Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

VO Chidambaram in Tamil
Tamil Essays

வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay

வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay :- ‘வ. உ. சி’ என்று அழைக்கபடும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயே அரசுக்கு போட்டியாக தூத்துக்குடி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்கு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவையை அமைத்ததால் கப்பலோட்டிய தமிழன் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்

VO Chidambaram in Tamil
பிறப்புசெப்டம்பர் 5, 1872
பிறந்த இடம்ஒட்டப்பிடாரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புநவம்பர் 18, 1936
சாதனைமுதல் சுதேசி கப்பல்
நாட்டுரிமைஇந்தியா

பிறப்பு

சிதம்பரம் பிள்ளை  அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல்  உலகநாதன் என்ற புகழ் பெட்ரா வழக்கறிஞர் அவர்களுக்கு மகனாக பிறந்தார்

இளமை காலம்

வ. உ. சி அவர்கள் தனது சொந்த கிராமமான ஒட்டப்பிடாரத்தில் ஆரம்ப கல்வி கற்றார் ,பின் அருகிலுள்ள திருநெல்வேலியில் சேர்ந்து பள்ளி கல்வி பயின்றார் , பள்ளி கல்வியை முடித்த பிறகு வ. உ. சி அவர்கள் ஓட்ட பிடாரத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றினார் ,பின் தனது தந்தை போல் வழக்கறிஞராகும் கனவோடு கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார்

சட்டத்தொழிலில்

வ. உ. சி  தனது தந்தை போல் பணக்காரர்களுக்கு வழக்கறிஞராக இல்லாமல் ஏழை எளியவர்களுக்கு பிரச்சனைகளுக்காக வாதாடினார் ,பல முறை தனது தந்தை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்ட சிதம்பரம் அவர்கள் தமிழகத்தில் மூன்று நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சுமத்தி சிறப்பாக வாதாடி வெற்றி பெற்றார் இதன் காரணமாக சிதம்பரம் அவர்கள் தனது வழக்கறிஞர் தொழிலில் உச்சம் பெற்றார் .

அரசியல் வாழ்க்கை

1905 இல் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினராக சேர்ந்தார்,அப்போது சுதேசி இயக்க செயல்பாடுகளில் முன்னிலையில் இருந்த லாலா லஜபதி ராய் ,பாலகங்காதர திலகர் ஆகியோர் ஆங்கிலேய வர்த்தகத்தை எதிர்த்து சுதேசி கைதொழில் முன்னேற பாடு பட்டு வந்தனர் ,மேலும் அரபிந்தோ கோஷ் ,சுப்ரமணிய சிவா,சுப்ரமணிய பாரதி ஆகியோர் சென்னை மாகாணத்தில் இருந்தும் போராடினர் ,இவர்களுது போராட்டத்தில் வலுசேர்க்கும் விதமாக சிதம்பரனார் அவர்கள் போராட்டங்களை துவங்கினார் ,சென்னை காங்கிரஸ் கட்சியின் சேலம் அமர்விற்கு தலைமை தாங்கினார்

கப்பல் நிறுவனம்

சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக இலங்கை கடல் வணிக போக்குவரத்தில் ஆங்கிலேய கப்பல் நிறுவனங்களுக்கு போட்டியாக சுதேசி கப்பல் இயக்கம் திட்டத்தை துவங்கினார் , நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ துவங்கினார்,சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்” ஆகிய இரண்டு நீராவி கப்பல்களை வாங்கினார் .ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தை பொருட்படுத்தாத வ.உ.சி தொடர்ந்து கப்பல்களை இயக்கினார் ,பயணிகளை இலவசமாக அழைத்து செல்லும் திட்டத்தை துவங்கிய ஆங்கிலேய அரசு வ.உ.சிகம்பெனி திவாலாகும் நிலைக்கு தள்ளியது .

சிறை வாழ்க்கை

நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்க திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களுடன் சேர்ந்து போராடினார் இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரை விடுதலை செய்ய பொதுமக்கள் நிதி திரட்டினர்  ,தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர்,  அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.மேலும் வழக்கறிங்கர் தொழில் செய்ய இயலாத படி அவரது பாரிஸ்டர் பட்டம் பறிக்க பட்டது

செக்கிழுத்த செம்மல்

சிறையில் இருந்த அந்நாட்களில் மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை.செக்கிழுக்கும் வேலை கிடைக்க பட்ட சிதம்பரனார் அவர்கள் கடினமாக உழைத்தார் இதன் காரணமாக உடல் பாதிக்க பட்டது இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர்.

இறுதி காலம்

 ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால்,  அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் இணைந்தார்

இலக்கிய படைப்புகள்

சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.

இறப்பு

 சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார்.  தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது உயிர்  தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர்  18, 1936அன்று பிரிந்தது