Site icon Tamil Solution

Chennai Corporation Birth Certificate – சென்னை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ்

Chennai Corporation Birth Certificate – சென்னை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் :- சென்னை மாநகராட்சி இணையத்தளத்தில் இருந்து எப்படி முறையாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது, பெயர் திருத்தம் ,பெயர் இணைத்தல் போன்ற தகவல்களை இந்த கட்டுரையில் நாம் காணலாம்

சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்

பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய அதிகாரபூர்வமான வலைதள கீலே கொடுக்க பட்டுள்ளது

https://chennaicorporation.gov.in/index.htm

இந்த வலைத்தளத்திற்கு சென்றதும் உங்களுக்கு கேழ்க்கண்டவாறு வலைத்தளத்தில் செய்திகள் கிடைக்கும், அதில் வலதுபக்கத்தில் நீல நிறத்தில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் என்ற பட்டன் கொடுக்க பட்டிருக்கும் அதனை செலக்ட் செய்யவும்

இரண்டாவதாக ஒரு புதிய பகுதி உங்களுக்கு காண்பிக்க படும் அதில் முதலாவதாக கொடுக்க பட்டுள்ள பிறப்பு சான்றிதழ் பகுதியை கிளிக் செய்யவும்

இதன் பிறகு உங்கள் குழந்தையின் பாலினம், பிறந்த தேதி ,குழந்தை பிறந்த மருத்துவமனை போன்றவற்றை முறையாக நிரப்பவும் அதன்பிறகு கீலே கொடுக்கப்பட்ட என்னை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும்

உங்கள் குழந்தை பிறந்த அன்று பிறந்த அணைத்து குழந்தைகளின் பட்டியல் உங்களுக்கு காண்பிக்க படும்.இந்த பட்டியலில் தகப்பனார் பெயர் , பாலினம், பிறந்த தேதி , குழந்தையின் பெயர் என வரிசையாக கொடுக்க பட்டிருக்கும்.உங்கள் குழந்தையின் பெயரை சரியாக தேர்வு செய்து அதன் அருகே கொடுக்க பட்டுள்ள பிரிண்ட் பட்டனை அழுத்தவும்.

பட்டனை அழுத்திய பிறகு உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் உங்களுக்கு காண்பிக்க படும்,அதனை பிரிண்ட் செய்யும் முன்பு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையின் எதிர்கால தேவைக்கு மிக முக்கிய ஆவணம் என்பதால் மிக பத்திரமாக சேமித்து வைக்கவும்

மிக குறைந்த காலங்களே ஆன்லைன் பகுதியில் இந்த சான்றிதழ் கிடைக்கும் என்பதால் பிறகு டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு உடனடியாக பெண் டிரைவ் போன்ற சேமிப்பு பெட்டகங்களில் சேமிக்கவும்.

குழந்தையின் பெயரை இணைத்தல்

சில காரணங்களுக்காக சில பெற்றோர்கள் குழந்தையின் பெயரை மருத்துவமனையில் தாமதமாக தெரிவிக்கின்றனர், இதன் காரணமாக பெயரிடப்படாத சான்றிதழ் தரும் நிலை ஏற்படுகிறது.இதனை தவிர்க்க காலதாமதமின்றி குழந்தைக்கு பெயரிட்டு அதனை மருத்துவமனை மூலமாக தெரிவிக்க அறிவுறுத்த படுகின்றனர்.

அவ்வாறு காலதாமதம் ஆன குழந்தைகளுக்கு பெயர்களை இணையத்தளம் வழியாகவும் இணைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது

குழந்தையின் பெயர் இணைக்கும் பகுதிக்கு செல்ல மேலே கொடுக்க பட்டுள்ள பகுதியில் காண்பிக்க படும் child name inclusion என்ற buttonஐ கிளிக் செய்யவும்

குழந்தை பிறக்கும்போது மருத்துவமனையில் கொடுத்த மொபைல் நும்பரை உள்ளிடவும், பிறகு உங்கள் செல் எண்ணிற்கு ஒரு முறை பயன்படும் பாஸ் வர்ட் அனுப்பி வைக்கப்படும்.அதனை உள்ளிட்டு சென்றால்,உங்கள் குழந்தையின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யும் பகுதிக்கு செல்லலாம்.அந்த பகுதியில் உங்கள் குழந்தையின் பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளிடவும்.

பெயர் பதிவேற்றம் செய்யும் பொது குழந்தையின் இனிஷியல் போன்றவற்றை கவனமாக உள்ளிடவும், மீண்டும் மாற்றி அமைக்கும் வசதி கிடையாது என்பதினால் பொறுமையாக உள்ளிடவும். இந்த பகுதியை நிரப்ப மொபைல் பயன்படுத்த வேண்டாம் கணினி வழியாக முயற்சிக்கவும். மொபைல் மூலமாக பதிவேற்றம் செய்யும்போது சில பல குளறுபடிகள் நேரிடலாம் அவற்றை தவிர்க்க கணினி மூலமாக பதிவேற்றம் செய்வதே அகசிறந்ததாகும்.

பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம்

Exit mobile version