Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

6th 7th 8th Materials

6th Science Assignment 2021 with Answerkey (TNSCERT ) Tamil Medium

6th Science Assignment TM:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

பனிரெண்டாம் வகுப்பு ஒப்படைப்பு 2021 உங்களுக்காக விடையுடன் கொடுக்க பட்டுள்ளது ,மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்ட இந்த விடை குறிப்புகளை நீங்கள் கீழே உள்ள PDF லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

இந்த விடை குறிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பினால் கேளே குறிப்பிடவும் ,உடனுக்குடன் தவறான விடையை மற்றயமைக்க படும்

Click Here to Download 6th Tamil Assignment

6th Science Assignment Answer key

6th Science Assignment Answer key

ஒப்படைப்பு

வகுப்பு: 6                                                                     பாடம்: அறிவியல்

அலகு-1
பகுதி -அ
1.அளவீடு என்பது______, _____ பகுதிகளைக் கொண்டது
அ.தரம் மற்றும் அளவு ஆ.செயல் மற்றும் கருவி
இ.துல்லியம் மற்றும் பிழை  ஈ.எண் மற்றும் அலகு 
விடை ஈ.எண் மற்றும் அலகு
2.நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே_______
அ.நிறை ஆ.நீளம்
இ.எடை ஈ .அடர்த்தி
விடை
இ.எடை
3.பரப்பளவின் SI அலகு
அ.m3 ஆ m2 
இ .-m ஈ . km 
விடை ஆ m2 
4.மீட்டர் அளவு கோலின் தடிமனை ______ஆல் அளக்கலாம்
அ . mm  ஆ. cm 
இ . Meter  ஈ . Km 
விடை
அ . mm 
5. மில்லியின் துணைப் பன்மடங்கு
அ.1/10 ஆ. 1/100
இ . 1/1000 ஈ .1/10,000
விடை இ . 1/1000
6.தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிட கருவி பயன்படுகிறது
அ. அம்மீட்டர்  ஆ. தெர்மோமீட்டர்
இ.வேகமானி ஈஓடோமீட்டர்
விடை ஈஓடோமீட்டர்
7. ஒரு நேனோ என்பது  
அ . 10^-3  ஆ . 10^-6 
இ .10^-9  ஈ . 10^-12 
விடை இ .10^-9 
8. வளைகோட்டின் நீளத்தை _______ பயன்படுத்தி அளக்கலாம்.
அ. அளவிடும் நாடா ஆ .கவை அல்லது அளவிடும் நாடா
இ.கவை அல்லது அளவிடும் நாடா ஈ.கவை மற்றும் அளவிடும் நாடா இரண்டும்
விடை ஈ.கவை மற்றும் அளவிடும் நாடா இரண்டும்
9.ஒரு டன் என்பது–கிலோகிராம்  
அ.100  ஆ. 1000 
இ.10.  ஈ.0.1
விடை ஆ. 1000 
10.முற்காலத்தில் மக்கள் காலத்தை அளவிடப் பயன்படுத்திய கருவி
அ. மணற்கடிகாரம் ஆ. மின்னணுக் கடிக்காரம் 
இ அணுக்கடிகாரம் ஈ. ஊசல் கடிகாரம் 
விடை அ. மணற்கடிகாரம்

II. குறு வினா:

1. அளவீடு -வறையறு?

தெரிந்த ஒரு அளவுடன், தெரியாத ஒரு அளவை ஒப்பிடுவது அளவீடு எனப்படும். அளவீடு என்பது எண்மதிப்பு மற்றும் அலகு என இரண்டு பகுதிகளைக் கொண்டது

2. நிறை வறையறு?
  • நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும்.
  • நிறையின் SI அலகு கிலோகிராம் ஆகும்.
3ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?
  • ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை ஒரு அளவிடும் குவளை மற்றும் நீரைக் கொண்டு அளவிடலாம்,
4. நீளம் -வறையறு?
  • ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும்
5. மின்னனு தராசின் பயன் யாது?
  • உணவு. மளிகைப் பொருள்கள், ஆபரணங்கள் மற்றும் வேதிப் பொருள்களின் துல்லியமான எடையைக் கணக்கிட மின்னணுத் தராசு எனும் கருவி பயன்படுகிறது.

பகுதி – இ

III. பெரு வினா
1. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

வளைகோட்டின் நீளத்தை அளவுகோல் அல்லது அளவுநாடாவைப் பயன்படுத்தி அளவிடுதல்:

  •  ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைந்தேன், அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைத்தேன். கம்பியானது வளைகோட்டின் அனைத்துப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்தேன். வளைகோட்டின் தொட புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறித்தேன். இப்பெ கம்பியை நேராக நீட்டினேன். குறிக்கப்பட்ட தொடக்கப் புள்ளிக்கும். புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் அல்லது அளவுநாட கொண்டு அளவிட்டேன். இதுவே வளைகோட்டின் நீளமாகும். 2. வளைகோட்டின் நீளத்தை கவையைப் பயன்படுத்தி அளவிடுதல்:ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைந்தேன். அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைத்தேன். கம்பியானது வளைகோட்டின் அனைத்துப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்தேன். வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறித்தேன். இப்பொழுது கம்பியை நேராக நீட்டினேன். குறிக்கப்பட்ட தொடக்கப் புள்ளிக்கும். முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் அல்லது அளவுநாடாவைக் கொண்டு அளவிட்டேன். இதுவே வளைகோட்டின் நீளமாகும். 
2. வளைகோட்டின் நீளத்தை கவையைப் பயன்படுத்தி அளவிடுதல்:
  • ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரைந்தேன். கவையின் இரு முனைகளையும் 0.5 செ.மீ. அல்லது 1 செ.மீ. இடைவெளி உள்ளவாறு பிரித்தேன். வளைகோட்டின் ஒரு முனையில் கவையை வைத்து அளவீட்டைத் தொடங்கினேன். அவ்வாறு மறுமுனை வரை அளந்து குறித்திட்டேன். வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரித்திட்டேன். குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவீட்டேன். 
  • வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை × ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம். இதுவே வளைகோட்டின் நீளமாகும்.


பகுதி – ஈ
IV. செயல்பாடு
1.துணி காயப்போடும் ஹேங்கர். 2 காகித குவளை மற்றும் நூல் போன்றவற்றை பயன்படுத்தி பொது தராசு ஒன்றினை தயாரித்து அவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.