Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

கல்வி செய்திகள்

Tamil Nadu 9th Std To 11th Std Schools Closed (20.03.2021)

Tamil Nadu 9th Std To 11th Std Schools Closed (20.03.2021) :- தமிழகத்தில் மீண்டும் கோரோனோ பரவல் அதிகமாக இருப்பதால் ஒன்பது ,பத்து ,பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு.

Tamil Nadu 9th Std To 11th Std Schools Closed

தமிழகத்தில் மீண்டும் கோரோனோ பாதிப்பு அதிகமாகி வருவதால் தமிழக சுகாதார துறை அளித்த சான்றுகளின்படி பள்ளிகளை தொடர்ந்து நடத்த தயக்கம் காட்ட பட்டது . சில தினங்களாக பள்ளி மாணவர்களிடமும் கோரோனோ பரவல் அதிகமாவதால் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெற்று வந்த பள்ளி வகுப்புகள் இன்றுடன் நிறுத்த படுகின்றன ,வரும் 22 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் விடுதிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என்று தமிழக முதல்வர் ஏற்கனவே தெரிவித்திருந்த காரணத்தினால் ,சில மாணவர்களே பள்ளிக்கு வந்து பயின்று வந்தனர் . தற்போது ஏற்பட்ட அதிக பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்படுவதால் ,மீண்டும் இந்த ஆண்டு பள்ளிகள் அவர்களுக்கு திறக்க படாது என்றே அனைவரும் கருதுகின்றனர்