Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

Alagappa University Online Exam 2022 Step by Step Guide

Alagappa University Online Exam 2022 Step by Step Guide:- அழகப்பா பல்கலைக்கழகத்தின் நவம்பர் 2020 1 செமஸ்டர் தேர்வுகள்  ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வுகள் 1.2 2022 முதல்  தொடர்ந்து நடைபெறும்.மாணவர்கள் இந்த ஆன்லைன் தேர்வை எவ்வாறு எழுத வேண்டும், வினாக்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது, ஆன்லைன் தேர்வு முறைகள் எழுதிய வினாத்தாள்களை எவ்வாறு சமர்ப்பிப்பது, போன்றவற்றை இந்தக் கட்டுரையில் விளக்கமாக நாம் பார்க்கலாம்

Alagappa University Online Exam 2022 Step by Step Guide

How To download Alagappa University Online Exam Question Paper

வினாத்தாள்களை டவுன்லோட் செய்ய அழகப்பா பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தின் வலதுபுறத்தில் வாட்ஸ் நியூ என்ற பகுதி உள்ளது அதன் அடிப்பகுதியில் நவம்பர் 2021 ஆன்லைன் தேர்வு என்ற பகுதி இருக்கும் அந்தப் பகுதியை கிளிக் செய்து ஆன்லைன் தேர்வு வழி பகுதிக்கு செல்ல வேண்டும்

Alagappa University Online Exam 2022 Step by Step Guide

 அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தள முகவரியை நேரடியாக கிளிக் செய்து ஆன்லைன் தேர்வு பகுதிக்கு செல்லலாம்

அந்தப் பக்கத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்

மாணவர்களின் சுய விவரமான மாணவரின் பெயர் பதிவு எண் பாடநெறி குறியீடு படத்தின் பெயர் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்

அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஹால் டிக்கெட் டவுன்லோட் லிங்க் மூலமாக உங்களது ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்

 டவுன்லோட் செய்த ஹால் டிக்கெட்டை பத்திரமாக பாதுகாப்பது மிக முக்கியமான செயலாகும் டிடிஎஸ் முறையில் பாதுகாத்தல் அல்லது பிரின்ட் செய்து வைத்துக்கொள்வது உசிதமானது

அடிப்பகுதியில் பின்னிணைப்பு 1 மற்றும் பின்னிணைப்பு 2 என்ற இணைப்புகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 

முதல் பகுதியில் விடைத்தாளின் மேல் பகுதியில் வைக்கப்பட வேண்டிய மாணவரின் குறியீடுகள் நிறைந்த பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் மாணவர்களின் பெயர் சென்டர் கோட் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் சப்ஜெக்ட் கோட் ஆகியவற்றை தெளிவாக எழுது விடைத்தாள் உடன் இணைத்து அனுப்ப வேண்டும்

நான்காவதாக வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் வினாத்தாளை ஆன்லைன் வாயிலாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்

எவ்வாறு தேர்வு எழுதவேண்டும்

  • A 4 பேப்பரில் மட்டுமே விடைகளை எழுதி அனுப்ப வேண்டும்
  • 40 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  •  ஒவ்வொரு மாணவரும் தங்களது தேர்வு எண் பாட எண் விடைத்தாள் பக்க எண் தேர்வு மைய எண் கையெழுத்து ஆகியவற்றை ஒவ்வொரு பக்கத்தின் மேல் பகுதியில் வலது புறத்தில் எழுதவேண்டும்
  •  தேர்வு நடத்தும் ஆசிரியர் வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து உங்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி வைப்பார்
  •  தேர்வு நடத்தும் ஆசிரியருக்கு உங்களது விடைத்தாள்களை அனுப்பலாம்
  •  தேர்வு எழுத நீலநிற மற்றும் கருப்பு பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
  •  தேர்வு மைய அதிகாரிகளுடன் உங்கள் கல்லூரி ஆசிரியர்கள் வைத்துள்ள தொடர்பின் படி உங்களது விடைத்தாள்கள் பெற்றுக்கொள்ளப்படும்
  •  வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் முகவரி வழியாக வினாத்தாள்களை பெற்றவர்கள் தங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழு வழியாக வினாக்களை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியை வழங்க வேண்டும்