Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Bharathiyar Katturai Essay in Tamil
Tamil Essays

Bharathiar Katturai in Tamil – பாரதியார் கட்டுரை

Bharathiar Katturai in Tamil – பாரதியார் கட்டுரை :- தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறளுக்கு அடுத்து சொல்லித்தரப்படுவது பாரதியார் பாடல்களே ஆகும் . பாரதியார் கவிஞர் மட்டுமல்லாமல் சுதந்திர போராட்ட வீரர் ,பெண் விடுதலை விரும்பி என பன்முகம் கொண்டவர். இந்திய விடுதலை போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியவர் பாரதியார் .மகா கவி பாரதி என்று எல்லோராலும் அழைக்க படுபவர்.

Bharathiar Katturai in Tamil

பாரதியாரின் இளமை காலம்

பாரதியார் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் எட்டய புறத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11வது நாள் சின்னச்சாமி ஐயர் மற்றும் லட்சுமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார்.இவரது இயற்பெயர் சுப்பையா.இளமை காலம் தொட்டே கவி பாடுவதில் வல்லவராக இருந்தார் பாரதி .எட்டயபுர ராஜா அரண்மனை அவையில் தனது பதினோராம் வயதிலேயே சான்றோர் பலரது கேள்விகளுக்கு பதிலளித்து தனது திறமையை வெளிப்படுத்தினர் .ஆதலால் பாரதியார் மீது எட்டய புர அரசருக்கு அளவுகடந்த பிரியம் ஏற்பட்டது .இந்த நிகழ்வுக்கு பிறகுதான் பாரதி என்ற புனை பெயர் அவருக்கு சூட்டப்பட்டது .

Bharathiyar House in Ettayapuram

திருமணம்

தனது பதினைந்தாம் வயதிலேயே செல்லமாவை அவரது பெற்றோர்கள் இனைந்து குழந்தை திருமணம் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது .பிறகு தனது அத்தை குப்பம்மாளுடன் காசி வாரணாசி பகுதிக்கு சென்றார் .ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்ற பாரதியார் அங்குதான் சீக்கியர்கள் போல தலைப்பாகை அணியும் பழக்கத்தை ஆரம்பித்தார்.

Bharathiyar Essay Ettayapuram Aranmanai

இலக்கியம்

இந்திய தேசிய கவி என போற்றப்படும் பாரதி குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம் போன்ற இலக்கியம் சார்ந்த கவிகளை எழுதினார் . தனது கவித்திறமையால் சுதந்திர போராட்டம் சார்ந்த கவிகளையும் இயற்றினார்.தமிழகம் திரும்பிய பாரதி 1908 அம ஆண்டு தொடங்கி சுதேசமித்திரன் நாளிதழின் ஆசிரியராக பணியாற்றினார்.இந்திய நாளிதழ் சரித்திரத்தில் அரசியல் கார்ட்டூன் வெளியிட்ட முதல் வார பத்திரிக்கை இந்தியா பாரதியரால் நடத்தப்பட்டதுதான் .

தேசிய அரசியல் பங்கேற்பு

1905 மற்றும் 1907 இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய தேசிய கூட்டத்தில் கலந்து கொண்டு .பாலகங்காதர திலகர் .வி வி எஸ் ஐயர் ,பிபின் சந்திரா பால் ஆகியோரது நட்பை பெற்றார். அவர்கள் நடத்திய சுதேசி போராட்டங்களில் தமது கருத்துகளையும் பதிவு செய்தார்.

பத்திரிக்கை ஆசிரியராக பாரதி

பத்திரிக்கை ஆசிரியராக இருந்த காலத்தில் நிறய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து நட்புறவாடினார் .ஆங்கிலேயே அரசால் குற்றம் சாட்டப்பட்ட பாரதி பத்தாண்டு காலம் பாண்டிச்சேரியில் வாசிக்க தொண்டங்கினார்.இந்தியாய் இளைஞர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுக்க ஊக்குவிக்கும் கட்டுரைகள் எழுதிய பாரதி ஆங்கிலேய அரசின் கோவத்திற்கு ஆளானார் .1918 ஆம் ஆண்டு கடலூரில் கைது செய்யப்பட்டார் .

Bharathiyar Essay Bharathiyar Handwriting and Signature

1919 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களை சந்தித்த பாரதி அவருடன் நட்பு கொண்டார் . தமது நண்பர்களான வா வு சிதம்பரனார் ,சுப்ரமணிய சிவா ,மந்தரம் திருமலாச்சாரியார் ,ஸ்ரீனிவாசாச்சாரி போன்றார் செய்த சுதந்திர போராட்டத்திர்ற்கு உறுதுணையாக இருந்தார் பாரதி .

ஜாதிய வேறுபாடுகளை தவிர்க்க பாரதி அந்த காலத்திலேயே முயற்சி செய்தார் .அனைவருக்கும் பூணூல் அணிவித்த பாரதி முஸ்லீம் மக்கள் நடத்திய கடை களில் உணவு உண்பது போன்ற நடவடிக்கைகளையும்.தாழ்த்த பட்டவர்களின் ஆலய பிரவேசம் போன்ற சமூக போராட்டங்களையும் நடத்தினார்

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் மரணமடைந்தார் பாரதி. புதிய இந்தியாவை உருவாக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் முதன்மையாக திகழ்ந்த பாரதி ,மகாகவி பாரதி என்று எல்லோராலும் போற்ற பாடுவதில் இவ்வித மாற்று கருத்தும் இல்லை