Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Articles

Ivagai Nilangal – ஐவகை நிலங்கள்

Ivagai Nilangal – ஐவகை நிலங்கள் :- பண்டைய காலம் தொட்டே தமிழர் தம் நிலைகளை ஐந்தாக பிரித்து அவற்றிற்கு குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் ,பாலை என பெயரிட்டு அழைத்து வந்தனர் ,ஒவ்வொரு நிலத்தின்


குறிஞ்சி நிலம் – Kurinji Nilam

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என்று அழைக்க பட்டது

 குறிஞ்சி நிலம் - Kurinji Nilam
மக்கள் குறவன்,குறத்தி
உணவு தினை , மலை நெல்
விலங்கு புலி ,கரடி ,சிங்கம்
மலர் குறிஞ்சி ,காந்தல்
மரம் அகில், வேங்கை
பறவைகிளி, மயில்
ஊர்சிறுகுடி
நீர்அருவி நீர், சுனை நீர்
பறைதொண்டகப் பறை
யாழ்குறிஞ்சியாழ்
பண்குறிஞ்சிப்பண்
தொழில்தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்

முல்லை நிலம் – Mullai Nilam

காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம் என்றழைத்தனர்

 முல்லை நிலம் - Mullai Nilam
மக்கள் ஆயர், ஆய்ச்சியர்
உணவு வரகு, சாமை
விலங்கு முயல், மான்
மலர் முல்லை, தோன்றி
மரம் கொன்றை, காயா
பறவைகாட்டுக்கோழி, மயில்
ஊர்பாடி, சேரி
நீர்காட்டாறு
பறைஏறுகோட்
யாழ்முல்லையாழ்
பண்முல்லைப்பண்
தொழில்ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்

மருதம் நிலம் – Marutham Nilam

வயலும் வயல் சார்ந்த நிலமும் முல்லை நிலம் என்றழைத்தனர்

 மருதம் நிலம் - Marutham Nilam
மக்கள் உழவர், உழத்தியர்
உணவு செந்நெல், வெண்ணெய்
விலங்கு எருமை, நீர்நாய்
மலர் செங்கழுநீர், தாமரை
மரம் காஞ்சி, மருதம்
பறவைநாரை, நீர்க்கோழி, அன்னம்
ஊர்பேரூர், மூதூர்
நீர்மனைக்கிணறு, பொய்கை
பறைமணமுழா, நெல்லரிகிணை
யாழ்மருதயாழ்
பண்மருதப்பண்
தொழில்நெல்லரிதல், களைபறித்தல்

நெய்தல் நிலம் – Neithal Nilam

கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம்என்று கூறினார்கள்

 நெய்தல் நிலம் - Neithal Nilam
மக்கள் பரதர், பரத்தியர்
உணவு மீன்
விலங்கு முதலை, சுறா
மலர் தாழை, நெய்தல்
மரம் புன்னை, ஞாழல்
பறவைகடற்காகம்
ஊர்பட்டினம், பாக்கம்
நீர்மணற்கிணறு, உவர்க்கழி
பறைமீன்கோட்பறை
யாழ்விளரியாழ்
பண்செவ்வழிப்பண்
தொழில்மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

பாலை நிலம் – Palai Nilam

மலைக்கும் காட்டிற்கு இடையில் அமைந்த இடத்தை பாளை என்றழைத்தனர்

 பாலை நிலம் - Palai Nilam
மக்கள் எய்னர், எயிற்றியர்
உணவு சூறையாடலால் வரும் பொருள்
விலங்கு வலிமை இழந்த யானை
மலர் குரவம், பாதிரி
மரம் இலுப்பை, பாலை
பறவைபுறா, பருந்து
ஊர்குறும்பு
நீர்வற்றிய சுனை, கிணறு
பறைதுடி
யாழ்பாலையாழ்
பண்பஞ்சுரப்பண்
தொழில்வழிப்பறி செய்தல்

1 COMMENTS

Comments are closed.