Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Pen Kalvi Katturai In Tamil
Tamil Essays

Pen Kalvi Katturai In Tamil – பெண் கல்வி கட்டுரை

Pen Kalvi Katturai In Tamil – பெண் கல்வி : – தொட்டிலை காட்டும் பெண் கை உலகை ஆளும் சக்தி படைத்தது என்று சான்றோர் அத்தகையா சக்தி வாய்ந்த பெண்ணின் கையை பலப்படுத்த பெண் கல்வி அவசியமானதாகும்

Pen Kalvi Katturai In Tamil

உலக புகழ் பெற்ற பிரான்ஸ் வீரன் நெப்போலியனிடம் “பிரான்சின் தற்போதைய தேவை என்ன ? ” என்ற கேள்வி கேட்கப்பட்டது . பிரான்ஸ் மட்டுமல்ல எந்த ஒரு தேசமும் முன்னேற பயிற்சி பெற்ற கல்வி அறிவு கொண்ட அன்னையர்களே தேவை என்று பதில் சொன்னார் . ஒரு பெண்ணே ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராவர் அந்த பெண் கல்வி அறிவு பெற்றவளாக இருந்தால் மட்டுமே அந்த குழந்தை சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைய முடியும்.

பண்டைய காலம் தொட்டே பெண்களை வீட்டு வேலை செய்யும் வேலையாளாக பார்ர்கும் பார்வை இருந்து வந்தது . நாகரிகம் வளர்ந்த இந்த கால கட்டத்தில் கூட அத்தகைய எண்ணம் குறைந்த பாடில்லை . அடுப்படியில் அடைந்து கிடைக்கும் கோடான கோடி பெண்களின் வாழ்வை வளம் பெறச்செய்ய கல்வி அறிவு ஒன்றே காரணியாக அமையும் .

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை களையவும் ,புதிய நம்பிக்கையை கொன்ற பெண்ணாக அவளை மற்றவன் இளங்களாம் தொட்டே அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டுதல் அவசியமாகும் . பல மேலை நாடுகளை போல் நம் நாட்டிலும் அறிவியல் அறிஞர் ,வானூர்தி ஓட்டுநர் ,வகை ஒட்டி ,பொறியாளர் என ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் நம் நாட்டு பெண்களும் செய்ய ஆர்மபித்து விட்டனர் ,இதற்கான முக்கிய காரணியாக இருப்பது பெண் கல்வியே ஆகும்.

கிராமப்புறங்களில் மட்டும் அல்லாது நகர் புறங்களிலும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் செயல்களை நமது அரசு வெகு காலங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது . மகாத்மா காந்தி தொடங்கி பாரதி வரை அனைத்து தேச தலைவர்களின் முக்கிய செய்தி பெண் கல்வியே ஆகும் . ஒவ்வொரு வீட்டிலும் சுதந்திரமற்ற பெண்கள் இருக்கும்போது சுதந்திர நாடக இருந்த போதிலும் அந்த நாடு சுதந்திரம் அற்ற நாடாகவே கருதப்படும்.

அணைத்து துறைகளையும் ஆண்களுக்கு நிகரான வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு என்று ஒதுக்க படுகின்றன ஆனால் அதற்க்கான தகுதியான பெண்கள் கிடைப்பது குறைவாகவே உள்ளது . பட்டம் பயில நகரங்களுக்கு செல்ல பெண்களுக்கு இருந்த தடைகள் நீங்கினாலும் , அவர்கள் கல்வி கர்ப்பத்தில் பல இடைஞ்சல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்திய அரசின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி 65 விழுக்காடு பெண்களே கல்வி அறிவு பெற்றுள்ளனர் .அவர்களையும் மேற்படிப்புக்கு சென்ற பெண்கள் இன்னும் குறைவாகவே உள்ளது .

பெண் கல்வி ஆரம்பிக்கும் பொழுது வரதட்சணை கொடுமைகள் போன்ற பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள் தாமாக விலக ஆரம்பிக்கின்றன.