Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

NEET 2020
கல்வி செய்திகள்

எப்படி நடை பெரும் நீட் தேர்வு 2020 |கொரோனா சமூக இடைவெளி கிடைக்குமா

நீட் தேர்வு 2020: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை 26ம் தேதி நடை பெறுகிறது .எழுத்து தேர்வான நீட் தேர்வு நடை பெரும் பொது சமூக இடைவெளி கிடைக்க ஒரு வளாகத்தில் அதிக பட்சமாக நூறு மாணவர்களே அனுமதிக்க பட வேண்டும் இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான தேர்வு மையங்கள் தேவை நாடு முழுவதும் நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்வு முடிக்கப்பட வேண்டும். எனவே, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை 2 மடங்காக மாற்ற தேசிய தேர்வு முகமையிடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது

நீட் தேர்வு 2020

கொரோனா வைரஸ் போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில்15 லட்சம் அதிகமான தேர்வர்களுக்கு நீட் தேர்வை நிர்வகிப்பது மத்திய அரசுக்கு சவாலானதாகும். சமூக விலகல் நெறிமுறைகளப் பராமரிக்க வேண்டி தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குமாறு தேசிய தேர்வு முகமையிடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது

நீட் தேர்வு 2020 அரசு வழிகாட்டுதல்

அரசு வழிகாட்டுதல்களின் படி, இரண்டு தேர்வர்களுக்கான இடைவெளியை குறைந்தது 2 மீட்டராக அதிகரிக்க  தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.அதன் பொருட்டு, 15 லட்சம் நீட் தேர்வர்களுக்கு சுமார் 6,000 தேர்வு மையங்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (முன்னதாக,3000 தேர்வு மையங்கள்).கடந்த ஆண்டுகளில்,குறைந்தது ஒரு மீட்டர் தூர அளவில் தேர்வர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

பேப்பர்- பேனா முறையில் நடத்தப்படும் இந்த தேர்வு, நாட்டின் அனைத்து இளங்கலை மருத்துவ படுப்புகளில் சேருவதற்கான ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகவும் கருதப்படுகிறது. முன்னதாக மே 3-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட நீட்  தேர்வு, முடக்கநிலை காரணத்தால், வரும் ஜூலை 26 அன்று நடத்தப்படுகிறது.

இதுவரை, ஒரே நாளில் இத்தனை மையங்களில் ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதா ?  என்பதே  ஒரு பெரிய கேள்வி தான். கூடுதலாக, 3,000 தேர்வு மையங்களை அடையாளம் காண எங்களுக்கு ஒரு மாதமாகும்.

நீட் தேர்வு 2020 கூடுதல் தகவல்கள்

நீட் தேர்வு வழக்கமாக கேந்திரியா வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மாநில அரசு கல்லூரிகளில்(முன்னிரிமை அடிப்படையில்) நடத்தப்படும்.

பேப்பர்- பேனா முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால், நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்வு முடிக்கப்பட வேண்டும். எனவே, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது தவிர்க்க முடியாதது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜுலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. ஆன்லைனில் பல கட்டங்கலாக  இந்த தேர்வு நடப்பதால், இதற்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையில்லை என்று தேசிய தேர்வு முகமை கருதுகிறது. தற்போதுள்ள 600 மையங்களோடு கூடுதலாக  150/200 புது தேர்வு மையங்களை அதிகரித்தாலே சமூக விலகல் நெறிமுறைகளை அடைய முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நீட் தேர்வு கடந்த கால தேர்வர்கள்

வருடம்  நடந்த முறை  தேர்வர்கள் எண்ணிக்கை 
2019 1 1,410,755
2018 1 1,326,725
2017 1 1,138,890
2016 2 8,02,594
2015 1 374,386
2014 1  
2013 1  

நீட் தேர்வு கட் ஆப்

Category Minimum Qualifying Percentile
As of 2019
Unreserved (UR) 50th Percentile
Unreserved PH (UR-PH) 45th Percentile
Scheduled Caste (SC) 40th Percentile
Scheduled Tribe (ST) 40th Percentile
Other Backward Classes (OBC) 40th Percentile
SC-PH 40th Percentile
ST-PH 40th Percentile
OBC-PH 40th Percentile

நீட் தேர்வு 2020 கால்லூரிகல் மற்றும் இடங்கள்

  • All private colleges25,840
  • All government colleges27,590
  • NEET Counselling seats3,521
  • NEET Basis seats35,461

மேலும் படிக்க : நீட் தேர்வு அலுவலக உதவிக்கு