தமிழ்நாடு அரசு தொழிற்பயற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை!

தமிழ்நாடு அரசு தொழிற்பயற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை!

தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து ஜனவரி 5 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, 3 பணிமனை உதவியாளர், 1 பண்டக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதற்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.1.2020 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். BC & MBC / DNC பிரிவினர் 32 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST மற்றும் அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

BC / MBC / SC பிரிவினர் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருந்தால் உச்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சவயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு லெவல் 5 ன் படி, மாதம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு தகுதியானவர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். கடைசி நாளுக்கு பின்னர் வரும் விண்ணப்பங்களும், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் / முதல்வர்(பொ),
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
கிண்டி,
சென்னை – 32

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *