Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை

Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை :- நீர் என்றால் வாழ்கை ,இயற்க்கை நமக்கு கொடுத்திருக்கும் மிக பெரிய கொடை நீர் ஆகும் ,மனித வாழ்விற்ற்கு முதல் அத்தியாவிசய தேவை நீர் மட்டுமே,இந்த பூமியின் உயிர்கள் ஜீவிக்க உதவியது நீரின் இருப்பே ஆகும்.மனிதர்களுக்கு மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா உயிருக்கும் நீரே கடவுளாகும் .நமது பூமியை அதிக பகுதிகள் நீரினால் மூடப்பட்டிருப்பினும் மனிதனுக்கு தேவையான நன்னீர் குறைவாகவே உள்ளது ,அவற்றை நமக்கு கொடுக்கும் மழை ,அதை சேமித்து வைக்கும் வாய்க்கால் ,ஆறு ,குளம் ,குட்டை என அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்

Neerindri Amayathu Ulagu Katturai in tamil

மனித உடலின் நீர் தேவை

மனிதன் நோயில்லாமல் வாழ்வதற்கு தனது உடலில் நீரின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதே முழு முதல் கடமையாகும் .மனித உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல் உண்ணும் உணவை செரிப்பதிலும் மிக அதிக பங்கு வகிகின்றது இந்த நீர் ,நமது தோல் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் ,உடல் அங்கங்களின் உறுதியான செயல்பாடுகள் ,உள்ளுறுப்புகளின் உன்னத செயல்பாடுகள் என அனைத்திற்கும் நீர் பயன்படுகிறது .மனித உடலில் தேவையான அளவு நீரை கட்டுக்குள் வைத்திருப்பதே இந்த உறுப்புகளை பாதுகாத்து முதுமை காலம் வரை நோயின்றி வாழ வழி வகை கிடைக்கும்

அன்றாட வாழ்வில் நல்ல நீரின் அவசியம்

  • சமைப்பதற்கு பயன்படுகிறது
  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள உதவுகிறது
  • தனி மனித சுகாதாரத்தை பேணிக்காக்க உதவுகிறது
  • அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அத்தியாவிசயமாகிறது
  • விவசாயம் செய்ய அடிப்படையாகிறது
  • சிறு தொழில் செய்ய முதலீடாகிறது
  • காற்றின் தரத்தை கொடுக்கும் மரங்களுக்கும் உணவாகிறது
  • மனித கலாச்சாரத்தின் ஆணி வேறாகிறது (நீருள்ள இடங்களில் தனது வாழ்விடத்தை மனிதன் அமைத்து கொண்டதினால்)

அன்றாட வாழ்வில் கடல் நீரின் அவசியம்

  • கடல் சார் உயிர்னங்களுக்கு உயிர் நாடியாகிறது
  • பூமியின் உயிர் ஜனிக்க காரணமானது
  • பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்திக்கு வழிவகுக்கும் பாசிகளை வாழிடமாகிறது

நீரின்றி அமையாது உலகு

இவ்வளவு நன்மை தரும் இந்த நீரின் தன்மையை கெடுப்பதும் ,அதன் பாதைகளை அடிப்பதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகமாகும் ,இந்த நீரின் மாசுபாடுகளை தொடர்ந்து செய்து வந்தால் நமது அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது.