மாஸ் ட்ரெய்லர் 'தி லெஜண்ட்' திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான ஜவுளிக்கடைகளில் ஒன்றாக திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். 

லெஜண்ட் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு தானே நடித்தார்.

இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

பின்னர், நடிப்பின் மேல் ஆசை கொண்ட அவர் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகில் எந்த படத்திற்கும் இசையமைக்காத ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படம் மூலமாக மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

லெஜண்ட் படத்தில் நாயகன் லெஜண்ட் சரவணனுடன் நடிகர் பிரபு, மறைந்த நடிகர் விவேக், நடிகர் மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, கோவை சரளா, காளி வெங்கட், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

நாயகியாக ஊர்வசி ரெடேலா மற்றும் கீதிகா நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜூசுந்தரம் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். எடிட்டர் ரூபன் எடிட் செய்துள்ளார்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி கோபுரம் பிலிம்ஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வாடி வாசல்’ என்ற பாடல் கடந்த மே 20ஆம் தேதி வெளியானது. அந்தப் பாடலையும் இணையத்தில் அதிகமானோர் கண்டிருந்தனர்.

இப்போதுவரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த பாடலை கண்டுள்ளனர்.

ஏற்கெனவே தமன்னா, ஹன்சிகா தொடங்கி யாஷிகா வரை பல நடிகைகளுடன் சரவணன் அருள் திரையில் தோன்றி ரசிகர்களை காண்டாக்கி வரும் நிலையில், 

தற்போது லட்சுமி ராயுடன் அவர் போட்ட குத்தாட்டத்தை வைத்து சிலர் ட்ரோல் செய்யவும் தவறவில்லை.

இந்நிலையில் தான் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.

லெஜண்ட் சரவணன் ஒருபுறம் ட்ரோல் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் அவரது பட பாடல்கள், ட்ரெய்லர் என எல்லாமே மாஸ் ஹீரோ பட ரேஞ்சுக்கு வைரலானது குறிப்பிடத்தக்கது.