Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Iyarkai Valam Katturai in Tamil
Essay Tamil Essays

Iyarkai Valam Katturai in Tamil – இயற்க்கை வளம் கட்டுரை

Iyarkai Valam Katturai in Tamil – இயற்க்கை வளம் கட்டுரை :- இயற்க்கை வளங்களை பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகிறது.இயற்க்கை அன்னையின் கொடையான இயற்க்கை வளங்களை பாதுகாப்பதே ஒவ்வொரு தனி மனிதன் மற்றும் சமூகத்தின் தலையாய கடமையாகும்.நாம் உயிர்வாழ தேவையான அனைத்து வசதிகளையும் நாம் இயற்க்கை வளங்களை மேம்படுத்துவதன் மூலமாகவே பெற முடியும்

காற்று ,நீர் ,சூரியஒளி ,மரம் ,கரி ,மணல் என மனிதனின் தேவைகளுக்கு பயன்படும் இயற்க்கை வளங்களின் பட்டியல் மிக பெரியதாகும் ,மனித தேவைக்கு எளிதில் கிடைக்கும் இயற்க்கை வளங்கள் மட்டுமல்லாது பூமியை குடைந்தெடுத்து பெரும் வளங்களும் மிக முக்கியமானதாகும்.மனிதன் தனது தேவைக்காத எவ்வளவு அரிதான வளங்களையும் பயன்படுத்த தொடங்கியதன் தாக்கம் நமக்கு தற்போதைய இடர்பாடுகள் மூலமாக தெரிய வருகிறது

Iyarkai Valam Katturai in Tamil

மனித வாழ்வு இயற்க்கை வழங்களையே சார்ந்துள்ளது,இயற்கை வளங்கள் மட்டுமே நமது பூமியை மனித வாழ்வாதாரத்திர்ற்கு உகந்த கோலாக நிர்ணயிக்கிறது.மனிதன் இயற்கை அன்னையின் கொடையான இயற்க்கை வளங்களை பயன்படுத்த தொடங்கி இன்று பூமியில் உள்ள இயற்க்கை சுழற்சியில் சிறு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டான்,இந்த சிறு மாற்றம் பூதகரமான விளைவுகளை ஏற்படுத்துவது நாம் கங்கூடாக கண்ட உண்மையாகும்

உயிர்வாழும் இயற்க்கை வளங்கள் என மிருகங்கள் ,பறவைகள்,கடல்வாழ் உயிரினங்கள் ,மண்ணில் புதையுண்ட உயிர்கள் எனவும், உயிர் வாழாத இயற்க்கை வளங்கள் என மண் ,மணல் ,தாது பொருட்கள் ,பாறைகள் எனவும் அறிவியல் பிரிக்கிறது

இயற்க்கை வளங்கள் நமது பூமியில் எல்லா பகுதியிலும் பரவி கிடக்கிறது,ஆனால் அவை ஒரு சீராக அணைத்து பகுதியிலும் அணைத்து பொருட்களும் கிடைப்பதில்லை .இதன் காரணமாகவே வளம் செறிந்த பகுதி மனிதன் அதிகம் வாழும் பகுதியாகவும் மற்ற பகுதி மனிதன் அதிகம் குடிபோகாத பகுதியாகவும் இருக்கின்றன, இந்த வேறுபாட்டை சமநிலை படுத்தும் ஏற்பாடுகளை மனிதன் செய்ய தொடங்கியதே வியாபாரம் எனும் மனித கலாச்சாரத்தின் உச்ச நிகழ்வு ஆரம்பமாகியது.

இயற்க்கை வளங்கள் அதிகம் உள்ள இடங்களில் மனிதன் விவசாயம் செய்ய தொடங்கினான் ,அவற்றை வியாபாரம் செய்ய துவங்கினான் ,தற்கலங்களின் எரிவாயு மற்றும் எரிபொருள் வளங்கள் அதிகமாக கிடைக்கும் நாடுகளில் போர் செய்து நாடுகளை வசப்படுத்தும் நிகழ்வுகளும் அரங்கேற துவங்கிவிட்டது.

இயற்கை வளங்களின் அதீத பயன்களாக நீரை கொண்டு மின்சாரம் தயாரித்தல்,சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் , சூரிய அடுப்பை பயன்படுத்துதல் , காற்றின் வேகத்தை மின் அலைகளாக மாற்றுதல் போன்ற கேடு தராத அறிவியல் வளர்ச்சியை ஊக்கிவிப்பதே இயற்க்கை வளங்களை அளிக்காமல் அதை பாதுகாத்து அதன் பயன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் அறிவியல் வளர்ச்சியாகும்

மாறாக இயற்க்கை வளங்களை அளிக்கும் நீர் நிலைகளை சேதப்படுத்தும் தொழிற்சாலைகள் ,காற்றை மாசுபடுத்தும் வாகனங்கள் ,இயற்க்கை விளைநிலங்களை கட்டிடம் கட்ட எடுத்துக்கொள்ளுதல் போன்ற மனித கேடு விளைவிக்கும் வளர்ச்சிகளை நாம் நிறுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை ,இயற்க்கை வளங்களுக்காக போர் புரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை,மிக அதிகம் இயற்கை வளங்கள் உன்ன நாடு மட்டுமே தனது நாட்டின் செல்வதை பாதுகாக்க முடியும் ,இயற்கை விவசாய நிலங்களை அளித்துவிட்டு புதிய இடங்களில் விவசாய உத்தி கொண்டு விவசாயம் செய்வது சாலசிறந்த யுக்தி அல்ல.

இயற்க்கை வளங்களை பாதுகாத்த ஒவ்வொரு நாடும் முன்னெடுக்கும் அத்யாவிசய திட்டங்கள் தற்காலங்களில் அதிகமாக இருந்தாலும் அவை மனித வளர்ச்சி பாதையில் எப்போதும் போதாத ஒன்றாகவே இருக்கிறது ,உதாரணமாக மனித வளர்ச்சியினால் மாசுபட்ட வாயுவை சரிசெய்ய மரம் நடும் நடைமுறை நல்ல பயனை தந்தாலும் அவை ஒரு போதும் மாசற்ற வாயுவை கொண்டுவந்து விட முடியாது.இதன் காரணமாகவே மாற்று வழிகளை கையாளும் மனித கலாச்சாரம் எல்லோராலும் ஊக்குவிக்க படுகிறது .

இயற்க்கை வளங்களை சேதப்படுத்துவன் மூலமாக உலகின் தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது பூமி வெப்ப மயமாதல் பிரச்சனையாகும்.இதற்க்கு தேர்வு காணுவதே இன்றைய நாடுகளுக்கு முதல் கடமையாகும் ,ஒவ்வொரு நாடும் தனது பங்களிப்பை செய்வதின் மூலமாக மட்டுமே ஐந்தே இயற்கை வளங்களை பாதுகாத்து அதன் மூலமாக கிடைக்கு இயற்க்கை வசதிகளை நாம் அனுபவிக்க முடியும்