நடாலி போர்ட்மென் சொன்ன 6 அடி மைடி தார் ரகசியம்

நடாலி போர்ட்மென் மைடி தாராக நடிக்க தனது உயரத்தை 10 இன்ச் உயர்த்திய ரகசியத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்

Thor: Love and Thunder திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ,இந்த திரைப்படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் நடாலி போர்ட்மென் இணைந்து நடித்துள்ளனர்.

2017 இல் வெளிவந்த தார் : ரகநோர்க் (Thor: Ragnarok )2019 இல் வெளிவந்த அவன்ஜர்ஸ்:எண்டு கேம் (Avengers: Endgame) திரைப்படங்களுக்கு அடுத்த படியாக 

டைக்கா வைடிடி (Taika Waititi) இயக்கத்தில் வெளிவரும் தார் திரைப்படம் தயாரிப்பு பணிகளை முடித்துவிட்டு தற்போது திரைக்கு வர காத்திருக்கிறது,

இந்த திரைப்படத்தில் புதிய வில்லனாக பேட் மேன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற கிறிஸ்டியன் பேல் (Christian Bale) நடித்துள்ளதால் இந்த திரைப்படத்திற்று அதிக வரவேற்பு உள்ளது.

சில மார்வல் திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த ஜேன் பாஸ்டர் (Jane Foster) கதாபாத்திரத்தை மீண்டும் கதை காலத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

மேலும் தாருக்கு இணையாக அதிகரிக்க பட்ட உடல் எடை மற்றும் உயரத்தை கொண்டுள்ளதாக திரைக்கதை வடிவமைக்க பட்டுள்ளது.

திரைப்பட போஸ்டர்களில் அதீத எடையுடைய தார் உடைகளை நடாலி போர்ட்மென் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர் , 

இருந்த போதிலும் உயரம் குறைவான நடாலி போர்ட்மென் எப்படி தாருக்கு இணையான கதாபாத்திரத்தில் சோபிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உயரத்தை அதிகரிக்க மேடைகள் அமைக்க பட்டதாகும் ,பழைய முறைப்படி முன்னுக்கு பின் நிற்கவைத்து எடுக்கும் தந்திர கட்சி முறைப்படி பல காட்சிகள் படமாக்க பட்டது என்றும்

உயரம் கூட்ட கம்ப்யூட்டர் தொழில் முறைகள் எதுவும் பயன்படுத்த படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் .

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் Chris Hemsworth போன்று உடை அணிந்து நடிக்க அதிக கனமான உடைகளையும் அணிந்ததாக தெரிவித்துள்ளார்