Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

6th 7th 8th Materials

7th Science Tamil Medium Assignment 2021 with Answerkey (TNSCERT )

7th Science Tamil Medium Assignment 2021 with Answerkey (TNSCERT ):- For 7th standard students we shared this full science assignment for Tamil medium students, All 7th standard students are advised to submit the assignment on time.

ஒப்படைப்பு


வகுப்பு:-7 பாடம் :அறிவியல்

பகுதி -ஆ


I ஒரு மதிப்பெண் வினாக்கள்

1 மீட்டர் என்பது யாது?

அ ) 50 சென்டிமீட்டர்
ஆ) 100 சென்டிமீட்டர்
இ) 150 சென்டிமீட்டர்
ஈ) 200 சென்டி மீட்டர்

Answer: ஆ) 100 சென்டிமீட்டர்

2 அடர்த்தியில் SI அழகு என்ன ?

அ ) கிலோகிராம் / மீட்டர் 3
ஆ)கேண்டிலா
இ) கெல்வின்
ஈ) செல்சியஸ்

Answer : அ ) கிலோகிராம் / மீட்டர் 3

3 இரும்பு குண்டு பாதரசத்தின் என்னவாகும் ?

அ ) மூழ்கும்
ஆ) கரையும்
இ) மிதக்கும்
ஈ) எதுவும் இல்லை

Answer : இ) மிதக்கும்

4 பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரி தொலைவு எவ்வளவு ?

அ ) ஒளி ஆண்டு
ஆ)ஒளியின் வேகம்
இ) ஒரு வானியல் அலகு
ஈ) எதுவுமில்லை

Answer : இ) ஒரு வானியல் அலகு

5. 1 செண்ட் என்பது எத்தனை சதுர அடிக்கு சமம் ?

அ ) 439 சதுர அடி
ஆ)436 சதுர அடி
இ) 643 சதுர அடி
ஈ) 433 சதுர அடி

Answer : ஆ)436 சதுர அடி

6. லாரியில் உள்ள கரும்பை எடைபோட பயன்படுத்தும் அலகு யாது ?

அ ) நிறை
ஆ)கிலோ
இ) டன்
ஈ) கிலோகிராம்

Answer: இ) டன்

7. டீ.எம்.சி என்பது எதை அளவுப்படுகிறது ?

அ ) நீரின் கனஅளவு
ஆ)நிலத்தின் பரப்பு
இ) நீரின் கொதிநிலை
ஈ) நீரின் நிறை

Answer : அ ) நீரின் கனஅளவு

8. ஒரு பவுன் தங்க மோதிரம் செய்ய தேவைப்படும் தங்கத்தின் அளவு ?

அ ) 7 கி
ஆ) 8 கி
இ) 9 கி
ஈ) 10 கி

Answer: ஆ) 8 கி

9. நிலங்களை எந்த அளவு கொண்டு அளவிடப்படுகிறது

அ ) குவிண்டால்
ஆ)ஹெக்டேர்
இ) மீட்டர்
ஈ) டன்

Answer: ஆ)ஹெக்டேர்

10 பாதரசத்தின் அடர்த்தி எவ்வளவு ?

அ ) 1000 கி.கி / மீ3
ஆ) 13600 கி.கி / மீ3
இ) 10500 கி.கி / மீ3
ஈ) 10300 கி.கி / மீ3

Answer : ஆ) 13600 கி.கி / மீ3


பகுதி – ஆ

II குருவினா

1.பரப்பளவு என்றால் என்ன ?

பொருள் ஒன்றின் மேற்புறப் பகுதியின் அளவு அதன் பரப்பளவு எனப்படும் ,பரப்பளவில் SI அலகு மீட்டர் 2 ஆகும் .


2.அடர்த்தி என்றால் என்ன

ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு பருமனில் அப்பொருள் பெற்றுள்ள நிறை என்று வரையறுக்கப் படுகிறது ,அடர்த்தியில் SI அலகு கி.கி / மீட்டர் 3


3.அலைவு நேரம் என்றால் என்ன ?

ஒரு முழு அலைவிற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம் எனப்படும்


4.தனிஊசல் என்றால் என்ன?

கெட்டியான சிறிய உலோகக் குண்டினை மேட்சியற்ற நூலினால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பை தனி ஊசல் எனப்படும்


5. வீச்சு என்றால் என்ன?

ஓய்வு நிலையில் இருந்து குண்டானது இழுத்து விடப்படும் தொலைவு வீச்சு எனப்படும்


பகுதி – இ

III பெருவினா

1.தனி ஊசல் செயல்படும் விதத்தை படத்துடன் விளக்குக

  • கெட்டியான சிறிய உலோகக் குண்டினை மீட்சியற்ற நூலினால் காட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனி ஊசல் எனப்படும்
  • குண்டானது ஒருபுறம் சற்று இழுத்து விடப்படும் பொது அது முன்னும் பின்னும் அலைவுறும்
  • குண்டானது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்று மீண்டும் அதே முனைக்குத் திரும்பினாள் அது ஓர் அலைவு எனப்படும்
  • ஒரு முழு அழிவிற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம் எனப்படும்
  • ஊசல் தொங்கவிடப்படும் புல்லுக்கும் ,குண்டின் ,மையத்திற்கும் இடைப்பட்ட தூரம் ஊசலின் நீளம் எனப்படும்
  • ஓய்வு நிலையில் இருந்து குண்டானது இழுத்துவிடப்படும் தொலைவு வீச்சு எனப்படும்

பகுதி – ஈ

III செயல்பாடு