Site icon Tamil Solution

TNEA College Predictor 2021 கட்ஆப் அடிப்படையில் சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்தல்

TNEA College Predictor 2021 கட்ஆப் அடிப்படையில் சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்தல் :-தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு தொடங்கவிருக்கிறது ,அதற்க்கு முன்னதாக உங்கள் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்,அதற்க்கு எங்களது TNEA College Predictor 2021 வசதியை நீங்கள் பயன்படுத்தலாம்

இந்த கருவு 2019-2020 கட்ஆப் மதிப்பெண் பட்டியலில் இருந்து உருவாக்க பட்டது ,பொறியியல் கல்லூரி கலந்தாய்வை ஆன்லைன் வழியாக அண்ணா பல்கலை கழகம் நடத்தியபோது இந்த வசதி அவர்கள் அதிகார பூர்வ வலைத்தளத்தில் கொடுக்க பட்டது,ஆனால் இந்த வசதி தற்போது நடைபெறும் தமிழக அரசு உயர்கல்வி துறை பொறியியல் கலந்தாய்வில் கிடைப்பதில்லை,எனவே எங்கள் இந்த கருவியை பயன்படுத்தி


உங்கள் விருப்ப பாடம் எந்த கல்லூரியில் இருக்கிறது என்பதை அறிதல்

Step 1 :- உங்கள் சமூக பகுதிக்கு சென்று , பிரான்ச் நேம் என்ற பகுதியில் உங்கள் விருப்ப பாடத்தை உள்ளிடவும்

Step 2:- இந்த கருவி உங்கள் விருப்ப பாடம் எந்த எந்த கல்லூரியில் உள்ளது என்பது காட்டும் அதை , PDF பட்டனை அமுக்கி நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்


நீங்கள் விரும்பும் கல்லூரியில் எந்த பாடங்கள் உள்ளன அதற்க்கு எத்தனை கட்ஆப் தேவை என்பதை அறிதல்

Step 1 :- இந்த கருவியில் உள்ள College Name பகுதியில் உங்கள் விருப்ப கல்லூரியின் பெயரை டைப் செய்யவும்

Step 2 :- உங்கள் கலோரியில் எந்த எந்த பாடங்கள் பயிற்றுவிக்க படுகிறது ,அந்த கல்லூரியில் சேர எத்தனை கட்ஆப் மதிப்பெண் குறைந்த பட்சமாக பெற்றிருக்க வேண்டும் என்பதை கீழ் உள்ள பகுதியில் காட்டும் ,நீங்கள் pdf வடிவில் அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்


உங்கள் கட்ஆப் மதிப்பெண்ணிற்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளுதல்

உதாரணமாக civil பாடத்திற்கு எந்த எந்த கல்லூரியில் எவ்வளது மதிப்பெண் தேவை என்பதை இந்த பகுதி மூலமாக அறியாளம் ,நீங்கள் 160 கட்ஆப் மதிப்பெண் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதர்த்து தகுந்த கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும் ,எனவே 150 முதல் 175 கட்ஆப் வரை குறைந்த பட்ச கட்ஆப் தகுதி உடைய கல்லூரிகளின் பட்டியலை நாம் தயாரிக்க வேண்டும் அதற்க்கு இந்த கருவியை எப்படி பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்

Step 1 :- இந்த கருவியில் உள்ள Brach Name பகுதியில் உங்கள் விருப்ப பாடத்தின் பெயரை டைப் செய்யவும் , உதாரணமாக CIVIL என்று டைப் செய்யும் பொது இந்த கருவு CIVIL பாடம் கொண்டுள்ள கல்லூரிகளை வரிசை படுத்தும்

Step 2 :- அதற்க்கு அடுத்ததாக உங்களுக்கு தேவையான வரைமுறை கட்ஆப் குறைந்தபட்ச , அதிக பட்ச கட்ஆப் மதிப்பெண்ணை உள்ளிடவும்

Step 3 :- உதாரணமாக 150 முதல் 175 கட்ஆப் வரை என உள்ளீடு செய்யும் போது , அந்த வரைமுறைக்கு உட்பட்ட கல்லூரிகள் மட்டும் இந்த கருவி காட்டும் ,மேலே கொடுக்க பட்டுள்ள PDF பகுதியை சொடுக்கினால் இந்த பட்டியல் உங்களுக்கு டவுன்லோட் செய்ய கிடைக்கும்


ஒரு ஊரில் அல்லது மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை அறிதல்

Step 1 :- இந்த கருவியில் உள்ள College Name பகுதியில் உங்கள் ஊரை அல்லது மாவட்டத்தின் பெயரை டைப் செய்யவும்

Step 2 :- உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்தில் எந்த எந்த கல்லூரிகள் உள்ளன என்பதையும் அந்த கல்லூரியில் எந்த எந்த பாடங்கள் பயிற்றுவிக்க படுகிறது ,அந்த கல்லூரியில் சேர எத்தனை கட்ஆப் மதிப்பெண் குறைந்த பட்சமாக பெற்றிருக்க வேண்டும் என்பதை கீழ் உள்ள பகுதியில் காட்டும் ,நீங்கள் pdf வடிவில் அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்

Exit mobile version