Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை

Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது உங்களின் மீது உங்கள் திறமையின் மீது உங்கள் செயல் பாடுகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும் .தன்னம்பிக்கை உள்ள ஒரு மனித மனம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து தடைகளையும் தகர்க்கும் வல்லமையை பெற்றிருக்கும்.

Thannambikkai Essay in Tamil

தன்னம்பிக்கை கொண்ட நபர் தன்மீது உள்ள அணைத்து சந்தகங்களையும் கலைந்தார் ஆகிறார் . தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள எந்த கல்வியிலும் வெளி சக்தியினாலும் இயலாது .உளமார உணர்ந்து நடப்பதினால் மட்டுமே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முடியும் .தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டுவிட்டால் ஆரோக்கியமான வாழ்வு ,புதிய முயற்சிகள் தயக்கமின்றி எடுத்தால் , சிறு துயரங்களை மனதில் இருந்து வெளியேற்றுதல் என்ற மனித மனதிற்கு நன்மை செய்தும் செயல்கள் தானாக நடக்கும்

தன்னமிக்கை வளர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் அவற்றில் குறிப்பாக

  • குறிக்கோள்களை அடைவதற்கும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் தன்னம்பிக்கை மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.
  • தங்கள் திறன்கள் மீது சந்தேகம் ஏற்படுவதில்லை என்பதினால் தயக்க மின்றி புதிய முயற்சிகளை எடுக்க முடிகிறது
  • சுய கட்டுப்பாடுகள் தாமாகவே வளர்ந்து ஒழுக்கமான வாழ்வு அமைகிறது

தன்னமிக்கை இல்லாதவருக்கு ஏற்படும் ஆபத்துகள்

  • மனசோர்வு அதிகம் உள்ளவராக திகழ்வார்
  • நீண்ட சிந்தனை (Over thinking) என்ற மனம் சார்ந்த பாதிப்பு உண்டாக அதிகம் வாய்ப்புள்ளது
  • எந்த செயலையும் செய்ய துணிவற்றவராக இருப்பர்
  • எந்த ஒரு செயலையும் அடுத்தவர் துணையின்று செய்ய இயலாது என்ற கோட்பாட்டுக்குள் அடங்கிவிடுவார்

தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளும் வழிகள்

தன்னம்பிக்கை கட்டுரை

அடுத்தவருடம் ஒப்பிடுவதை தவிர்த்தல்

உங்கள் வழக்கை முறைகளை அடுத்தவருடைய வாழ்க்கையுடன் ஒப்பிடுவதை தவிருங்கள் ,அவர் வாழ்க்கையில் அவர் என்ன செய்தார் என்பது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு போதும் பயன்தராத நிலையில் ,அவர் அடைந்த வெற்றியை பற்றி சிந்திப்பதினால் எந்த பயனும் இல்லை

உங்கள் உடலை பராமரித்தல்

உங்கள் மன பராமரிக்க பட வேண்டும் எனில் அதற்க்கு உங்கள் உடல் பராமரிக்க பட வேண்டும் , எந்த ஒரு செயலையும் திறம்பட செய்ய தகுதியான உடல் இருந்தால் மனம் அச்செயலை நூறு மடங்கு அதிக வெற்றிகரமாக செய்து முடிக்கும் .எனவே உங்கள் உடலின் மீது அக்கறை கொள்ளுங்கள்

நல்லவற்றை உண்ணுதல் ,தியானம் செய்தல்,அளவான உணவு , பொருத்தமான உறக்கம் ,அதிகாலை உடற் பயிற்சி போன்றவற்றை தொடங்கினாலே போதும் உங்கள் உடல் உங்களுக்கு புது புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும்