Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

சுதந்திர தினம் கட்டுரை – suthanthira thinam katturai in tamil

சுதந்திர தினம் கட்டுரை – suthanthira thinam katturai in tamil :- நமது சுதந்திரதினம் பலரது உயிர் தியாகத்தினால் கிடைத்ததாகும். பிரிட்டிஷ் அரசிடம் இருந்து நாம் ஆகஸ்ட் 15இல் நாம் பெற்ற சுதந்திரத்தை ஆண்டு தோறும் கொண்டாடுவது அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

suthanthira thinam katturai in tamil

பல இன்னல்களுக்கு பிறகு 1945 ஆகஸ்ட் 15 அன்று நமது தேசியக்கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.சுதந்திரதினம் ஏற்றத்தாழ்வு,மொழி,ஜாதி ,மதம் ,நிறம் என அனைத்து வேறுபாடுகளுமின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இத்தினத்தில் இந்திய தேசிய கொடியானது பாரத பிரதமர் செங்கோட்டையிலும், ஒவ்வொரு மாநில முதல்வர்கள் அவரவர் மாநிலத்திலும்,ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும்,அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் ஏற்ற படுகிறது.

செங்கோட்டையில் அனைத்து பாதுகாப்பு துறையினரும், அரசு துறையினரும் நமது பெருமைகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இந்திய போர் விமானங்கள் நடத்தும் சாகசங்கள் உலகளவில் பேசப்படுகின்றன.

இந்திய அரசு தனது சுதந்திர தினத்தை அரசு விழாவாக கொண்டாடுகிறது. முழு இந்தியாவிற்கும் இத்தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு ,குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கு இனிப்பு வழங்கி தேசிய கீதம் உரக்க பாடப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறு சிறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று நாம் நன்றி தெரிவிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியதாகும், சுயநலமற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், நாட்டுக்காக உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்கள் என இந்த பட்டியல் மிகப்பெரியதாகும்.

இந்திய சுதந்திர தினம் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றதற்கு காரணம், நாம் சுதந்திரம் பெற்ற விதம் காரணமாக அமைகிறது, உலகளவில் அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற நாடு நம்முடையது. இந்த தினத்தின் முதல் கடமையாக நமக்கு கிடைத்த சுதந்திரத்தை காப்பதே ஆகும்.