Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Educational News

TNAU Counseling 2021-22 | எப்படி நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வு

TNAU Counseling 2021-22 | எப்படி நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வு :- தமிழ்நாடு வேளாண் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு 2021 2022 ஆம் கல்வியாண்டின் தரவரிசைப் பட்டியல் ஏற்கனவே 28.01.2022 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் TNAU நடத்தும்  ஆன்லைன் கலந்தாய்வு 11.02.2022 முதல் 24.03.2022 வரை நடைபெற உள்ளது. இந்த ஆன்-லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ள மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இளங்கலை வேளாண் படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்கள் இந்த ஆன்-லைன் கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலம் மட்டுமே தங்களுக்கான இடங்களை தேர்வு செய்ய முடியும்.

ஆன்லைன் கலந்தாய்வு

 வேளாண் பல்கலைக்கழகத்தின் இந்த ஆன்லைன் கலந்தாய்வு முழுமையாக ஆன்-லைன் வழியில் நடைபெறுவது அல்ல சில கலந்தாய்வு நிகழ்வுகள் நேரடியாகவும் சில ஆன்லைன் வழியாகவும் நடத்தப்படுகிறது. ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும். மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் இருந்தபோதிலும் சில காரணங்களுக்காக (சான்றிதழ் சரிபார்ப்பு)நேரடியாக கோயம்புத்தூரில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்திற்கு அல்லது மாவட்டம் தோறும் அமைக்கப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு செல்ல நேரிடும்

எவ்வாறு நடை பெரும் ஆன்லைன் கலந்தாய்வு

வேளாண்பல்கலை கழகத்தின் ஆன்லைன் கலந்தாய்வு கீழ்கண்ட படிகளில் நடைபெறும். கலந்தாய்வு பட்டியலின்படி முதல் கலந்தாய்வு 22.02.2022 முதல் 23.02.2022 வரை நடைபெறும்

  • ஆன்லைன் கலந்தாய்வுக்கு அழைப்பு
  • கலந்தாய்வு கட்டணம் செலுத்துதல்
  • விருப்ப பாடம் மற்றும் கல்லூரி பட்டியல் மாற்றியமைத்தல்
  • தற்காலிக இட ஒதுக்கீடு
  • இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் அல்லது Sliding Process இல் கலந்து கொள்ளுதல்
  • இடஒதுக்கீடு கட்டணம் செலுத்தி உறுதி செய்தல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்லூரிக்கு செல்லுதல்

ஆன்லைன் கலந்தாய்வுக்கு அழைப்பு

  • ஆன்லைன் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே முதலாவது கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்
  • விண்ணப்பத்தின்போது பதிவிட்ட செல் நம்பர் மற்றும் ஈமெயில் முகவரிக்கு அழைப்பு விடுக்கப்படும்
  • பல்கலைக்கழகத்தின் விண்ணப்ப பகுதிக்கு சென்றும் தெரிந்து கொள்ளலாம் (https://tnau.ucanapply.com/univer/public/dashboard?app_id=UElZMDAwMDA2NQ==)
  • முதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் 22.02.2022 அன்று இந்த அழைப்பை பெறுவார்கள்

கலந்தாய்வு கட்டணம் செலுத்துதல்

  • வேளாண் பல்கலை கழகத்தின் கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தாலும் மீண்டும் கலந்தாய்வு கட்டணம் செலுத்த வேண்டும்
  • பொது பிரிவினர் 3000 ரூபாயும் ,SC / ST / SCA பிரிவினருக்கு 1500 ரூபாய் கலந்தாய்வு கட்டணமாகும்
  • இந்த கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்
  • DD எடுத்து அனுப்ப முடியாது
  • கலந்தாய்வு அழைப்பு பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த முடியும்.
  • கலந்தாய்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்க பட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாதது மட்டுமல்லாமல் அடுத்த கலந்தாய்வு நடைபெறின் அதிலும் கலந்துகொள்ள முடியாது

விருப்ப பாடம் மற்றும் கல்லூரி பட்டியல் மாற்றியமைத்தல்

  • ஒவ்வொரு மாணவரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதே தங்களுக்கான விருப்ப பாடத்தையும் விருப்ப கல்லூரியையும் தெரிவு செய்துஇருப்பீர்கள்
  • இதனை ஒருமுறை மாற்றி அமைக்க வாய்ப்பு அளிக்க படும்
  • நீங்கள் தேர்வு செய்த விருப்ப பட்டியலின்படியே தற்காலிக இடஒதுக்கீடு மற்றும் நகர்வு பட்டியல் இடஒதுக்கீடு நடைபெறும்
  • விருப்ப பட்டியலை மாற்றம் செய்து சமர்ப்பிக்க கொடுக்க பட்டுள்ள நேரத்திற்குள் விருப்ப பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்
  • குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு விண்ணப்ப படிவம் நிரப்பும் பொது பூர்த்தி செய்த விருப்ப பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்
  • இந்த பட்டியலின் படியே நகர்வு முறையும் நடைபெறும் (Sliding Process) அதனால் உங்கள் தரவரிசை


