மத்திய அரசில் பணியாற்ற வேண்டுமா? இந்திய உணவு கழகத்தில் 585 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தாளர் கிரேடு II, தட்டச்சர் (இந்தி), கணக்காளர், டெக்னிக்கல் என மொத்தம் 585 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய உணவுக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 585 (வடக்கு மண்டலத்தில் 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39 என மொத்தம் 585 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்தவர்கள், பி.காம் முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 01.07.2029 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், ஈரோடு மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஓர் மண்டலத்தில் ஒரு பதவிக்கு மட்டும் www.fci.gov.in என்னும் இணையதளம் மலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500.
  • மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.2.2020 முதல் 30.3.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitmentfci.in/assets/FINAL%20ADVERISEMENT%20WITH%20REVISED%20SCHEDULE.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *