Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Articles

நண்பனுக்கு கடிதம் – kaditham in tamil to friend

நண்பனுக்கு கடிதம் – kaditham in tamil to friend-letter to friend in tamil-Nanbanukku Kaditham :- நண்பருக்கு கடிதம் எழுதும்போது முறைசாரா முறைப்படி கடிதம் எழுத வேண்டும் என்பது கோட்பாடாகும் ,நண்பருக்கு கடிதம் எழுதும்போது நாம் யார் என்று குறிக்கும் அனுப்புனர் மற்றும் ,யாருக்கு எழுதுகின்றோம் என்பதை குறிப்பிடும் பெறுநர் போன்ற தகவல்களை எழுத தேவையில்லை ,அதற்க்கு பதிலாக உங்கள் பெயரையும் உங்கள் நண்பர் பெயரையும் குறிப்பிட்டே கடிதம் எழுதலாம் (உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் அறிமுகம் தேவையில்லை என்பதினார்)

kaditham in tamil to friend

பிறந்தநாள் விழாவுக்கு நண்பனை அழைத்து கடிதம்

33 மூன்றாம் தெரு

காமராஜர் நகர்,அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் ,

அன்புள்ள நண்பனுக்கு,

எப்படி இருக்கிறாய் ,நானும் எனது குடும்பமும் நலமுடன் உள்ளோம் அதே போல் உனது குடும்பமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

எனது பிறந்த நாள் விழாவிற்கு உன்னை அழைக்கவே இந்த கடிதம் எழுதுகிறேன்,

வருகின்ற வெள்ளி அன்று எனது 14வது பிறந்தநாள் ,எனது குடும்பத்தினர் அதை சிறப்பிக்க சிறிய அளவில் ஒரு விழா நடத்துகின்றனர் ,அதில் நீ கலந்து கொண்டு என்னை பெருமை படுத்த வேண்டும் என நான் விரும்புகின்றேன்,உன்னை நேரில் அழைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் ,இருந்தாலும் இந்த கடிதம் மூலம் கிட்டும் செய்து மூலம் நீ எனது பிறந்து நாள் விழாவில் கலந்துகொள்வாய் என்று நம்புகிறேன் ,உனது தம்பியையும் அழைத்துவர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

பெயர்

நல்ல மதிப்பெண் எடுத்த நண்பனுக்கு வாழ்த்து சொல்லி கடிதம்

33 மூன்றாம் தெரு

காமராஜர் நகர்,அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் ,

அன்புள்ள நண்பனுக்கு,

எப்படி இருக்கிறாய் ,நானும் எனது குடும்பமும் நலமுடன் உள்ளோம் அதே போல் உனது குடும்பமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

நீ சென்ற பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் முதலாவதாக தேர்ச்சி அடைந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் ,உனக்கு வாழ்த்து சொல்லவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்

எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தும் உனக்கு இந்த பெருமை உரியதே ஆகும் ,உனது கல்வி கற்கும் திறனை மென்மேலும் வளர்த்து அடுத்து நடக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க எனது வாழ்த்துக்கள் ,அதற்க்கான முயற்சியில் ஈடுபட உனக்கு அந்த கடவுளும் அதற்க்கு மேலாக உனது பெற்றோரும் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.உனது வெற்றியை நினைத்து பெருமைப்படும் உனது குடும்பத்தினரை போல எனது குடும்பமும் பெருமைபடுகிறது என்ற செய்தியையும் உனக்கு தெரிவிக்கிறேன்,நீ இன்னும் பல சாதனைகள் செய்ய நான் விரும்புகிறேன்

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

பெயர்

வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்து சொல்லி கடிதம்

33 மூன்றாம் தெரு

காமராஜர் நகர்,அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் ,

அன்புள்ள நண்பனுக்கு,

எப்படி இருக்கிறாய் ,நானும் எனது குடும்பமும் நலமுடன் உள்ளோம் அதே போல் உனது குடும்பமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

இந்த வருடம் நடந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் நீ கலந்து கொண்டு வெற்றி பெற்றதை நான் அறிந்து மிகவும் சந்தோசம் அடைந்தேன் ,அந்த வெற்றிக்கு உனக்கு வாழ்த்து சொல்லவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்

