எம். எஸ். சுப்புலக்ஷ்மி

எம். எஸ். சுப்புலட்சுமி

இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்” என சரோஜினி நாயுடு அவர்களால் பாராட்ட பட்டவர் கர்நாடக இசை பாடகியான  எம். எஸ். சுப்புலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில்  பாடிய  எம். எஸ். சுப்புலட்சுமி இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு அவரை பெருமை படுத்தியது

 

பிறப்பு

எம். எஸ். சுப்புலட்சுமி என்றழைக்கப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 1916 புரட்டாசி மாதம் 16 ஆம் திகதி அன்று மதுரையைச் சேர்ந்த இசைக்கலைஞர் சண்முகவடிவு அம்மாளுக்கும்  சுப்பிரமணியம் அவர்களுக்கும் பிறந்தார்.

இளமை காலம் 

இசை பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இளமை காலம் முழுவதும் இசையில் அதிக ஆர்வம் கொண்டவராகவே வளர்ந்து வந்தார் .அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார்.செம்மங்குடி சிறீனிவாச ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்த இவர் தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு ,இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார்

இசை பயணம் 

1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல். பி இசைத்தட்டில் “மரகத வடிவும் செங்கதிர் வேலும்” எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.

திரைத்துறை 

“சேவாசதனம்” படத்தின் கதாநாயகியாக நடித்த  எம். எஸ். சுப்புலட்சுமி,காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்,எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார். சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் கல்கி சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமிநாரதர் வேடத்தில்  நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையை கொண்டு அவரது கணவர் கல்கி சதாசிவம் கல்கி வார இதழ் துவங்கினார் . சாவித்திரி படத்தில் “மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே”, “மங்களமும்பெறுவாய்” போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை

பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் பிரபலமாகின . பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டது. அப்போது  இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு “இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே” எனப் பாராட்டினார்.

இறுதி காலம்:

1997 ஆம் ஆண்டு கணவர் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1997 ஆம் ஆண்டு கடைசியாக சென்னை மியூசிக் அகாடெமியில் பாடினார்.2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தன்னுடைய 88வது வயதில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மரணம் அடைந்தார்

விருதுகள்:

1 thought on “எம். எஸ். சுப்புலக்ஷ்மி”

Leave a comment