சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் – Top Engineering Colleges in Tamil Nadu

சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் – Top Engineering Colleges in Tamil Nadu :- இது 2021 ஆம் ஆண்டு பொறியியல் படித்தால் சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர் ஆகலாம் வேறு எதுவும் செய்ய முடியாது என்று பரவலாக கூறப்படுகிறது .ஆனால் நல்ல கல்லூரியில் ,நல்ல பாடம் எடுத்து நன்றாக படித்த மாணவர் எவரும் வேலை இல்லாமல் இருப்பதை காண முடிவதில்லை

எனவே சிறந்த பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வது உங்கள் வாழ்வின் முதல் படியாக அமைத்து கொள்ளுங்கள்,நான்றாக பயில வேண்டும் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பொறியியலை தேர்ந்தெடுங்கள் .

Top Engineering Colleges in Tamil Nadu

உங்களுக்கு உதவும் வகையில் ஐந்தே சிறந்த பத்து பொறியியல் கல்லூரிகள் வரிசை படுத்த பட்டுள்ளன

1.இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – Indian Institute of Technology Madras

தமிழ்நாடு மட்டுமல்லாது தேசிய அளவில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் என்ற பட்டியலில் இடம் பிடிக்கும் கல்லூரி இதுவாகும்.

சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் Top Engineering Colleges in Tamil Nadu

இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் லட்சங்களில் சம்பாதிப்பதை பார்க்க முடிகிறது . அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் பலர் இந்த கல்லூரியில் பிடித்திருப்பது குறிப்பிட தக்கது .பொறியியல் மட்டும் அல்லாமல் அறிவியல் படிப்புகளும் இந்த கல்லூரியில் நடத்த படுகிறது இந்த கல்லூரியில் இடம் கிடைக்க நீங்கள் இந்திய தேசிய அளவில் நடக்கும் JEE நுழைவு தேர்வுகளை எழுத வேண்டும்.

2. அண்ணா பொறியியல் கல்லூரி சென்னை – Anna University, Chennai

தமிழகத்தின் தலைமை பொறியியல் கல்லூரி என இதனை கூறலாம் ,தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் இதனுடன் இணைக்க பட்டவையே ஆகும். இங்கு பயிலும் மாணவர்கள் நல்ல வேளைகளில் அமருகின்றனர்.கல்லூரி செலவுகளும் இங்கு படித்தால் குறைவாகவே இருக்கும்.அண்ணா பல்கலை கழகத்தில் படித்த மாணவர்கள் வேலை இல்லாமல் இருப்பதில்லை .நான்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு உள்ள மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த கல்லூரியாகும் .பல உறுப்பு கல்லூரிகள் இதனுடன் இணைந்து செயல்பட்டாலும் இந்த பிரதான கல்லூரியில் இடம் பிடிக்க பெரும் போட்டி நிலவுகிறது. தமிழக மாணவர்கள் மட்டும் அல்லாமல் பிற இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இங்கு படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

3. தேசிய தொழில்நுட்ப கழகம் ,திருச்சிராப்பள்ளி NIT Trichy – National Institute of Technology Tiruchirappalli

தமிழகத்தில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் பொறியியல் கல்லூரி இதுவாகும் .திருச்சி தஞ்சாவூர் ரோட்டில் அமைத்துள்ளது இந்த கல்லூரி . இந்த கல்லூரியில் சேர JEE நுழைவு தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இந்த கல்லூரியில் பயிலுவதின் மூலம் அதிக வெளிமாநில மாணவர்களுடன் இணக்கமான வாய்ப்பு கிடைக்கிறது இதன் காரணமாகவே தேசிய அளவின் வேலை கிடைக்கிறது.

4.தியாகராஜர் பொறியியல் கல்லூரி – Thiyagarajar College of Engineering

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும் இங்கு பயின்றால் நல்ல வேலை கிடைக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே .தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வில் கலந்து கொண்டே இந்த கல்லூரியில் சேர முடியும் .எப்போதும் கலந்தாய்வு நடக்கும் முதல் மூன்று தினங்களுக்கும் இந்த கல்லூரியின் சேர்க்கை இடங்கள் தீர்ந்து விடும்.

சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் Top Engineering Colleges in Tamil Nadu

5. ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி – SSN College of Engineering

கணினி உலகின் இந்திய ஜாம்பவான் எச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனரும் தலைவருமான திரு சிவ் நாடார் அவர்களால் தொடங்கப்பட்டது இந்த கல்லூரி, கணினி பொறியியல் படிக்க அதிகம் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இந்த கல்லூரியையே தேர்வு செய்கின்றனர்.சென்னையின் சுற்றுபுறத்தில் உள்ள துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை மட்டும் அல்லாமல் இக்கல்லூரி நடத்துனர்கள் நான்கு கோடி மதிப்புள்ள கல்வி உதவித்தொகையைத் தகுதி உடைய மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.பள்ளிகளில் முதல் பத்து மதிப்பெண் பெற்ற மாணவராக இருந்தால் கல்லூரி விடுதி செலவுகள் உட்பட முழு செலவைக் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது

6. பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி – PSG College of Technology

பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும்.இந்திய அளவில் வெற்றிகரமான அறிவியல் விஞானிகள் இந்த கல்லூரியில் பயின்றோராக இருக்கின்றனர் . கோயம்பத்தூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது . இந்த கல்லூரியில் சேர தமிழக அரசு நடத்தும் பொது பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த கல்லூரியையே தேர்வு செய்கின்றனர். பொதுவாக இந்த கல்லூரி மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்னரே வேலையில் சேர்ந்து விடுகின்றனர். அதிக வரவேற்பை பெற்ற பொறியியல் பாடங்கள் இந்த கல்லூரியில் பயில்விக்க படுகின்றன.

7.வேலூர் பொறியியல் கல்லூரி VIT Vellure

அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பொறியியல் கல்லூரி இதுவாகும் .இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அதிகம் வேலை பெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு சிறந்த தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்.இந்த கலோரியில் சேருவதற்கு தமிழக அரசின் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். பிற மாவட்ட மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யும் தனியார் பொறியியல் கல்லூரி இதுவே ஆகும்.இங்கு பல புதிய பொறியியல் பாடங்கள் கற்பிக்க படுகின்றன. மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படும் தொழில் நுட்ப உதவிகளை செய்வதில் இந்த கல்லூரி நிர்வாகம் அதிகம் கவனம் செலுத்துகிறது .

8.SRM Institute of Science and technology

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தனியார் பொறியியல் கலோரிகளிலேயே சிறந்த அந்தஸ்தை பெற்ற கல்லூரி ஆகும். சென்னையில் உள்ள காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள இந்த பொறியியல் கல்லூரி உறுப்பு கல்லூரிகளையும் கொண்டுள்ளது. இங்கு பயில நிறைய வெளிமாநில மாணவர்கள் வருகின்றனர்.அதனால் பல மொழிகள் பேசும் மாணவர்களை இங்கு காண்பது சாதாரண ஒரு விஷயமாகும்.இங்கு பயின்றால் கல்லூரி முடிவதற்குள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.நன்றாக படித்த மாணவர்களுக்கு நேரடியாக நடத்தப்படும் வேலை நேர்காணல்கள் அதிகம் இங்கு நடத்த படுகிறது .பொதுக நன்றாக படித்து முடித்த பொறியியல் பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருப்பதில்லை,எனவே இதுபோன்ற தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் நன்றா படிக்கும் முனைப்புடன் இருப்பது நலமாகும்

9.Sastra Deemed University

சாஸ்த்ரா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் அந்தஸ்தை பெற்ற கல்வி நிறுவனம் ஆகும் , தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் இந்த கல்லூரியில் பயில நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இளங்கலை மட்டுமல்லாது முதுகலை பொறியியல் படிப்புகளும் இங்கு நடத்த படுகின்றன.இந்த கல்லூரியில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு தனியான ஒரு அந்தஸ்து உள்ளது .

10. சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் Sathyabama Institute of Science and Technology

சென்னையில் அமைந்துள்ள இந்த பொறியியல் கல்லூரி தனியார் பொறியியல் கல்லூரி ஆகும் ,திரு ஜேப்பியார் அவர்களின் தலைமையில் செயல்படும் கல்லூரிகளில் ஒன்றாகும். சிறந்த தலைமை அமைந்த இந்த கல்லூரி அரசு கல்லூரிகளுக்கு இணையான கல்லூரி தரம் கொண்டதாகும்.இங்கு பயிலும் மாணவர்கள் அதிகம் திறனுடைய மாணவர்களாக வெளிவருகின்றனர்

Leave a Comment