karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை

karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை :- தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான நடன வகைகளில் மிக முக்கியமானது இந்த கரகாட்டமாகும்.குறிப்பாக மழைக்கு காரணமாக தமிழக மக்கள் வழிபடும் மழை கடவுளான மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோர் இந்த நடனத்தை ஆடி அம்மனின் அருள் பெறுகின்றனர்

karakattam essay in tamil -  கரகாட்டம் கட்டுரை

இன்றைய நவ நாகரிக உலகத்தின் எத்தனையோ பழக்க வழக்கங்கள் மாறிப்போய் விட்டன ,இருந்த போதிலும் தமிழ் கலாச்சாரத்தில் இதுபோன்ற நடனங்களில் வாயிலாக பண்டைய கால வாழ்க்கைமுறை மற்றும் வரலாறு தொன்று தொட்டு பின்பற்ற பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்கின்றன.தமிழ்நாட்டின் பழம்பெரும் இதிகாசங்கள் மற்றும் பாடல்களில் இந்த கலையை பற்றி குறிப்புகள் இருக்கின்றன ,சமீபத்திய தொல்லியல் ஆராய்ச்சிகளிலும் இது சம்பந்தமான கல்வெட்டுகளும் ,சித்திரங்களும் கண்டுபிடிக்க பட்டதில் இருந்து இந்த கலை பன்னெடுங்கால வரலாற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.

karakattam essay in tamil -  கரகாட்டம் கட்டுரை

கிராமத்து கோவில்களில் சினிமா சம்பந்தமான மற்றும் தற்சமய மறுபாடுகளுடன் கரகாட்டம் வேறுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும் ,பல சமயங்களில் பரதநாட்டியம் ,குச்சிபுடி போன்ற இந்திய கலைகளுடன் இணைந்து இந்த கலை மென்மேலும் வளர்ச்சி அடைவதை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய சுதந்திரதின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பாக ஆடப்படும் கலாசார நடனங்களில் இந்த கரகாட்டமும் ஒன்றாகும் ,பன்னெடும் கால வரலாற்றை சொல்லும் ஆயுதமாக இந்த கரகாட்டத்தை ஆடுபவர்களும் உண்டு ,

karakattam essay in tamil -  கரகாட்டம் கட்டுரை

நாகரிக வளர்ச்சி மற்றும் சினிமாவின் தாக்கத்தினால் இதனை ஆடும் கிராமத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்த போதிலும் ,இந்த கலை புதிய புதிய மாறுதல்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைவதையே பார்க்கிறோம் ,தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் நாட்டுப்புற கலைகளின் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் வெகுவாக பாராட்ட பட்டாலும் ,கடைசி கலைஞர்கள் வரை இந்த வசதிகளும் திட்டங்களும் சென்றடைவதில்லை சிரமம் இருக்கத்தான் செய்கிறது .இருந்த போதிலும் ஒவ்வொரு கிராம திருவிழாக்கள் ,பொங்கல் பண்டிகை விழாக்களில் இந்த கலை நடனம் இடம் பெற்று வருகிறது

1 thought on “karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை”

Comments are closed.