தற்காலிக இட ஒதுக்கீடு

  • உங்கள் விருப்ப பட்டியலின்படி முதலாவது இடத்தில உள்ள கல்லூரியின் இடம் காலியாக இருந்தால் அது உங்களுக்கு ஒதுக்க படும்
  • முதலில் குறிப்பிட்ட விருப்ப கல்லூரி இடம் காலியாக இல்லாத பட்சத்தில் இரண்டாவது இடத்தில உள்ள விருப்ப கல்லூரியின் இடத்தை பரிசீலிக்க படும்
  • உங்களுக்கான ஒதுக்க பட்ட இடம் குறித்த தகவல் விண்ணப்பத்தின்போது பதிவிட்ட செல் நம்பர் மற்றும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க படும்


இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் அல்லது Sliding Process இல் கலந்து கொள்ளுதல்

Sliding Process ஏன் நடத்த படுகிறது

கலந்தாய்வில் கலந்துகொண்ட 195 கட் ஆப் மதிப்பெண் உடைய ஒருவர் தனக்கு கிடைத்த இடத்தை வேண்டாம் என்று ஒதுக்கும் பொது அவருக்கு அடுத்த படியாக இருக்கும் 194 கட் ஆப் மதிப்பெண் பெற்ற தகுதியான மாணவருக்கு அந்த இடத்தை ஒதுக்க நடத்த படுகிறது.

ஏன் வெற்றிடம் உருவாகிறது

  • சென்ற ஆண்டு வேளாண் படிப்பிற்கு விண்ணப்பித்து சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்கள் ,கோவை பல்கலைக்கழகத்தில் பயில விருப்பத்துடன் விண்ணப்பம் செய்திருப்பர் ,அவர்களுக்கு வேறு கல்லூரி இந்த முறையும் கிடைக்க பெற்றால் அவர் கிடைத்த இடத்தை விட்டுகொடுத்து வெளியேறுவார்
  • அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற பலர் மருத்துவ கலந்தாய்வு ,கால்நடை மருத்துவ கலந்தாய்வு ,பொறியியல் கலந்தாய்வு போன்றவற்றில் கலந்துகொண்டு ஏற்கனவே கல்லூரியை தேர்வு செய்திருப்பார் அல்லது வேறு படிப்பில் சேர ஆயத்தமாக இருப்பார் ,இருந்த போதிலும் நல்ல வேளாண் கல்லூரி கிடைக்குமா என்ற ஆவலில் விண்ணப்பித்திருப்பார் அவர் இந்த கலந்தாய்வை விட்டு வெளியேறும்போது அந்த இடம் காலியாக அறிவிக்க படும்.
  • சேர்ந்தால் அரசு வேளாண் கல்லூரி அல்லது கோவை கல்லூரியில் மட்டுமே சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர் தனக்கு கிடைத்த இடத்தை பெற்றுக்கொள்ள தவறும்போது வெற்றிடம் உருவாகிறது

கண்டிப்பாக வெற்றிடம் உருவாகுமா

  • சென்ற ஆண்டுகளில் வேளாண்பல்கலைக்கழக கலந்தாய்வில் இரண்டாவது கலந்தாய்வு வரை நடைபெற்றுள்ளது இதற்கு கரணம் வெற்றிடம் உருவாவதே ஆகும்
  • பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று நல்ல கல்லூரிகளுக்கு நிறய மாணவர்கள் சென்று விட்டனர் ,அவர்களுக்கு தனியார் வேளாண் பாடம் கிடைக்கும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக வெளியேறுவார்
  • 20 சதவீதத்துக்கும் அதிகமான விண்ணப்பக்கங்கள் கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆவலுடன் பூர்த்திசெய்ய படுகிறது ,அவர்களுக்கு தனியார் வேளாண் பாடம் கிடைக்கும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக வெளியேறுவார்
  • மருத்துவ கலந்தாய்வு மற்றும் கால்நடை மருத்துவ கலந்தவு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது அதில் தேர்வு பெரும் மாணவர்கள் வெளியேறுவார்கள்


இடஒதுக்கீடு கட்டணம் செலுத்தி உறுதி செய்தல்

  • ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவருக்கு தற்காலிகமாக ஒதுக்கப்படும் இடத்தை உறுதி செய்ய வேண்டும் அவ்வாறு உறுதி செய்ய தவறினால் நகர்வு முறையில் உங்கள் இடம் கலியானதாக அறிவிக்க பட்டு வேறு நபருக்கு ஒதுக்கப்படும்
  • தமக்கு கிடைத்த இடத்தை பெற்றுக்கொள்ள விருப்பமுடையவர்கள் 20000 ரூபாய் இணைய வழியில் செலுத்து உறுதி செய்ய வேண்டும்
  • இந்த கட்டணத்தை செலுத்திய பின்னரே தற்காலிக இட ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்
  • தற்காலிக இடஒதுக்கீடு கடிதம் பெற்ற ஒருவருக்கே கிடைக்க பெற்ற இடம் உறுதி செய்யப்படும்
  • ஒருமுறை தற்காலிக இடஒதுக்கீடு கடிதம் பெற்ற பின் 20000 ரூபாய் கட்டணம் திரும்ப பெற இயலாது


சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்லூரிக்கு செல்லுதல்

  • கோவை பல்கலை கழகத்தில் நேரடியா சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
  • தற்காலிக இடஒதுக்கீடு கடிதம் பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்க வேண்டும்
  • தற்காலிக இடஒதுக்கீடு கடிதம் கொண்டு சென்றால் மட்டுமே அந்த கல்லூரிகளில் இடம் கொடுக்க படும்

 ஆன்லைன் கலந்தாய்வு தேதி 

வ எண் விவரங்கள் தேதி கலந்தாய்வு முறை
1முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள்
Ex-servicemen
11.02.2022 FNநேரடி கலந்தாய்வு
Off line
2மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு
Differently abled candidates
11.02.2022 FNநேரடி கலந்தாய்வு
Off line
3 சிறந்த விளையாட்டு வீரர்கள்
Eminent sports person
11.02.2022 FNநேரடி கலந்தாய்வு
Off line
4தொழில்முறைக் கல்வி பிரிவினர்
Vocational stream
14.02.2022 and
15.02.2022
நேரடி கலந்தாய்வு
Offline
5 அரசு பள்ளியில் பயின்றோர் (7.5%)
Government schools studied students’ quota (7.5%)
17.02.2022 and
18.02.2022
நேரடி கலந்தாய்வு
Offline
6 பொது கலந்தாய்வு -1
General counseling I Phase
21.02.2022 to
23.02.2022
இணையவழி கலந்தாய்வு
Online Counseling
7 கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீடு
Seat allotment
25.02.2022இணையவழி கலந்தாய்வு
Online Counseling
8 சான்றிதழ் சரிபார்ப்பு
Certificate verification
02.03.2022 to
05.03.2022
நேரடி வருகை
In Person
9 முதல் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப்பிரிவு இட ஒதுக்கீடு
First sliding and seat allotment
08.03.2022இணையவழி கலந்தாய்வு
Online Counseling
10 சான்றிதழ் சரிபார்ப்பு 2
Certificate verification-2
11.03.2022 to
13.03.2022
நேரடி வருகை
In Person
11 இரண்டாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப்பிரிவு இட ஒதுக்கீடு
Sliding II and seat allotment
16.03.2022இணையவழி கலந்தாய்வு
Online Counseling
12 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு
NRI counseling
17.03.2022நேரடி கலந்தாய்வு
Offline
13 வேளாண் தொழில் நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு
Industrial quota counseling
18.03.2022நேரடி கலந்தாய்வு
Offline
14 சான்றிதழ் சரிபார்ப்பு 3
Certificate verification III
19.03.2022 to
21.03.2022
நேரடி வருகை
In Person
15மூன்றாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப்பிரிவு இட ஒதுக்கீடு
Sliding III and seat allotment
24.03.2022இணையவழி கலந்தாய்வு
Online Counseling

 

 வேளாண் கல்லூரிகள் மற்றும் பாட பிரிவுகளின் பட்டியல்

S.N.Course NameCollege Name
1B.Sc. (Hons.) AgricultureAC & RI, Coimbatore
2B.Sc. (Hons.) AgricultureAC & RI, Madurai
3B.Sc. (Hons.) AgricultureADAC & RI, Trichy
4B.Sc. (Hons.) Agriculture AC & RI, Killikulam
5B.Sc. (Hons.) AgricultureAC & RI, Eachangkottai, Thanjavur
6B.Sc. (Hons.) AgricultureAC & RI, Vaazhavachanur, Tiruvannamalai
7B.Sc. (Hons.) AgricultureAC & RI,Keezh Velur, Nagapattinam
8B.Sc. (Hons.) AgricultureCollege of Agricultural Technology (CAT), Kullapuram, Theni,
9B.Sc. (Hons.) AgricultureVanavarayar Institute of Agriculture (VIA), Manakkadavu, Pollachi
10B.Sc. (Hons.) AgricultureThanthai Roever Institute of Agriculture and Rural Development (TRIARD), Perambalur
11B.Sc. (Hons.) AgricultureImayam Institute of Agriculture and Technology (IIAT), Kannanur, Thuraiyur Tk, Trichy
12B.Sc. (Hons.) AgricultureDon Bosco College of Agriculture (DBCA), Sagayathottam, Arakkonam, Ranipet
13B.Sc. (Hons.) AgricultureAdhiparasakthi Agricultural College (APAC), Kalavai
14B.Sc. (Hons.) AgricultureKrishna College of Agriculture and Technology (KRISAT), Srirengapuram, Madurai
15B.Sc. (Hons.) AgricultureAdhiyamaan College of Agriculture and Research (ACAR), Shoolagiri, Krishnagiri
16B.Sc. (Hons.) AgricultureAravindhar Agricultural Institute of Technology (AAIT), Kalasapakkam, Thiruvannamalai
17B.Sc. (Hons.) AgricultureDhanalakshmi Srinivasan Agriculture College (DSAC), Perambalur
18B.Sc. (Hons.) AgricultureKumaraguru Institute of Agriculture (KIA), Sakthi Nagar, Erode
19B.Sc. (Hons.) AgricultureJ.K.K.Munirajah College of Agricultural Science (JKKMCAS), TN Palayam, Gobi (TK), Erode
20B.Sc. (Hons.) AgricultureJaya Agricultural College, Arakkonam, Tiruttani TK, Tiruvallur
21B.Sc. (Hons.) AgricultureJSA College of Agriculture and Technology (JSACAT),ma podaiyur, Tittagudi-Taluk, Cuddalore-
22B.Sc. (Hons.) AgricultureMIT College of Agriculture and Technology, Vellalappatti, Musiri, Trichy
23B.Sc. (Hons.) AgricultureMother Terasa College of Agriculture (MTCA), Iluppur, Pudukkottai
24B.Sc. (Hons.) AgricultureNalanda College of Agriculture (NCA), M.R.Palyam , Sanamangalam (po), Trichy
25B.Sc. (Hons.) AgricultureNammazhvar College of Agriculture and Technology (NCAT), Peraiyur, Kamuthi,Ramanathapuram
26B.Sc. (Hons.) AgriculturePalar Agricultural College (PAC), Kothamarikuppam, Pernambut, Vellore
27B.Sc. (Hons.) AgriculturePGP College of Agricultural Sciences (PGPCAS), Palani Nagar, Namakkal
28B.Sc. (Hons.) AgriculturePushkaram College of Agriculture Sciences (PCAS), Veppangudi, Alangudi, Pudukkottai
29B.Sc. (Hons.) AgricultureRVS Agriculture College (RVSAC), Usilampatti Village, , Thanjavur
30B.Sc. (Hons.) AgricultureS. Thangapazham Agricultural College (STAC), Vasudevanallur, Tenkasi
31B.Sc. (Hons.) AgricultureSethu Bhaskara Agricultural College and Research Foundation (SBACRF), Karaikudi, Sivagangai
32B.Sc. (Hons.) AgricultureSRS Institute of Agriculture and Technology (SRSIAT), Senankottai, Vedasandur, Dindigul
33B.Sc. (Hons.) AgricultureThe Indian Agricultural College (TIAC), Raja Nagar, Radhapuram Tirunelveli
34B.Sc. (Hons.) HorticultureHC & RI, Coimbatore
35B.Sc. (Hons.) HorticultureHC & RI, Jeenur
36B.Sc. (Hons.) HorticultureHC & RI,Periyakulam
37B.Sc. (Hons.) HorticultureHC & RI(W), Trichy
38B.Sc. (Hons.) HorticultureAdhiparasakthi Horticultural College (APHC), Kalavai, Ranipet
39B.Sc. (Hons.) AgricultureAC & RI, Kudumiyanmalai, Pudukottai
40B.Sc. (Hons.) HorticultureRVS Padmavathy Horticultural College (RVSPHC), S.Paraipatty, Sembatti, Dindigul
41B.Sc. (Hons.) AgricultureAC & RI,Karur
42B.Sc. (Hons.) AgricultureAC & RI,Chettinad, Sivagangai
43B.Sc. (Hons.) ForestryFC & RI, Mettupalayam
44B.Sc. (Hons.) Food, Nutrition and DieteticsCSC & RI, Madurai
45B.Tech. (Agricultural Engineering)AEC & RI, Coimbatore – Self supporting
46B.Tech. (Agricultural Engineering)AEC & RI, Kumulur, Trichy
47B.Tech. (Food Technology)AEC & RI, Coimbatore – Self supporting
48B.Tech. (Biotechnology)AC & RI, Coimbatore – Self supporting
49B.Tech. (Energy and environmental engineering)AEC & RI, Coimbatore – Self supporting
50B.Sc. (Hons.) Agribusiness ManagementAC & RI, Coimbatore – Self supporting