தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கலந்தாய்வு தேதி அறிவிக்க படாததால் மாணவர்கள் ஏமாற்றம்

மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின்னரே வேளாண் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் கலந்தாய்வு நடத்துகிறது . இளங்கலை வேளாண் பட்ட படிப்புக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தனி அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களே அதிகம் பங்கேற்கின்றனர், அவர்களில் பெரும்பான்மையினர் மத்திய அரசு நடத்தும் மருத்துவ படிப்பிற்க்கான நுழைவு தேர்வும் எழுதுகின்றனர் ,இது போன்ற நிலையில் முன்னதாக வேளாண் கலந்தாய்வு நடைபெறும் பட்சத்தில் , வேளாண் பல்கலையில் இடம் கிடைத்த மாணாக்கர்கள் மருத்தவ இடத்திற்கு மாறும்போது . வேளாண் படிப்பிற்கு பெற்ற இடம் கலியானதாக அறிவிக்க பட வேண்டிய நிலை ஏற்படுகிறது .இதன் காரணமாக தகுதி உள்ள மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் வேளாண் பட்ட படிப்பிற்கு இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது
இதுபோன்ற தவறுகளை தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கலந்தாய்வு , மற்றும் பொறியியல் கலந்தாய்வும் நடைபெற்று முடிந்த பின்னரே வேளாண் பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்துகிறது
வரும் 16 ஆம் தேதிமுதல் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதால் அது முடிவுற்ற பின்னரே வேளாண் கல்லூரி இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும்
ஆன்லைன் கலந்தாய்வுக்கு ரேங்க் லிஸ்ட் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிறத்தக்கது