Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை

Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி நிறைய திட்டங்கள் வகுத்ததால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்படுகிறார் மேலும் இவரது பிறந்த தினம் இந்தியாவின் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது  ,சுதந்திர போராட்டத்தில் காந்தியுடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் ,சுதந்திரத்திற்கு பிறகு படேலுடன் இணைந்து புதிய பாரதம் பிறக்க பாடுபட்டார் இதன் காரணமாக புதிய இந்தியாவின் சிற்பி என்றும் அழைக்கப்படுகிறார்

Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை
பிறப்பு:நவம்பர் 14, 1889
இடம்:அலகாபாத், உத்திரப்பிரதேசம் (இந்தியா)
பணி:சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு:மே 27, 1964

இளமைகாலம்


செல்வந்தரும் வழக்கறிஞருமான  மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் மகனாக பிறந்தார்.இவரது
தந்தை புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆகையால் இளமை பருவம் முதலே செல்வந்தராக வாழ்ந்தார்,

கல்வி

ஹார்ரோவில் உள்ள பள்ளியில் பள்ளி கல்வியை முடித்தார் .கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.1910 இல் லண்டன் சென்ற நேரு  இன்னர் டெம்பில் இல் சட்டம் படித்தார்,1912 இல் வெற்றிகரமாக சட்டப்
படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.

குடும்ப வாழ்க்கை

1916 ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப்
பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமணம் ஆன அடுத்த
ஆண்டில் இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள் . இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை
தனியாகவே வாழ்ந்தார்.

அரசியல்

இந்தியா திரும்பிய நேரு காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட
துவங்கினார் ,1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார்.காந்திய கொள்கைகளில் அதிகம் ஈர்க்க பட்ட நேரு அவரை பின்பற்ற
துவங்கினார்,1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில்
தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.

சிறை வாழ்க்கை

1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு சிறைக்கு சென்றார். 1922ல் ,தனது வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழித்தார் . சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். . நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு சூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர்.

பிரதம மந்திரி

ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் னி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக பதவி வகித்த நேரு ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார். அவரது ஆட்சி காலத்தில் இந்தியா முன்னேற்ற பாதையில் பயணித்தது ,1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார். பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது.இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளையும்  , பல்கலை கலகங்களையும் தோற்றுவித்தார் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.

வெளியுறவுக் கொள்கை

“கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார். மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது. 1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது. இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

நினைவுச்சின்னங்கள்

  • குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த நாளான, நவம்பர் 14ஐ இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.
  • 1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.
  • மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன.

இறப்பு

1964 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.

jawaharlal nehru essay in tamil,

jawaharlal nehru essay in tamil
studymode jawaharlal nehru essay in tamil

jawaharlal nehru speech in tamil pdf

jawaharlal nehru short history in tamil

nehru mama speech in tamil

jawaharlal nehru kavithaigal in tamil

jawaharlal nehru tamil paadal

jawaharlal nehru patriya kavithai in tamil

jawaharlal nehru children’s day essay in tamil

2 thoughts on “Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை”

Comments are closed.