணை , அஃறிணை


8. பிறகொரு நாள் கோடை’ என்னும் இக்கவிதை எந்தத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அ)இன்று         ஆ) நீர்வெளி

இ) அய்யப்ப மாதவன் கவிதைகள்

 ஈ)மழைக்குப் பிறகும் மழை

விடை : இ ) அய்யப்ப மாதவன் கவிதைகள்


9 ) உலக சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படும் தினம் எது?

அ) ஜூன் 2   ஆ  ) ஜூன் 5 

இ ) ஜூன் 6          ஈ) ஜூன் 8

விடை : ஆ ) ஜூன் 5


10. ‘முதல் கல்’ என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?

அ ) பூமணி              ஆ) உத்தமசோழன்

இஜெயமோகன்         ஈ ) சுஜாதா

விடை  : ஆ ) உத்தம சோழன்


பகுதி – ஆ

குறுவினா

1 ) ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?

2 மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாக சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் . இரு தொடர்களாக்குக.


3) ‘ நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக?


4 ) இனநிரை பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக?

  இனநிரை = இனம் + நிரை 


5. வாகைத்திணை என்றால் என்ன?


 பகுதி – இ

III ) சிறுவினா

6 ) வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?


7. மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.


8 ) பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.


8. ‘வையகம் பனிப்ப’ எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை எழுதுக?

‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க*

-நக்கீரர் 

பாவகை – நேரிசை ஆசிரியப்பா


10. கூதிர்ப்பாசறை துறையைச் சான்று தந்து விளக்குக.

துறை : கூதிர்ப்பாசறை

கூதிர்ப்பாசறை – போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.

எ.கா : குன்று  குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்

பாடலின் பொருள்

துறைப்பொருத்தம் :

போர் மேற்சென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீட்டில் நிலவும் வாடை மிகுதியால் ஆயர்கள் , பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறுவதால்  இப்பாடல் கூதிர்ப்பாசறைக்குப் பொருத்தமாயிற்று.


 பகுதி – ஈ

IV நெடுவினா

11. நெகிழி தவழ்த்து நிலத்தை நிமிர்த்து என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து: நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை ஒரு கலந்துரையாடல் நிகழ்வு மூலம் காணலாம்.

நலன் விரும்பி  :  ஐயா வணக்கம்!

பசுமைதாசன் :  வணக்கம் விரும்பி!

ந.வி :  அய்யா அதோ நல்லாளும், குட்டுவனும் வருகின்றனர். ஏதாவது பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ப.தாசன் : கண்டிப்பாகக் காலம் செல்வதைப் பார்த்தால் நமக்கு நிற்க நேரம் இருக்காது போலிருக்கிறது.

குட்டுவன் : சரியாகச் சொன்னீர்கள்

நல்லாள் : அய்யா! அரசு நெகிழிக்கு சனவரி – 1 முதல் தடை விதித்துள்ளதே!

ப.தா :ஆம் கண்பாதி கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

ந.வி : அது என்ன? கண் பாதி கெட்ட பிறகு………

ப.தா : நெகிழியால் எத்தனை பாதிப்புகள்! நெகிழியில் காய்கள் பழங்கள் இவற்றைப் போட்டு இறுகக் கட்டி வைத்தால் எல்லாம் அழுகியும், அவிந்தும் போகும்.

ந. வி :  நான் கூட ஒரு முறை ஒரு நெகிழியில் காயும், ஒரு நெகிழியில் கனியும் வாங்கிச் சென்றேன்.

ப.தா : பிறகு என்னவாயிற்று.

ந.வி : காய்கள் அவிந்துபோயின; பழங்கள் அழுகிப் போயின.

ப.தா : நெகிழியின் உள்ளே காற்று உள் செல்லாததே இதற்குக் காரணம்.

