Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை

children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை:- முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான பண்டிதர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பு வைத்தவராதலால் அவரது பிறந்த தினமான நவம்பர் 14ஐ நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றோம்.

children's day essay in Tamil - குழந்தைகள் தினம் கட்டுரை

ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தை இந்திய அரசு ஒவ்வொரு நவம்பர் 14ளிலும் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறது .நமது எதிர்காலத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை சிறந்த திசையில் கட்டியெழுப்புவது நம் அனைவரின் கடமையாகும்.

குழந்தைகள் தினத்தை நாம் கொண்டாடுவதின் நோக்கம் சிறந்த கல்வி, சிறந்த வாழ்வாதாரம் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையாக கிடைக்க செய்வதே ஆகும். சரியான வழியில் வளர்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தி அவர்களுக்கு சுதந்திரத்தையும் வசதியையும் கொடுக்கும் ஒரு கட்டுக்கோப்பான ஒரு தேசத்தை கட்டமைப்பது நமது கடமையாகிறது.அந்த கடமையை ஒவ்வொரு அரசு அதிகாரிகளுக்கும் குடிமக்களுக்கும் தெரிவிக்கவே ஆண்டு தோறும் குழந்தைகள் தினம் இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.

ஒரு தேசத்தின் சொத்து அதன் களஞ்சியத்தில் இல்லை அதன் பள்ளிகளிலேயே உள்ளது என்பது ஜவாஹர்லால் நேரு அவர்களின் கூற்றாகும்.எனவே நம் குழந்தைகளை நாட்டின் செல்வமாக அங்கீகரித்து அவர்களைப் பாதுகாத்து அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள செய்ய வேண்டும்.

குழந்தைகள் தினம் நம் தேசத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவுகூரப்படுகிறது. இந்த சிறப்பு நாளில் பண்டிட். ஜவஹர்லால் நேருவுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

குழந்தைகள் தினம் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பள்ளிகளில், குழந்தைகள் தினத்தை மகிழ்விக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பல வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவில், குழந்தைகள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிந்து கொள்ளப்படுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குதல் மற்றும் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு. குழந்தைகளுக்கு பேச்சு போட்டி , பாடல் பாடும் போட்டி, நடன போட்டி,சிறு பட்டி மன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்த படுகின்றன

1 COMMENTS

Comments are closed.