Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

Tn 9th Science Unit 12 Assignment Answers TM

Tn 9th Science Unit 12 Assignment Answers TM : ஒன்பதாம் வகுப்பு வேதியியல் அலகு 12 தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை முதல் ஒப்படைப்பு விடைகளுடன் இந்த பகுதியில் கொடுக்க பட்டுள்ளது

Tn 9th Science Unit 12 Assignment Answers TM : Here is the full assignment answer key for TNSCERT 9th science assignment in both print and pdf download with answers, This page gives you Tamil medium and we also have English medium answers for 9th standard science. As per the Tamilnadu educational departments order, all school students must submit their assignments on time, But most of the students do not even start the assignment process, so we want to help those students, and here is the full assignment answer key

9th Science English Medium Assignment 2021 with Answer

For English Medium Answers Please Click Here

Here are the Full Questions in PDF – Click Here to Download

வேதியியல்

அலகு. 12. தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

பகுதி-அ

ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1) நவீன தனிம வரிசை அட்டவணையில் 16-வது தொகுதியின் பெயர்

அ) ஆக்ஸிஜன் குடும்பம் அல்லது சால்கோஜென் குடும்பம்

ஆ) கார்பன் குடும்பம்

இ) நைட்ரஜன் குடும்பம் அல்லது சால்கோஜென் குடும்பம்

ஈ) போரான் குடும்பம்

விடை :- அ) ஆக்ஸிஜன் குடும்பம் அல்லது சால்கோஜென் குடும்பம்


2) ஹென்றி மோஸ்லே தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை விளக்க உதவிய பரிசோதனை முறை

அ) X – கதிர் சிதைவு

ஆ) β- கதிர் சிதைவு

இ) y – கதிர் சிதைவு

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை :- அ) X – கதிர் சிதைவு


3) 16வது தொகுதியில் உள்ள தனிமங்கள் எவை?

அ) O,S, Se, Te, Po

ஆ) F, CI, Br, I

இ) N, P, AS, Sb

ஈ) C, Si, Ge, Sn, Pb

விடை :- அ) O,S, Se, Te, Po


4) தனிமவரிசை அட்டவணையின் எந்த தொகுதியில் உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் இடம் பெற்றுள்ளன?

அ) S தொகுதி

ஆ) P தொகுதி

இ) d தொகுதி

ஈ) f தொகுதி

விடை :- ஆ) P தொகுதி


5) மந்தவாயுக்கள் இடம் பெற்றுள்ள தொகுதி எது?

அ) 17 வது தொகுதி

ஆ) 18வது தொகுதி

இ) 16வது தொகுதி

ஈ) 13வது தொகுதி

விடை :- ஆ) 18வது தொகுதி


6) உலோகங்களின் பண்பு(கள்) எவை?

அ) கடினத்தன்மை கொண்டவை

ஆ) பளபளப்புத் தன்மையுடையவை

இ) கம்பியாக நீட்டக் கூடியவை

ஈ) மே ற்கண்ட அனைத்தும்

விடை :- ஈ) மே ற்கண்ட அனைத்தும்


7) p தொகுதியில் உள்ள அலோகம் ………….

அ) Ca

ஆ) N

இ) Ni

ஈ) அனைத்தும்

விடை :- ஆ) N


8) உலோகப் போலியின் பண்பு

அ) உலோகப் பண்பு இல்லாதவை

ஆ) அலோகப் பண்பு கொண்டவை

இ) அலோகம் மற்றும் உலோகப் பண்பு கொண்டவை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை :- இ) அலோகம் மற்றும் உலோகப் பண்பு கொண்டவை


9) ஒரு அணுவின் ஆர்பிட்டில் உள்ள துணைக் கூடுகள் எவை?

அ) S துணைக் கூடு

ஆ) P துணைக் கூடு d துணைக் கூடு

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை :- ஈ) மேற்கண்ட அனைத்தும்


10) f துணைக் கூட்டில் நிரப்பக் கூடிய அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை —-

அ) 14 ஆ) 13 இ)12 +)10

விடை :- அ) 14


இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.டாபர்னீரின் மும்மை விதியை வரையறு?

டாபர்னீர் மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் என்று கூறினார் ,இது டாபர்னீரின் மும்மை விதி என்றழைக்கப்படுகிறது


2.உலோகக்கலவை என்றால் என்ன?

உலோகக்கலவை என்பது ஒன்றிற்கு மேட்பட்ட உலோகங்களின் கலவை ஆகும்


3.மந்த வயுக்கள் என்பது என்ன?

ஹீலியம் ,நியான் ,ஆர்கான் ,கிரிப்டான் ,செனான் மற்றும் 18ஆம் தொகுதியில் உள்ள ரேடான் போன்ற தனிமங்கள் அறிய வாயுக்கள் அல்லது மந்த வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன . இவை ஓரணுத் தனிமங்கள் ,மற்ற பொருட்களுடன் அவ்வளவு எளிதில் வினை புரிவதில்லை .எனவே இவை மந்த வாயுக்கள் என்று அழைக்க படுகின்றன .மேலும் இவை மிகச்சிறிய அளவிலேயே காணப்படுகின்றன ,எனவே இவை அறிய வாயுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன


4.பிரதி நிதித்துவ தனிமங்கள் குறிப்பு வரைக.

p-தொகுதி தனிமங்கள் : இவை அட்டவணையில் 13 முதல் 18 தொகுதிகள் வரை உள்ளன .இவற்றில் போரான் ,கார்பன் ,நிட்ரோஜென்,ஆக்ஸிஜன்,புளுரின் குடும்பம் மற்றும் மந்த வாயுக்கள் (ஹீலியம் தவிர ) அடங்கும் .இவை பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன


5. உலோகக்கலவையின் பயன்கள் யாவை?

  • இவை விரைவில் துருபிப்பதும் ,அரித்துப் போவதும் இல்லை ,அப்படியே அறிந்தாலும் சிறிதளவே சேதமடையும்
  • இவை தூய உலோகத்தை விட கடினமாகவும் வலிமையாகவும் இருக்கும் . எகா தங்கம் செம்போடு கலக்கப்படும் போது தூய தங்கத்தை விட வலிமையானதாக இருக்கும்
  • இவை தூய உலோகத்தை விட கடத்தும் தன்மை குறைந்தவை எகா செம்பு அதன் உலோகக் கலவைகளாகிய பித்தளை மற்றும் விண்கலத்தை விட நன்கு வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் .
  • சிலவற்றில் உருகு நிலை தூய உலோகத்தின் உருகு நிலையை விட குறைவு எகா பற்றாசு என்பது ஈயம் மற்றும் வெள்ளீயத்தின் கலவை ,இதன் உருகு நுழை குறைவு

ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1.உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக

உலோகங்கள்

  • இயல்பான வெப்ப நிலையில் திண்ம நிலையில் காணப்படுகின்றன
  • பொதுவாக உருகு நிலை அதிகம்
  • பொதுவாக கொதிநிலை அதிகம்
  • பொதுவாக அடர்த்தி அதிகம்
  • அணைத்து உலோகந்த்தாலும் பளபளப்பு உடையவை
  • பொதுவாக உலோகங்கள் வெப்பத்தையும் மின்சாரந்தியும் நன்கு கடத்தக்கூடியவை
  • அடிக்கும்போது தகடாகிறது
  • இழுக்கும்போது கம்பியாக நீளும் தன்மையுடையது
  • தட்டும்போது ஓசை எழுப்புகிறது
  • பொதுவாக கடினத்தன்மை வாய்ந்தவை

அலோகங்கள்

  • இயல்பாக வெப்ப நிலையில் திண்ம ,திரவ ,வாயு நிலைகளில் காணப்படுகின்றன
  • பொதுவாக உருகு நிலை குறைவு
  • பொதுவாக அடர்த்தி குறைவு
  • கொதிநிலை குறைவு
  • அணைத்து அலோககங்களும் பளபளப்பு அற்றவை
  • பொதுவாக அலோகங்கள் வெப்பத்தையும் மின்சாரத்தையும் அரிதாக கடத்தக்கூடியவை
  • பொதுவாக மென்மையானது அல்லது உடையக்கூடியது

2. குறிப்பு வரைக. அ. p-தொகுதி தனிமங்கள் ஆ.d- தொகுதி தனிமங்கள் இ.f.தொகுதி தனிமங்கள்

p-தொகுதி தனிமங்கள்

இவை அட்டவணையில் 13 முதல் 18 தொகுதிகள் வரை உள்ளன .இவற்றில் போரான் ,கார்பன் ,நிட்ரோஜென்,ஆக்ஸிஜன்,புளுரின் குடும்பம் மற்றும் மந்த வாயுக்கள் (ஹீலியம் தவிர ) அடங்கும் .இவை பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன .இவை பெரிய அளவில் வேறுபட்ட தனிமங்களின் சங்கமமாகும் .இந்த ஒரு தொகுதியில் மட்டுமே உலோகங்கள் ,அலோகங்கள் மற்றும் உலோக போலிகள் என்ற மூன்று வகைப்பாடும் காணப்படுகின்றன

d- தொகுதி தனிமங்கள்

இவை 13 முதல் 12 தொகுதி வரை உள்ள தனிமங்களை உள்ளடக்கியது. இவை தனிமை அட்டவணையின் மையத்தில் காணப்படுகின்றன.இவற்றின் பண்புகள் s தொகுதி மற்றும் p தொகுதி தனிமங்களை இடையில் காணப்படும் .எனவே இவை இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன

f.தொகுதி தனிமங்கள்

இவை லாந்தனத்ததை அடுத்துள்ள லாந்தனைடுகள் எனப்படும் 14 தனிமங்களையும் அடினத்தை அடுத்துள்ள ஆக்டினைடுகள் எனப்படும் 14 தனிமங்களையும் உள்ளடக்கியதாகும் .இவை உள் இடைநிலைத் தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன .

Tn 9th Science Unit 1 Assignment Answers EM

Tamilnadu 9th standard Physics Unit 1 Measurement English medium assignment answers are available on this page – please click here

Tn 9th Science Unit 12 Assignment Answers EM

Tamilnadu 9th standard Chemistry Unit 12 Periodic Classification of Elements English medium assignment answers are available on this page – please click here

Tn 9th Science Unit 18 Assignment Answers EM

Tamilnadu 9th standard Biology Unit 18 Organisation of Tissues English medium assignment answers are available on this page – please click here