அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் அதிகரிக்கப்படும் அன்பில் மகேஷ் பேட்டி 

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் அதிகரிக்கப்படும் அன்பில் மகேஷ் பேட்டி 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனங்களும் அதிகரிக்கப்படும்  என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்

நேற்று கல்வி அதிகாரிகள், அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் மகேஷ் தலைமையில் நடந்தது அப்போது  அவர் 

அரசு பள்ளிகளில் 66 லட்சத்தில் இருந்து 71 லட்சமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும் எனவும் 

அவ்வாறு அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 

பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக 'இல்லம் தேடி கல்வி' திட்டம தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது எனவே  

இத்துறைக்கு உட்பட்ட 4064 நுாலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஆசிரியர்கள் நியமனம் அதிகரிக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியிருப்பது , அரசு வேலைக்காக காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உற்சகத்தை வழங்கியுள்ளது