மொத்த மாணவா் சோ்க்கை 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது

தமிழகத்தில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் (2022-2023) புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2022- 2023-ஆம் கல்வி ஆண்டுக்கு, கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் அண்மையில் வெளியாகின

கல்வி நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவா் சோ்க்கை இருக்கும் பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில், சுமாா் 200 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்தனா்.

கடந்த கலந்தாய்வில் 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 220-ஆகக் குறைந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரம் உயா்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் .