Site icon Tamil Solution

2021 பிக் பாஸ் 5 – Big Boss 5 Tamil

2021 பிக் பாஸ் 5 – Big Boss 5 Tamil:- கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி யதார்த்த நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்த பிக் பாஸ் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தாமதமாக தொடங்கி வெற்றிகரமாக முடிந்த IPL கிரிக்கெட் தொடர் இந்த வருடத்துக்கான தொடரை அறிவித்து விட்டது .அதுபோல எப்போதும் கோடை விடுமுறையை ஒட்டி நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் அதே நேரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கமல்

தற்போது அரசியலில் முழுவீச்சாக இறங்கியுள்ள கமலஹாசன் அவர்கள் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சிலியுள் பங்கேற்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சினிமா வாய்ப்புகள் குறைந்த கமல் அவர்கள் எப்போதும் பிக் பாஸ் மேடையை அரசியல் மேடையாகவும் பயன்படுத்துவதால் .இந்த வாய்ப்பை தவற விடமாட்டார் என்றே செய்திகள் பரவுகின்றன.

Bigg Boss Tamil 5 Host – சிம்பு வருவாரா

புதிய செய்தியாக இளம் நடிகர் சிலம்பரசன் சிம்பு இந்த வருடத்துக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவார் என்று தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. தனது சினிமா வாழ்க்கையில் தற்போதுதான் ரசிகர்கள் விரும்பும் செயல்களை செய்து வருகிறார் சிலம்பரசன் . மெலிந்த உடல்கட்டு இளமையான முகத்தோற்றம் என தன்னை மேம்படுத்தி கொண்டுள்ள சிம்பு அவர்கள் தற்போது வெங்கட் பிரபு படமான மாநாடு போன்ற நீண்டநாள் கிடப்பில் போட்ட படங்கள், புதிய படங்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தொலைக்காட்சி தொடரில் பங்கேற்ப்பாரா என்பதும் கேள்வி குறியாக உள்ளது.

எப்போதும் மேடை நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சர்ச்சைக்கு உள்ளாகும் சிம்பு,சர்ச்சை நிகழ்ச்சியான ஐந்தே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர் என்றே அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது

Bigg Boss Tamil 5 Contestents

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ அளவுக்கு அதிகமான பிரபல தன்மை கிடைக்கிறது . முதல் தொடரில் பங்கு பெற்று வென்ற ஆரவ் அவர்கள் கதாநாயகனாக நடிக்கிறார் ஆனால் அதே தொடரில் பங்கு பெற்று புகழின் உச்சிக்கு சென்ற போட்டியாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவமானங்களையும் வாழ்வில் தோல்வியையும் தொடர்ந்து சந்தித்து வருவது உண்மையாகும்

புதிய ஹீரோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக நடிக்க வந்த நடிகர் அல்லது சினிமா அல்லது மாடலிங் துறைக்கு புதிதானவர்களை தேர்வு செய்வது வழக்கம் அந்த வகையில்தான் சினிமாவில் பிரபலமாகாத ஆரவ்,பாலாஜி,முகேன் ராவ் போண்டோர் தேர்வு செய்யப்பட்டனர் அந்த வகையில் தற்போது நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது,

தொலைக்காட்சி வதந்திகளின்படி புகழ் பெற்ற குக் வித் கோமாளியில் புகழ்பெற்ற அஸ்வின் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் உள்ளன

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

பிரபல ஹீரோ

சில படங்கள் வெற்றிகரமாக கொடுத்து இன்றும் அதற்க்கு தகுதியுடையவராக உள்ள இரண்டாம் நிலை கதாநாயகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது .அந்த வகையில்தான் சக்தி,ஆரி,மஹத் போன்றோர் பங்கு பெற்றனர்,அந்த வகையில் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படும் செய்தி பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சிலப்படங்களில் நடித்து பிரபலமான நகுல் அவர்கள் பங்கு பெற அதிக வாய்ப்பு உள்ளது

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

பழைய ஹீரோ அல்லது சினிமா பிரமுகர்

நடித்து பல ஆண்டுகள் ஆன அல்லது சினிமாவில் பணியாற்றி சில ஆண்டுகள் ஆன பிரமுகர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெறுகின்றனர் அந்த வகையில் தான் முன்னதாக டைரக்டர் சேரன்,பொன்னம்பலம் ,வையாபுரி,சரவணன் போன்றோர் பங்கேற்றனர்,அதன்படி இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

நகைச்சுவை நடிகர் இருவர்

நகைச்சுவை அல்லது அதிகம் நகைச்சுவை பேருக்கு உள்ள இரண்டு நபர்கள் ஒவ்வொரு வருடமும் பங்கு பெறுகிறார். வையாபுரி ,கஞ்சா கருப்பு ,சென்ட்ராயன்,சாண்டி போன்றோர் பங்கு பெற்றனர்

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

இளம் நடிகை

சினிமாவில் நடித்து பிரபலமாகாத நடிகைகள் இந்த பகுதியில் பங்கு பெறுகின்றனர்.ஷெரின்,ஓவியா ,ஜனனி ஐயர் போன்றோர் இந்த பகுதியில் பங்கு பெற்றனர்.

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

பழைய நடிகை

சினிமா உலகில் பிரபலமான நடிகைகள் இந்த பகுதியில் பங்கு பெறுகின்றனர் அந்த வகையில் ஏற்கனவே நமீதா,காயத்ரி ரகுராம்,கஸ்த்தூரி,போன்றோர் பங்கு பெற்றனர்

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

தொலைக்காட்சி பிரபலம்

விஜய் தொலைக்காட்சியில் அதிகம் புகழ் பெற்ற நடிகர் நடிகைகள் முன்னணியில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர்,ஹாரதி,மோகன் ,பாத்திமா பாபு ,தாடி பாலாஜி,ஆஜித் போன்றோர் பங்கு பெற்றனர்

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

பாடகர் இசை பிரமுகர்

முதல் பிக் பாஸ் தொலைக்காட்சி தொடரில் ஓவியா மற்றும் ஜூலியானா போன்றோர் அதிகம் பாடல்கள் பாடி காண்போரை கவர்ந்தனர் இதன் காரணமாகவே அதிகம் பாடல் பாடும் திறமை உள்ளவர், பாட்டு போட்டியியில் பங்கு பெற்று புகழ் பெற்றவர்,பாடகர் போன்றோர் சேர்க்க படுகின்றனர்,அந்த வகையில் இந்த வருடம் யார் பாடல் பாடி நம்மை கவர்வார் என்று பார்க்கலாம்

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

கிளாமர் நடிகைகள்

எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கவர்ச்சி நடிகைகளை களமிறக்குவது விஜய் டிவியின் வழக்கம் அந்த வகையில்தான் ஷெரின்,ரம்யா பாண்டியன் ,கேபிறியலா,சனம்,யாஷிகா போன்றோர் சேர்க்க பட்டனர்

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

சமூக வலைதள பிரமுகம்

Expected Bigg Boss Tamil 5 Contestant – Popular Hero

Exit mobile version