Site icon Tamil Solution

National Symbols in Tamil – இந்திய தேசிய சின்னங்கள்

National Symbols in Tamil – இந்திய தேசிய சின்னங்கள்:-

இந்திய தேசிய கோடி

செவ்வக வடிவில் காவி நிறம் மேலாகவும் ,வெள்ளை நிறம் நடுவிலும் ,பச்சை நிறம் கீழாகவும் சம அளவில் அமைந்துள்ள ,நடுவில் 24 ஆரங்களை கொண்ட நீல நிற சக்கரமும் கொண்டுள்ளது இந்திய தேசிய கோடி ஆகும் ,இது 22 ஜூலை 1947 இல் தேசிய கோடியாக அறிவிக்க பட்டது ,மேலுக்கு கவி நிறம் இந்திய தேசத்தின் தைரியத்தையும் கட்டுக்கோப்பையும் குறிக்கிறது ,நடுவில் உள்ள வெள்ளை நிறமும் அசோக சக்கரமும் அமைதியை குறிக்கிறது ,பச்சை நிறை இந்திய தேசத்தின் வளத்தையும் வளர்ச்சியையும் குறிக்கிறது


இந்திய தேசிய சின்னம்

இந்திய தேசிய சின்னமாக அசோக சின்னம் என்றழைக்கப்படும் நான்கு சிங்கங்களை கொண்டுள்ள சின்னம் அறிவிக்க பட்டுள்ளது ,இந்த சின்ன அனைத்து இந்திய ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ,இந்திய முத்திரை சின்னமாகவும் இது இடம்பெறுகிறது


இந்திய தேசிய கீதம்

ஜன கன மன என துவங்கும் வங்காள மொழியில் எழுதப்பட்ட பாடல் இந்திய தேசிய கீதமாகும் இதனை இந்திய கவி ரபீந்திர நாத் தாகூர் எழுதி உள்ளார் .இந்த பாடல் 24 ஜனவரி 1950 இல் தேசிய கீதமாக அங்கீகரிக்க பட்டது ,27 டிசம்பர் 1911இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் முதல் முறையாக பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது

சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.


இந்திய தேசிய பாடல்

இந்திய தேசிய பாடல் பங்கிம்சந்திர சட்டர்ஜி அவர்களால் உருவாக்க பட்ட வந்தே மாதரம் பாடலாகும் ,ஜனவரி 24 1950 இல் ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத் இந்த வந்தே மாதரம் பாடல் இந்திய சுதந்திர போராட்டத்தின் தாக்கத்தயும் வெற்றியையும் பறைசாட்டுவதாக அறிவித்தார் ,இந்த பாடல் 1896 முதல் இந்திய காங்கிரஸ் கூட்டங்களில் பாடப்பட்டு வருகிறது ,இது 1882 இல் வெளியான ஆனந்த் மாத் என்ற மேடை நாடகத்தில் இடம் பெற்ற பாடலாகும்


இந்திய தேசிய மரம்

இந்திய தேசத்தின் தேசிய மரம் ஆலமரமாகும் ,இது 1950 ஆம் ஆண்டு தேசிய மரமாக ஏற்றுகொள்ளப்பட்டது ,மருத்துவகுணமுடைய ஆலமரத்தை நம் தேசிய மரமாக கொண்டுள்ளது நமக்கு பெருமையே ஆகும்


இந்திய தேசிய மலர்

தாமரை இந்திய தேசிய மலராகும் ,இந்திய கலாச்சாரத்தை தனது இருப்புமூலம் தாமரை உணர்த்துவதாக அறிவிக்க பட்டுள்ளது


இந்திய தேசிய பழம்

இந்திய தேசிய பழமாக மாம்பழம் அங்கீகரிக்க பட்டுள்ளது ,100க்கும் மேற்பட்ட பழ வகைகளை கொண்டுள்ள மாம்பழம் மாம்பழம் பழங்களின் அரசன் என்று அறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது .


இந்திய தேசிய பறவை

மயில் இந்திய தேசத்தின் தேசிய பறவையாக அறியப்பட்டுள்ளது ,இந்திய கலாச்சாரமான வேற்றுமையில் ஒற்றுமை என்பதனை தனது பலதரப்பட்ட வண்ணம் மூலம் பிரதிபலிப்பதால் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது .


இந்திய தேசிய நதி

தேசிய நதியாக கங்கை நதியை நாம் கொண்டுள்ளோம் ,கங்கை நதியை கடவுளாக இந்திய மக்கள் கொண்டாடுவதும் ,இந்திய வரலாற்றில் அதிக இடம் பெரும் நதியாக இருப்பதாலும் ,கங்கை நதி தேசிய நதியாக அறியப்படுகிறது


இந்திய தேசிய விலங்கு

இந்திய தேசிய விலங்காக நாம் புலியை கொண்டாடுகின்றோம் ,இந்திய துணை கண்டத்தில் மட்டுமே காணப்படும் பாந்தெரா டைகிரிஸ் என்ற வகை புலி இதுவாகும் ,


இந்திய தேசிய புராதன விலங்கு

இந்திய தேசிய புராதன விலங்காக யானை அறியப்படுகிறது ,இந்த முடிவு 2010 அக்டோபர் 22ம் தேதி எடுக்கப்பட்டது ,இந்தியாவில் 29000க்கும் மேலாக இருக்கும் யானையை இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் உணர்திறன் சின்னம் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது


இந்திய தேசிய நீர் வாழ் விலங்கு

இந்திய தேசிய நீர் வாழ் விலங்காக கங்கை நதியில் காணப்படும் ஆற்று ஓங்கில் எனப்படும் கங்கை நதி டால்பின் அழைக்க படுகிறது ,இது நன்னீர் வாழ் விலங்காக 2010-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது

Exit mobile version