Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay

Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay :- மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை நற்குணங்களில் முதன்மையானது மனிதநேயமாகும். சகா மனிதனிடம் மட்டுமல்லாது நம்மோடு வாழும் மற்ற உயிரினங்கள்,தாவரங்கள் ,பூச்சிகள் மற்றும் இயற்கை என அனைத்தின் மீதும் பரிவோடு வாழ்வதே ஒரு மனிதனின் குறைந்த பட்ச தகுதியாகும்.

manithaneyam essay in tamil

மனித சரித்திரத்தில் எத்தனையோ போர்கள்,சகிக்க முடியாத வரலாற்று உண்மைகளையும் கடந்து நாம் பார்க்கும்போதும் எரிமலை மீது விழும் சிரு பனித்துளியாய் மனித நேயம் இருந்துகொண்டே இருக்கிறது.மனிதநேயத்தை வரலாற்று சுவடுகளில் பறைசாற்றிய எத்தனையோ தலைவர்களை பற்றியும் தனிமனிதர்களையும் நாம் அறிவோம். அத்தகைய மாமனிதர்களை பற்றி நாம் நினைவு கொள்ளும்போது கடல் கடந்து ,தேசாதி தேசம் கடந்து அவர்கள் கொண்ட மனிதநேய கருத்துகள் நம்மை வந்தடைகின்றன.

வரலாற்றில் அன்னை தெரசா,மகாத்மா காந்தி,நெல்சன் மண்டேலாபோன்ற பலர் மனிதநேயத்தை அடுத்த தலைமுறைக்கு தங்கள் செயல்கள் எடுத்துரைத்துள்ளனர் .உலக வரலாற்றில் அன்னை தெரசா ஆற்றிய மனித நேய செயல்பாடுகள் அணைத்து மக்களையும் உன்னத வழிக்கு திருப்புகிறது.தன்னுடைய முழு வாழ்க்கையையும் எளியோர்க்கு அர்ப்பணித்த மாபெரும் தியாக திருமகளாக தெரசாவை இந்த உலகம் பார்க்கிறது.

ரவீந்திரநாத் தாகூர் தனது மனித நேய கருத்துக்களை கீதாஞ்சலி படைப்பில் அதிகம் பகிர்ந்துள்ளார் அதுவே அவருக்கு நோபல் பரிசை பெற்றுத்தந்தது,அவரது கோட்பாட்டின்படி இறைவனை வேண்டுவதை எளியோர்க்கு பணிவிடை அல்லது அவர்களை மதித்தல் மூலமாக செய்தலே போதுமானது என்ற கருத்து இன்றளவும் பேசப்படுகிறது.