Site icon Tamil Solution

பல்லி விழும் பலன் மற்றும் அதற்க்கான பரிகாரங்களும் (Palli Vilum Palan) 2021

palli vilum palan

palli vilum palan

பல்லி விழும் பலன் மற்றும் அதற்க்கான பரிகாரங்களும் (Palli Vilum Palan) 2021 :- நமது அன்றாட வாழ்வில் நமது வீட்டில் வாழும் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்களையும் ,பல்லி விழுவதால் ஏற்படும் மனக்கசப்பு மற்றும் தீங்கான பலன்களுக்கான பலன்களையும் இந்த பக்கத்தில் நாம் பார்க்கலாம்

தலையில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

தலையில் பல்லி விழுவது எப்போதும் அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது , பண்டைய காலம் தொட்டு இந்த பலன்களை நாம் பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறோம் அந்த வகையில்

கண்ணில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

கண்ணில் பல்லி விழுவதினால் எப்போதும் நன்மையே நிகழும் ,கண்ணின் இமையில் விழுந்தாலும் ,கண்ணிற்கு உள்ளாகவும் விழுந்தாலும் ஒரே ஜோதிட பலனே கிடைக்கும் ,கண்ணில் பல்லி விழுவதினால் சுகம் உண்டாகும் என்பதே ராசி பலனாகும் ,கண்ணில் பல்லி விழுவதினால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றான சுகம் பலனை மேலும் அதிகரிக்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாகும் ,குலதெய்வத்தை நேரில் சென்று பூஜிப்பதால் கிடைக்கும் நன்மையை போன்றே பூஜை அறையில் உள்ள படங்களை அல்லது பிடி மண் வைத்து பூஜிப்பதால் கிடைக்கும் நன்மையும் உகந்த தாகவே இருக்கும்

மார்பில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

ராசி நட்சத்திரங்களின் பலனாக உச்சபட்ச நல்ல நேரத்தில் இருப்பவருக்கு மட்டுமே பல்லி மார்பில் விழும் ,பல்லி மார்பில் விழுவதினால் லாபம் என்ற பலனே ஆண்டாண்டு காலமாக கூறப்படுகிறது ,ஒருவருக்கு பல்லி மார்பில் விழும்போதே அவருக்கு உச்சகட்ட நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று ஜோதிட வல்லுனர்களும் ,சாஸ்திரங்களும் கூறுகின்றனர்,தொடர்ந்து தடைபெற்று வந்த தடங்கல் பட்டு வந்த காரியங்களை அடுத்தபடியாக செய்தால் நன்மை உண்டாகி எடுத்த காரியம் உடனடியாக நடைபெறும் ,எனவே பல்லி ஒருவரது மார்பில் விழும்போது நல்ல நேரம் தொடங்கி விட்டதை உணர்ந்து நல்ல காரியங்களை செய்ய தொடங்குங்கள்

வயிற்றில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

வயிற்றில் பல்லி விழுவதினால் விவசாயம் சம்பந்தமான தொழில் செய்பவருக்கும் ,நிறைந்த வேலை பார்பவருக்கும் நன்மையான காலத்தை குறிக்கும் ,பல்லி விழுவதினால் தானிய வரவு என்ற ஒற்றை குறிப்பு இதிகாச நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்டு இருப்பது சான்றாகும் ,உடையின் மீது வயிற்று பகுதியில் விழும்போது மட்டுமே இந்த பலன் கிடைக்கும் ,அன்றி குறிப்பாக தொப்புள் பகுதியில் விழும்போது அவருக்கு வேறு பல்லி விழும் பலன் எழுத பட்டுள்ளது

