Site icon Tamil Solution

9முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் (NMMS-http://www.dge.tn.gov.in/) விண்ணப்பம்

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெற போட்டி தேர்விற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ,விண்ணப்பத்தை எப்படி டவுன்லோட் செய்வது போன்றவற்றை இந்த பக்கத்தில் படி படியாக விளக்கி கூறியுள்ளோம் ,மாணவர்கள் இந்த பகுதியில் கொடுக்க பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து மார்ச் மாதம் 5ம் நாள் நடை பெரும் தேர்வில் வெற்றி பெற்று மாதம் ஆயிரம் ரூபாய் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

மாதம் ஆயிரம் ரூபாய் (ரூ 1000)உதவி தொகை

தற்போது எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மத்திய அரசு நடத்தும் இந்த NMMS 2022 தேர்வை எழுதுவதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதாவது அவர்கள் 9ஆம் வகுப்பு முதல் முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்க உதவித்தொகையாக மாதம் ரூபாய் 1000 கிடைக்கும்.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வு 2022 – NMMS 2022

National Means Cum Merit Scholarship Scheme Examination (NMMS-2022) தேர்வு வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது ,இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை கிடைக்கும் .

இந்த உதவி தொகையை பெற விரும்பும் மாணவர்களது பெற்றோர் ஆண்டுக்கு 1,50,000 (ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேல் )இருத்தல் கூடாது

National Means Cum Merit Scholarship Scheme Examination Details

தேர்வின் பெயர் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வு 2022
Name Of Examination National Means Cum Merit Scholarship Scheme Examination
தேர்வு நடைபெறும் தேதி மார்ச் 5 2022
கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தற்போது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள் மட்டும்
அரசு பள்ளி /அரசு உதவி பெரும் பள்ளிகள் /மாநகராட்சி பள்ளிகள் ,நகராட்சி பள்ளிகள் ,ஊராட்சி பள்ளிகள்
விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50
விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடங்கும் தேதி 12.01.2022
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 27.01.2022
விண்ணப்ப இணையை முகவரி http://www.dge.tn.gov.in/
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய https://apply1.tndge.org/dge-notification/NMMS

எவ்வாறு விண்ணப்பிப்பது

Step-1:- மேலே கொடுக்க பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய வேண்டும்

Step-2:- மாணவரது பெயர் ,பாலினம் ,பிறந்த தேதி ,பயிற்றுமொழி ,போன்றவற்றை நிரப்ப வேண்டும்

Step-3:- வகுப்பினம் ,வசிப்பிடம் ,மாற்றுத்திறனாளி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

Step-4:- வீட்டு முகவரி ,பெற்றோரின் விவரங்கள் ,பெற்றோரின் கல்வி தகுதி ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேணும்

Step-5:- மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி என்னை கட்டாயம் இணைத்து மாணவர் மற்றும் பெற்றோர் கையொப்பமிடவேண்டும்

Step-6:- மாணவரது சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி தேர்வு கட்டணமான ஐம்பது ரூபாயுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்தில் குறிக்கப்பட வேண்டிய முக்கிய தகவல்கள்

Faq

ஈமெயில் முகவரி கண்டிப்பாக தேவையா

ஆம் ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு தனியாக தொடர்பு கொள்ள உதவும்

NMMS தீவுக்கு விண்ணப்ப கட்டணம் எவ்வளவு

ரூபாய் 50 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தொகை திட்ட தேர்வு என்று நடைபெறுகிறது

மார்ச் 2022 ஐந்தாம் தேதி நடைபெறுகிறது

Exit mobile version