எப்படி இருக்கு 'காத்துவாக்குல ரெண்டு காதல்'?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகன் பாத்திரம் மட்டுமின்றி பல வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் அதிகாலையிலேயே திரையரங்குகள் சென்று படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்து பதிவிட்டுள்ளனர்.

ரசிகர்களின் கருத்துப்படி ஒருமுறை பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படம் என்றும்

அம்சமான முதல் பகுதி வர வர தேய்த்து சுவாரசியத்தை இழக்கிறது என்றும்

சமந்தா நயன்தாரா விற்க்காக பார்க்க நினைத்தால் ஏமாற்றமும் ,விஜய் சேதுபதிக்காக பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது

மொத்தத்தில் திரையரங்கில் கண்டு கழிக்க ஏதுவான படம் இதுவாகும்

திரையில் காண சுவாரசியமான படங்கள் எதுவும் இல்லாத இந்த காலத்தில் இந்த படத்தை திரையரங்கில் காணாமல் விட்டுவிட வேண்டாம் ரசிகர்களே