Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

my school essay in tamil
Tamil Essays

My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை

My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை :- எனது பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஒழுக்கத்தையும் அறிவையும் புகட்டுவதில் அதிக பங்கு வகிப்பது எனது பள்ளியே ஆகும். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப எனது பள்ளியும் கற்று கொடுக்கும் முறைகளையும் மாணவர்களுக்கு தேவையான வற்றயும் புதுப்பிக்க தவறுவது இல்லை.

My School Essay in Tamil Katturai

எனது பள்ளியில் உயந்த கட்டிடங்கள் உள்ளன ,அவை உயரமாக இருந்த போதிலும் மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பு அமைப்புகளும் அமைக்க பட்டுள்ளன.எனது பள்ளி மிக பெரிய விளையாட்டு மைதானத்தை கொண்டுள்ளது . எங்கள் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி அணைத்து இடங்களிலும் மரங்கள் நடப்பட்டு பராமரிக்க படுகிறது.

மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிக்கதாக சுத்திகரிக்கும் வசதியும் , மழை நீரை சேமிக்கும் பொருட்டு நவீன மலை நீர் சேமிப்பு தொட்டியும் எங்கள் பள்ளியில் உள்ளன , சுத்தமான சுகாதாரமான கழிவறைகள் மாணவர் பயன்பாட்டிற்கு எப்போதும் சுத்தமாகவே கிடைக்கின்றன.

மாணவர்களின் படிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் அதி நவீன கணினி ஆராய்ச்சி கூடமும் , அறிவியல் கூடமும் , மிகப் பெரிய நூலகமும் எங்கள் பள்ளியில் அமைக்க பட்டு பராமரிக்க படுகிறது .கல்வி அறிவோடு ஒழுக்கத்தையும் போதிக்கும் NCC ,NSS ,SCOUTS போன்ற பல குழுக்கள் எங்கள் பள்ளியில் இயங்குகின்றன .

எனது பள்ளியில் பயிலும் மாணவர் எந்த ஒரு காரணதிக்காகவும் பள்ளிக்கு வர தயங்குவது இல்லை இதற்க்கு காரணம் எங்கள் பள்ளி ஆசிரியர்களே அவர், எங்கள் பள்ளி நிர்வாகம் தகுதியான ஆசிரியர்களேயே நியமித்துள்ளது .எங்கள் பள்ளியில் பாட ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல் மாணவர்களின் கற்பனை திறன் மற்றும் உடல் திறன் ஆகியவற்ற வளர்க்கும் விதமாக ஓவிய ஆசிரியர் , விளையாட்டு ஆசிரியர், இசை ஆசிரியர் என நிறைய ஆசிரியர்கள் உள்ளனர்.

எனது பள்ளியில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள்

  • தடையின்று மின்சாரம் வழங்கும் ஜெனெரேட்டர் வசதி உள்ளது
  • பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பேருந்து வசதி உள்ளது ,பக்கத்து கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் குறித்த செலவில் இயக்க படுகின்றன
  • மிக பெரிய நூலகம் உள்ளது ,அதில் பாடம் சம்பந்தமான நூல்கள் மட்டும் அல்லது தினசரி நாளிதழ்கள் ,மாணவர்களுக்கு தேவையான வினாடி வினா நூல்கள்,ஓவிய நூலகள் கிடைக்கின்றன
  • சுத்தி கரிக்க பட்ட குடிநீர் கிடைக்கிறது
  • சுதாரமான கழிவறைகள் , ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்ய பட்டு,கிருமி நாசினி தெளிக்க பட்டு மாணவர்களுக்கு பயன்படுத்த தரப்படுகிறது
  • மலிவு விலை அங்காடி உள்ளது அதில் மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன

எனது பள்ளி எனக்கு கல்வி அறிவையும் விட பல உன்னத விஷயங்களை எனக்கு கற்று தந்துள்ளது, உதாரணமாக பள்ளிக்கு செல்லும் போதும் வரிசையில் நடக்கும் பழக்கம் எனக்கு சிறு வயதில் இருந்தே கற்று கொடுக்க பட்டுள்ளது . உயர்வாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் இருப்பதினால் பெரியோர்களை மதிக்கும் பழக்கம் தாமாக எனக்கு வந்தது அதனால் ஆசிரியர்களுக்கு வணக்கும் சொல்ல நான் தவறுவதே இல்லை .

எனது பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுடன் நன்கு பழகுவதால் எனது பள்ளி வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கிறது .புதிய பரிமாணத்தில் தற்போதைய பள்ளி கல்வி மாறிவருகிறது ,அதற் கேற்ப எனது பள்ளியில் கீழ் கண்டா வசதிகள் புதிதாக பள்ளி நிர்வாகத்தினால் செய்து கொடுக்க பட்டுள்ளது

  • டிஜிட்டல் நூலகம் – கணினி வழியாக அரிதான புத்தகங்கள் எங்களுக்கு இதன் மூலமாக கிடைக்கின்றன
  • ஆங்கில மொழி ஆய்வறை – ஆங்கில மொழியை தொடர்ந்து கேட்பதினால் சுலபமாக ஆங்கிலத்தில் பேச முடியும் என்பதினால் இந்த ஆய்வறை உருவாக்க பட்டுள்ளது
  • டிஜிட்டல் கிளாஸ் ரூம் – பழைய கரும்பலகைகள் இருந்த போதிலும் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் திரைகள் ஒவ்வொரு வகுப்பறையிலும் உள்ளன
  • கலை அரங்கம் – மாணவர்களின் கலை அறிவை வளர்க்கும் நோக்குடன் புதிய புதிய கருவிகளுடன் கூடிய கலை அரங்கம் எங்கள் பள்ளியில் ஏற்படுத்த பட்டுள்ளன

2 COMMENTS

Comments are closed.