படிப்போடு மட்டுமல்லாது பல்திறனிலும் வல்லவனாக இருக்கும் உன்னை நினைத்து நானும் எனது குடும்பமும் பெருமிதம் கொள்கிறோம் ,மாநில அளவிலான போட்டிக்கு நீ தகுதி பெற்று விளையாட இருப்பதை அறிந்து மேலும் சந்தோஷமடைகிறேன் ,நீ அந்த போட்டிளியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் ,நமது நண்பர் கூட்டத்தில் விளையாட்டு போட்டி என்று வரும்போது எப்போதும் வெற்றி பெறுவது நீயே ,நீ தன்னம்பிக்கையுடன் அடுத்து நடக்கும் விளையாட்டு போட்டியில் காலத்து கொள்வாயாக ,நீ வெற்றி பெரும் செய்தியை பத்திரிகை செய்தியாக காண அவளாக உள்ளேன் .

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

பெயர்

நண்பனின் குடும்ப நலம் கேட்டு கடிதம் (கொரோனா கடிதம்)

33 மூன்றாம் தெரு

காமராஜர் நகர்,அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் ,

அன்புள்ள நண்பனுக்கு,

எப்படி இருக்கிறாய் ,நானும் எனது குடும்பமும் நலமுடன் உள்ளோம் அதே போல் உனது குடும்பமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

தொடர்ந்து கொரோனா நோயின் தாக்கம் நமது நாட்டில் இருந்து வருவதை எண்ணி வருந்துகிறேன் ,எங்கள் ஊரில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேலான நபர்கள் அந்த நோய்தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ,அதே போல் உனது ஊரிலும் அதிக பாதிப்பு உள்ளதை பத்திரிக்கை செய்தி மூலம் அறிந்தேன்

நானும் எனது குடும்பமும் தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக நலமாக உள்ளோம் ,அதுபோல் நீயும் உனது குடும்பமும் நன்றாக இருக்கிறீர்களா,எனது தந்தையின் கட்டுப்பாட்டின்படி தொடர்ந்து முகக்கவசம் ,அடிக்கடி கை கழுவுதல் என்ற அரசு சொல்லும் அனைத்து முன்னெச்சரிக்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுகிறோம் ,அதுபோல் நீயும் உனது குடும்பமும் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்,பெரியோர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை நீ அறிந்திருப்பாய் என்று நம்புகிறேன் ,எனது பெற்றோர்கள் அந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டு ஆரோக்கியமாக உள்ளனர் ,நீ இந்த செய்தியை உனது பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்து,

இந்த கொடிய நோய் தொற்று முடிவடையும் காலம் மிக விரைவில் உள்ளது ,அப்போது உன்னை நான் நேரில் சந்திக்கிறேன் ,அதுவரை உனது நலனை விரும்பும் உனது நண்பன்

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

பெயர்

பள்ளியில் விடுமுறை பெறுவதற்கான காரணம்

  • நண்பனின் உடல்நலம் கேட்டு கடிதம்
  • நண்பனின் விளையாட்டு வெற்றி செய்திக்கு வாழ்த்து சொல்லி கடிதம்
  • நண்பனின் கல்வி வெற்றி செய்திக்கு வாழ்த்து சொல்லி கடிதம்
  • நண்பனை திருவிழாவிற்கு அழைத்து கடிதம்
  • நண்பனுக்கு உனது வெற்றியை தெரியப்படுத்தி கடிதம்
  • உனது குடும்ப நிகழ்ச்சிக்கு நண்பனை வரவேற்று கடிதம்
  • நண்பனின் நம்பிக்கையை தூண்டும் கடிதம்

மேலே கண்ட உதாரண கடிதங்கள் போல் நண்பனுக்கு கடிதம் எழுத்தாலாம் ,நண்பனுக்கு கடிதம் எழுதும் பழக்கம் நண்பனின் நன்மதிப்பையும் குடும்பத்தினரின் நன்மதிப்பையும் பெற உறுதுணையக இருக்கும் ,கடித்த போக்குவரத்து குறைந்து வரும் இந்த கால கட்டத்தில் தொடர்ந்து ,ஈ மெயில் ,குறும் செய்தி மூலமாக கடிதத்தை அனுப்பலாம்