Site icon Tamil Solution

natpu katturai in tamil – நட்பு கட்டுரை

natpu katturai in tamil – நட்பு கட்டுரை :- நட்பு வயது ,பாலினம் ,கலாச்சாரம்,மொழி என அனைத்தையும் கடந்ததாகும். நட்பு கொண்ட ஒருவருக்கு எப்போதும் வாழ்க்கையில் பெரும் துன்பம் நேர்வதில்லை. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனையோ நபர்களுடன் பழக நேரிடுகிறது, ஆனால் சில உன்னத மனிதர்களிடம் நட்பு முளைக்கிறது.இன்றைய காலகட்டங்களில் உறவினர்களுக்கு மேலாக நண்பர்களின் உதவியே நல்வாழ்விற்கு தேவைப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் நட்பு என்பது மிக முக்கியமானதாகும். நல்ல நண்பர்களை உடையவருக்கே மிக முக்கிய வாழ்கை படங்கள் கிடைக்கின்றன. நாகரீக வளர்ச்சியில் தனிமையாகிப்போன குடும்ப முறையில் உறவினர்களை தாண்டிய உறவு நண்பர்களே ஆவர். நெருங்கிய உறவினர்களிடம் கூட கேட்க முடியாத உதவிகளை நண்பர்களிடம் கேட்டு பெறமுடியும்

பள்ளி காலங்களில் ஏற்படும் நட்பு வட்டமானது, கல்லூரி, குடும்ப வாழ்கை என நீள்கிறது. படிப்பு சம்பந்த பட்ட பிரச்சனைகள் படிப்பிற்க்கான உதவு போன்றவை நட்பு வட்டத்தில் எளிதாக கிடைக்கிறது. வளர்ந்த நகரங்களில் வாழும் குடும்பங்களில் உடற்பயிற்சி செய்ய கூட வசதி இல்லாமல் போய்விட்டது, நட்பு வட்டம் உடைய இளைஞர்கள் மட்டுமே சிறு சிறு விளையாட்டுக்கள் மூலமாக உடலை பராமிருக்கின்றனர்

மேற்படிப்பு வேலைவாய்ப்பு போன்ற அடுத்த கட்ட முயற்சிகளுக்கு நண்பர்கள் மட்டுமே உதவுகின்றனர். எந்த துறையில் உயர்கல்வி தேந்தெடுப்பது எந்த கல்லூரியை தேர்வு செய்வது போன்ற கேள்விகளுக்கு இளைஞர்கள் பெற்றோர்களை விட நண்பர்களையே சார்ந்துள்ளனர்.

Exit mobile version