10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது – 3ஆம் அலை ஊரடங்கு அறிவிப்பு

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது – 3ஆம் அலை ஊரடங்கு அறிவிப்பு :- தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோயின் தாக்கம் காரணமாக ,1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்கு தடை மற்றும் ,கல்லூரிகளுக்கு விடுமுறையும் ,கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு போன்றவை அறிவிக்க பட்ட நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் நேரடி வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்க பட்டுள்ளது

No Leave for 10,11,12 school students
Student, Indian, Working Book, Pencil,

கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் விடுமுறை

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி 15முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் முடிவடைந்து பின்னர் விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் மாணவர்களிடையே எழுந்துள்ளது .

கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை

கல்லூரி மாணவர்களுக்கு 20ஆம் தேதி வரை ஊரடங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ,இதன் காரணமாக அவர்களுக்கு நடைபெற்று வரும் நேரடி தேர்வுகள் நிறுத்தப்பட்டு ஒத்தி வைக்க பட்டுள்ளது .மீண்டும் நடைபெறும் தேர்வும் நேரடி தேர்வாகத்தான் இருக்கும் என்றும் ஆன்லைன் தேர்வுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது

என்ன சொல்கிறார் அன்பில் மகேஷ்

தமிகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயின் தாக்கம் காரணமாக உயர் கல்வி துறை அமைச்சர் தகவல்களை தெரிவித்து வரும் நிலையில் ,எப்போதும் செய்தியாளர்களை சந்திக்கும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று இன்னும் செய்தியாளர்களை சந்திக்க வில்லை ,இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொண்டு வரும் அவர் மாலை நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது