Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை

Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை :- அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் வைத்துள்ளன.பேரிடர்கள் நேரிடும்போது மனித உயிர் இழப்புகள், பொருளாதார இடர்பாடுகளை களையவும் அவர்கள் பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கின்றனர் .பூகம்பம் ,எரிமலைவெடிப்பு,புயல்,பெரும்தோற்று போன்ற காலங்களில் அவசர உதவிக்கு பேரிடர் மேலாண்மை வாரியங்களே பொறுப்பெடுத்து கொள்கின்றனர்.பேரிடர்மலாண்மை பற்றிய கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளன

Disaster Management essay in Tamil

பேரிடர் என்பது மனித தவறுகளால் அல்லது இயற்கையாக ஏற்படுகின்றன.

இயற்கையான பேரிடர்கள்

  • பூகம்பம் ,
  • பெருமழை ,
  • சுனாமி ,
  • எரிமலை வெடிப்பு

மனித தவறினால் ஏற்படும் பேரிடர்கள்

  • வெடிகுண்டு வெடிப்பு,
  • விஷ வாயு வெளிப்பாடு,
  • தொழிற்சாலை விபத்துக்கள்

பேரிடர் மேலாண்மையின் முக்கியத்துவம்

பேரிடர் மேலாண்மையின் அவசிய தேவைகளை பற்றி கீழ்கண்ட பகுதிகளில் நாம் காணலாம்

உயிர் இழப்பைக் குறைக்கவும்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மனித சக்தியை முழுவதுமாக முடக்கும் பேரிடர் காலங்களில் செயல்படுகிறது. ஒவ்வொரு மனித உயிரையும் காக்கும் நோக்குடனேயே இந்த ஆணையம் செயல்படுகிறது. சமூக வேறுபாடுகள் ,பொருளாதார வேறுபாடுகள் என எந்த வட்டங்களுக்கும் இல்லாமல் மனித உயிரை காப்பதே தனது முதல் கடமையாக கொண்ட சட்டமுடையது.

துரிதமாக செயல்பட இராணுவ தளவாடங்கள்,இராணுவ வீரர்கள்,காவலர்கள்,மருத்துவக் குழுக்கள்,முதன்மை பணியாளர்கள் என்று இந்த குழு அமைக்க பட்டுள்ளது. தனி தனியாக அரசு பணிகளில் இருந்தாலும் பேரிடர் காலங்களில் தங்களுக்கு கொடுக்க பட்ட பேரிடர் மேலாண்மை பணிகளை இவர்கள் செய்கின்றனர்.

இவர்களது சாதனைகளாக அம்பன் புயலின்போதும் , கோரோனோ பெரும்தோற்று காலங்களிலும்,சென்னை வெள்ளத்தின் போதும் நாம் கண்கூடாக கண்டுள்ளோம்.

மறுவாழ்வு திட்டம்

பேரிடர் காலங்களில் நம்மை காப்போதோடு மட்டும் அவர்கள் கடமை முடிவடைந்து விடுவதில்லை.பேரிடர் துயரங்களை களைந்து மனித சக்தியை நல்வழிப்படுத்தி தற்காலிக தீர்வுகளையும் , நீண்ட கால மறுவாழ்வு திட்டங்களான பாதுகாப்பான வாழ்விடத்தை அமைத்து கொடுத்தல் , மறுவாழ்விற்க்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் வரை ஒரு பேரிடர் மீட்பு நடவடிக்கை நீள்கிறது.சுனாமி காலங்களில் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பை சரி செய்ய தற்காலிக குடில்களை மட்டும் அமைக்காமல் பாதிக்க பட்ட அனைவருக்கும் புதுவாழ்வு திட்டங்களை அரசு புனரமைத்ததனை உதாரணமாக சொல்லலாம்.

இயற்கை வளங்களை காத்தல்

மனித உயிர் பாதுகாப்புக்கு அடுத்து இந்த மேலாண்மையின் அடுத்த வேலை ,பேரிடரினால் ஏற்பட்ட இயற்கை இழப்புகளை ஈடுசெய்தல் ஆகும், பேரிடரினால் சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் சொத்துக்களும் பயனற்றதாக மாறிவிடுகின்றன, அப்படிப்பட்ட காலங்களில் அவர்களுக்கு சீரமைப்பு நிதி போன்ற உதவிகளை செய்கிறது.

தனிமனித சொத்துக்கள் மட்டும் அல்லது பொது சொத்துக்களையும் மீண்டும் மனிதர்களுக்கு உதவும் வகையில் புனரமைத்து இந்த மேலாண்மை வாரியத்தின் கடமையாகும்

பொதுமக்களின் ஒத்துழைப்பு

பேரிடர் களங்களில் அரசு எவ்வளவு உதவிகள் செய்தலும் அருகில் இருக்கும் மனிதர்களின் உடனடி உதவியே பேருதவியாக எப்போதும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை பேரிடர் காலங்களில் உணவு வழங்குதல், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்,போன்ற செயல்களை குழுக்களாக தனிமனிதர்கள் செய்வது இயல்பானதாக உள்ளது.இவற்றை கஜா புயலின் போதும் ,சுனாமியின் போதும், கோரோனோ பெரும்தோற்று காலங்களிலும் நாம் கண்கூடாக கண்டோம்.