குட்டுவன் : நான்கூட ஒருமுறை எங்கள் வீட்டில் அம்மா அழுகிய காயும், கனியும் வைத்த நெகிழியைத் தூக்கிப் போட்டதைப் பார்த்தேன்.

ப.தா : பட்டால் தான் நமக்குத் தெரியும்

ந.வி : நாம் பொருள்களை நெகிழியில் வாங்கி வருகிறோம். பொருள்களை எடுத்துக் கொண்டு தூக்கி எறிகிறோம் அல்லது, குப்பைத் தொட்டியில் போடுகிறோம். அவற்றால் பாதிப்பு இல்லையா? ஐயா!

ப.தா : பாதிப்பு ஏராளம்! நிலம், நீர், காற்று இத்தனையும் மாசடைந்து நம் சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது.

ந.வி : சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா!

ப.தா : சொல்கிறேன் கேளுங்கள். நிலத்தில் குவிந்து கிடக்கும் நெகிழிகள் மண்ணில் சிறிது சிறிதாகக் கலந்து மண்வளத்தைப் பாதிக்கிறது. அதனால் பயிர்கள் செழிப்பாக வளர்வதில்லை. மழை நீரில் கலப்பதால் நீர் நச்சுத் தன்மை பெற்று உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. காற்றில் கலப்பதால் நாம் நுகரும் காற்று மாசடைந்து உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. மொத்தத்தில் மனிதனின் சுற்றுப்புறம் மாசு நிறைந்ததாக மாறிவிடுகிறது.

குட்டுவன் :மருத்துவக் கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்படுகின்றனவே

ந.வி :ஆற்றங்கரை, குளக்கரை எனப் பலஇடங்களில் சந்தடி இல்லாமல் கொட்டிச் செல்கின்றனர். அவை சாதாரண நெகிழிகளைவிடப் பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மருத்துவக் கழிவுகளில் நச்சுத் தன்மை அதிகமாக உள்ளன. மருத்துவம் சுகாதாரத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவக் கழிவுகளோ சுகாதாரத்தைக் கெடுக்கிறது.

ந.வி : இதற்குத் தீர்வு என்ன ஐயா!

ப.தா : முதலில் நெகிழிகள் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்; சணலால் உருவாக்கும் பைகளைப் பயன்படுத்தலாம். மெல்லிய துணிப்பைகளைக் கூடப் பயன்படுத்தலாம்.

ந.வி : மனிதன் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடியவன். அவன் நெகிழி பயன்பாடு என்னும் பழக்கத்திற்கு விடுதலை தர வேண்டும்.

ப.தா : நன்றாகச் சொன்னாய் விரும்பி. நான் சொல்ல வேண்டியதை நீ

சொல்லிவிட்டாய்! நேரம் கடந்துவிட்டது மீண்டும் சந்திக்கலாம்,

மற்றவர்கள் : நன்றி அய்யா! நல்லது அய்யா! சந்திப்போம்! சிந்திப்போம் !


12. பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு  நலத்தை விவரிக்க.

மருதனின் பண்புநலம்

முன்னுரை: 

மருதனின் சிந்தனை! 

மருதனின் மனத்தில் உதித்த சிந்தனை

மருதன் போட்ட மனு: 

மனம் சோர்ந்த மருதன்

செயல்வீரன் மருதன்: 

முடிவுரை

‘கருமத்தைச் செய் பலனை எதிர்பாராதே’ 

என்கிறது கீதை. கபிலர் அகவலோ

“ஒன்றே செய்

ஒன்றும் நன்றே செய்

நன்றும் இன்றே செய்

இன்றும் இன்னே செய்”

12th tamil assignment answers 2021 pdf
12th assignment answers 2021 pdf tamil medium
12th tamil assignment answer key 2021
12th tamil assignment 3 answers 2021 pdf
12th maths assignment answers 2021 pdf
12th assignment answers 2021 pdf english medium
12th tamil assignment unit 3 answers 2021 pdf
11th tamil assignment answer key 2021 unit 3

Exit mobile version