Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamilar Panpadu Katturai in Tamil
Tamil Essays

Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை

Tamilar Panpadu Katturai in Tamil :- எப்போதுமே இந்திய கலாச்சாரத்திற்கு உலகளவில் வியத்தகு வரவேற்பு உண்டு .குறிப்பாக கலாச்சாரங்களின் உச்சம் என இந்திய கலாச்சாரங்களின் தலைமையாக தமிழர் பண்பாடு போற்றப்படுகிறது . அத்தகைய உன்னத இடத்தை பெற்றுள்ள தமிழர் பண்பாடு பற்றிய முழுமையான கட்டுரை இதுவாகும் .

Tamilar Panpadu Katturai in Tamil - தமிழர் பண்பாடு கட்டுரை

தமிழர் கலாச்சாரம் மொழி ,இசை,பாரம்பரிய நடனம் ,கோவில்கள்,கல்வெட்டுகள் ,உணவு ,பழக்க வழக்கங்கள் ,விருந்தினர் உபசரிப்பு ,இலக்கியம் ,தத்துவம்,பாரம்பரிய உடைகள் ஆகியவற்றால் மேலோங்கி நிற்கிறது

ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு தமிழ் மொழியை ‘செம்மொழி‘ என்று 2004 ஆம் ஆண்டு அறிவித்தது .அத்தகைய மொழி பேசும் தமிழர் எத்தகைய பண்பாடு கொண்டிருப்பர் என்பது பற்றிய ஆவணங்களை உலக நாடுகள் அதிகம் தேடுகிறன்றன.

சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளான கீழடி போன்ற இடங்களில் இருந்து நமக்கு கிடைத்திருப்பது கிறிஸ்து பிறப்பதற்கு முந்தய கால பண்பாட்டை விளக்கும் உண்மையின் வெளிப்பாடே ஆகும் .தமிழரின் பண்டைய பண்பாடு உலகத்திற்கு தெரிய வரும்போது இன்றளவும் பயிலப்படும் வரலாற்று கட்டுரைகள் மாற்றி எழுதப்படும்.

தமிழர் கலாச்சாரத்தை பற்றி ஆய்வு செய்ய தமிழக கோவில்களே முதன்மை இடமாக கருதப்படுகிறது.தோராயமாக முப்பத்தி மூன்றாயிரம் கோவில்கள் தமிழகத்தில் உள்ளன ,இவற்றில் பெரும்பாலானவை ஆயிரம் வருடம் பழமைவாய்ந்த கோவில்களாக உள்ளன .குறிப்பாக ராஜா ராஜர் கட்டிய தஞ்சாவூர் கோவில் அதன் ஒற்றை கல் கட்டுமானத்திற்க்காக உலக கட்டிடக்கலை ஆய்வுகளில் முதலிடம் பிடிக்கிறது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , மகாபலிபுரம் கரையோரக் கோயில்,கைலசநாதர் கோயில்,ஏகாம்பரேஸ்வரர் கோயில்,வரதராஜ பெருமாள் கோயில் போன்றவை தமிழர் கட்டிட கலை மற்றும் தமிழர் பண்பாட்டை பறைசாற்றுகின்றன.

இசை மற்றும் நடனம் மூலமாகவே உலக அளவில் அணைத்து கலாச்சாரங்களும் மதிப்பிடப்படுகின்றன ,அந்தவகையில் தமிழர் இசை மற்றும் நடன கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் ஒருவருக்கு பரதநாட்டியம் ,மயிலாட்டம் ,கரகாட்டம் ,கோலாட்டம் ,ஒயிலாட்டம் ,கும்மி பாட்டு ,காவடி ஆட்டம் என உலக அளவில் பிரசித்தி பெற்ற கலைகள் இங்கு தொன்று தொட்டு இன்றளவும் புழக்கத்தில் உள்ளன .எத்துணை அந்நிய ஆட்சியாளர்கள் வந்தாலும் இக்கலைகள் அவர்களையும் வசீகரப்படுத்தி மென்மேலும் உயர்ந்தனவே அன்றி அழிந்து போனதாக எந்த விளக்கமும் இல்லை .

ஒரு கலாச்சாரத்தின் கலை என்பது பண்டையகால வரலாற்றை வாய்மொழியாக தலை முறை தலைமுறையாக கடத்துவதில் வல்லமை உடையது . எனவேதான் தமிழர் தம் பண்பாட்டை ஓவியக்கலை ,கட்டிடக்கலை ,நடனக்கலை ,இசைக்கலை ,இலக்கிய கலை போன்று ஒவ்வொரு கலை பிரிவிலும் தனித்துவமான வரலாற்று நிகழ்வுகளை விட்டு சென்றுள்ளனர் . உலக வரலாற்றை எழுதும்போது எப்படி பண்டைய அறிவுசார் நூல்கள் உண்மை ஆவணங்களாக சமர்ப்பிக்க பட்டனவோ அதே போல் தமிழர் பண்பாட்டை எழுதும்போது தமிழர்தம் வரலாற்றை எழுத்து மூலமாக அடுத்த தலைமுறைக்கு கடத்த இலக்கியங்களை கல்வெட்டு , சிற்ப வேலைப்பாடுகள் போன்ற வற்றை பயன்படுத்தி உள்ளனர்.

பண்டைய கதைகள் அல்லாமல் தமிழக கலாச்சாரம் பற்றி உலகத்திற்கு தெரியப்படுத்த நிறைய புவிசார் குறியீடு பெற்ற பல அம்சங்கள் உள்ளன . உதாரணமாக காஞ்சிபுரம் வேலைவாடுகளுடன் கூடிய பட்டு சேலைகள் ,தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகியவை கிறிப்பிடப்படுகின்றன