மணிக்கட்டில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

வலது கை மணிக்கட்டில் பல்லி விழுவதினால் கீர்த்தி உண்டாகும் என்றும் ,இடது கை மணிக்கட்டில் பல்லி விழுவதினால் பீடை உண்டாகும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது ,இடது கையில் பல்லி விழுந்து அதனால் தேவையில்லாத தீமைகளை அடைய நேர்ந்தால் பெருமாள் வழிபாடே தீர்வாகும்,உங்கள் வீட்டில் பெருமாள் படம் வைத்து வழிபட்டு வரும் பழக்கத்தை தொடங்குவதினால் பல்லி விழும் தீமைகள் அடங்கும்

முகத்தில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

முகத்தில் பல்லி விழும்போது உறவினர் வருகை ,நல்ல செய்தி கொண்டுவரும் இறை தூது தகவல் போன்றவை கிடைக்கும்.முகத்தில் பல்லி விழுவதினால் சிறு நன்மை உண்டாகும் என்றபோதிலும் எப்போதும் இருக்கும் பல்லி பலனை இரட்டிப்பாக்க மிகுந்த பக்தியும் பொறுமையும் அவசியமாகிறது.எப்போதும் கடவுள் நம்பிக்கை உடையவருக்கு முகத்தில் பள்ளி விழும்போது இரட்டிப்பு சந்தோஷமும் வரவும் கிடைக்கும்

பாதம் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

இடது பாதம்

இடது பாதத்தில் பல்லி விழுவதினால் துக்கம் உண்டாகும்

வலது பாதம்

வலது பாதத்தில் பல்லி விழுவதினால் நோய் உண்டாகும்

பாத விரல்கள்

பாதத்தின் இடது விரலில் படும்போது நோயும் ,இடது பாத விரலில் படும்போது பயமும் உண்டாகும்

பாதத்தில் பல்லி விழுவதினால் ஏற்படும் துயரங்களுக்கு எப்போதும் குலதெய்வ வழிபாடே சிறந்ததாகும் ,வெள்ளி மற்றும் வியாழ கிழமைகளில் விளக்கேற்றும் பழக்கத்தை தொடங்குவதே பல்லி பாதத்தில் விழுவதினால் ஏற்படும் கேடுகளுக்கு பரிகாரமாக சொல்லப்படுகிறது

தொப்புள் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

தொப்புள் பகுதியில் பல்லி விழுவது எப்போதும் நன்மையையே கொடுக்கும் ,தொப்புள் பகுதியில் எங்கு பல்லி விழுந்தாலும் அவருக்கு பொருள் வரவு என்ற ஜோதிடத்தின் பலனாக கருதப்பட்டாலும் ,ஒருவரது ஜாதக பலன் உச்ச நிலையில் இருக்கும் போது பல்லி தொப்புளில் விழுவதினால் மிக விலையுயர்ந்த ஆபரணங்கள் ,வைரம் போன்ற கற்கள் கைவசமாகும்.சாதாரண நிலையில் ஒருவருக்கு பள்ளி தொப்புள் பகுதியில் விழும் வேலையில் அவருக்கும் கிடைக்கும் பலன்களை அதிக படுத்த ஏதாவது ஒரு அம்மன் கோவில் அல்லது மாரியம்மன் கோவிலுக்கு சென்று உப்பு வைத்து வணங்குவது மிக அதிக பலனை தரும் என்பது ஐதீகமாகும்

பெரிய தொப்புள் கடவுள் என பால தூதர்கள் சிலை அம்மன் கோவில் கோபுரங்களில் அமைக்க படுவதும் இதுபோன்றதொரு நிகழ்வில் அடிப்படையில் என்றே ஜோதிட பலன்கள் வழங்கும் சுவடிகள் குறிப்பிடுகின்றன

தொடையில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

தொடையில் பல்லி விழுவது அரிதாகவே நடக்கும் நிகழ்வாகும் ,இருந்த போதிலும் ஒருவர் தரையில் அல்லது நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது பல்லி உங்களின் தொடையில் விழுந்தால் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பது ஜோதிடத்தின் முதன்மை கருத்தாகும்,உச்ச பட்ச ராசி நிலையில் இருக்கும் ஒருவருக்கு இது சிறு துன்பத்தையே கொடுக்கும் என்றாலும் ,ஜோதிடதின் படி ராசி நட்சத்திரங்கள் துணையில்லாத போது மிகுந்த மன சஞ்சலத்தையும் ,மனோ பயத்தையும் தரும் .

