Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை

Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை – நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை என்ற வாக்கியம் உண்மையானதாகும்.நம்மை சுற்றியுள்ள வாயுமண்டலம், காலநிலை,மரங்கள்,மலர்கள்,வயல்கள் என அனைத்தும் இயற்கை என்ற சொல்லில் அடங்கும்.இயற்கையை பற்றிய விரிவான கட்டுரையை நாம் இங்கே காண்போம்.

Nature Essay in Tamil

நாம் காணும் அனைத்தும் இயற்கையின் படைப்பே ஆகும். இயற்க்கை மனித அறிவியில் வளர்ச்சியில் சிதைக்க பட்டுவரும் இந்த காலகட்டத்தில் கூட,தன்னை நாளுக்கு நாள் மெருகேற்றி புதிய உன்னதத்தை மனிதர்க்கு கொடுக்கிறது.

அறிவியல் ஆய்வின்படி நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது இயற்க்கையின் மாற்றங்கள்.புவி தோன்றிய காலகட்டத்தில் எந்த ஒரு உயிரினமும் வாழ தகுதியற்றதாகவே இருந்தது.மிகவும் வெப்பமயமான புவி மெதுவாக குளிர்ந்து இன்று நாம் வாழும் மழை பொழியும், அழகிய வானவில் காட்டும், வான ஜாலங்கள் காட்டும் உன்னத கோலாக மாறியது.இந்த அறிவியல் கோட்பாட்டின் படி இயற்கை தன்னை தானே மாற்றியமைத்து புவியை மனிதனுக்கு தன்னை பரிசாக கொடுத்துள்ளது.

இயற்கை மனிதர்கள் வாழும் இடமாக தன்னை அர்ப்பணித்து கொண்டாலும் வன விலங்குகள்,பறவைகள்,மரங்கள் ,அருவிகள் என அனைத்திற்கும் இயற்கையில் பங்கு உண்டு. மனித தன்னுடைய சுய லாபத்திற்க்காக இயற்கையை சூராடிய போதும் இயற்கை பேரழிவுகள் எப்போதும் தொடர்ந்து நடப்பதில்லை. எவ்வளவு உக்கிரமான ஆபத்துகளை கடந்து இயற்கை இந்த வாழ தகுதியுடைய கோலத்தை நமக்கு நிர்மாணித்துள்ளது.

துரதிர்ஷ்ட வசமாக மனிதன் தன்னுடைய வளர்ச்சியின் போக்கியில் இயற்கையை கவனிக்க தவறிவிட்டான்.இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகள் தற்போது பேசு பொருளாக உள்ளன. இயற்கையின் படைப்பில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் இயற்க்கை தன்னை புதுப்பிக்க தவறுவதில்லை.

அகில உலக அரசுகள் அனைத்தும் தற்போது எடுத்துள்ள முக்கிய பிரச்னை இயற்க்கையை காப்பதே ஆகும். புதிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மரம் நடுவது,இயற்க்கை வளங்களை பாதிக்காத வகையில் மனித வளர்ச்சியை கட்டுப்படுத்தல் போன்ற முயற்சிகளை எடுக்க தொடங்கிவிட்டன.

இயற்க்கை மனிதனுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை கொடுத்துள்ளது.பறவைகள் ஒலியுடன் கூடிய இனிய காலை பொழுது,தூய குடிநீர்,நாம் சுவாசிக்க ஏதுவான இயற்கயான தென்றல் காற்று,நாம் பசியாற பலன்களும் பல தனியா வகைகளை கொடுத்துள்ளது.இத்தகைய பேரன்பை காட்டும் இயற்கையை காப்பதே ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்

4 COMMENTS

Comments are closed.