பிருஷ்டத்தில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

பிருஷ்டத்தில் பல்லி விழுவது அரிதாகவே நடக்கும் நிகழ்வாகும் . ஓய்வெடுக்கும் வேளைகளில் சில சமயம் இது போன்ற பல்லி விழும் நிகழ்வுகள் நடப்பதுன்டு ,இந்த நிகழ்வுக்கு வலதுபுறம் செல்வம் வரும் என்றும் ,இடதுபுறம் சுகம் கிட்டும் என்றும் பொதுவாக கூறப்படுகிறது ,இது போன்ற நிகழ்வுகள் நிகழும்போது உங்கள் ராசி பலனை முழுமையாக உயர்த்தும் என்பதினார் உங்கள் குலதெய்வத்தை வணங்குவது மேலும் பலன் தரும்

காது பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

காதில் பல்லி விழுவது எப்போதும் பெரியோர்களால் நல்ல நிகழ்வாகவே பார்க்க படுகிறது ,ஏனென்றால் எந்த ராசி காரராக இருந்தாலும் நன்மையே நடக்கும் ,குறிப்பாக வலது புற காதில் பல்லி விழும்போது நீண்ட ஆயுளும் ,இடது புற காதில் பல்லி விழும்போது பண லாபமும் கிடைக்கும் ,விநாயகரை வணங்குவதினால் நீண்ட ஆயுளையும் ,பணவரவையும் சேர்ந்து அனுபவிக்க முடியும் ,அது எந்த பகுதியில் இருக்கும் காதில் விழுந்தாலும் ,விநாயகரை கும்பிடும்போது நன்மைகள் இரட்டிப்பாகும்.

கழுத்தில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

கழுத்து பகுதியில் பல்லி விழும்போது வலது புறமாக விழுந்தால் காரிய ஜெயந்தி அதாவது நீண்ட நாட்கள் இழுபறியில் உள்ள காரியங்கள் நிறைவேறும் ,இடதுபுறம் விழுந்தால்

உச்ச கபாலத்தில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

தலையில் விழும்போதே பொடணி கபாலத்தில் பல்லி விழுவதனால்,தலையில் விழும் பலன்களை இது கொடுக்காது ,மாறாக அதீத செல்வ வரவையே இது கொடுக்கும்,தலையில் விழுந்ததா கபாலத்தில் விழுந்ததா என்ற மனகுழப்பத்திற்கு தீர்வாக குலதெய்வ வழிபாடு புதிய நம்பிக்கையையும் ,பல்லி விழும் பலனாக சனி விடுபடும் போது கிடைக்கும் உச்ச ராசி கிட்டும்

விரல் நகத்தில் பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

இடதுகை நகங்களில் பல்லி விழுந்தால் தொழிலில் ,அல்லது வாழ்வில் நட்டம் உண்டாகும் ,வலது நகங்களில் பல்லி விழுந்தால் பணம் மற்றும் பொருள் விரயம் உண்டாகும்

மூக்கு பல்லி விழுவதனால் ஏற்படும் பலன்கள்

மூக்கில் பல்லி விழுது ஒருவர் படுத்திருக்கும் போது ஏற்படும் நிகழ்வாகும் ,நாசி பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுவதினால் கவலை ஏற்படும் ,அதே நேரத்தில் மூக்கின் நாசி பகுதியில் இடது புறம் விழுந்தால் வியாதி ஏற்படும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது,இதற்க்கு பரிகாரமாக மூன்று வெள்ளி கிழமைகள் முருகனுக்கு நெய் விளக்கேற்ற வேண்டும் ,இவ்வாறான பரிகாரம் செய்யும் போது வியாதி மற்றும் கவலை போன்ற தீங்கான செயல்கள் நிகழாது

Exit mobile version