தள்ளி வைக்க பட்டது TET தேர்வு 2022

ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெற இருந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2022 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 10 செப்டம்பர் முதல் 15 செப்டம்பர் வரை நடைபெறும்.

06.07.2022 பத்திரிக்கை செய்தியின் படி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தாள் I கணினி வழி தேர்வு தள்ளி வைக்க படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது,

,நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தள்ளி வைக்க படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்வுக்கு பதிவு செய்து காத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது பதிவு என்னை பயன்படுத்தி பயிற்சி தேர்வினை எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதையும்

அந்த அறிவிப்பு குறிப்பிடுகிறது. பயிற்சி தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு தேர்வுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்து இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

முறையான தேர்வு வழிகாட்டுதல்களும் ,நேர மேலாண்மையும் அடைய இந்த பயிற்சி தேர்வினை பதிவு செய்தோர் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொருமுறை தகுதி தேர்வு நடத்தப்படும் போதும் புதிய தேர்வு உத்திகள் கையாளப்படுவதால் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த பயிற்சி தேர்வினை எழுத அறிவுறுத்த படுகிறார்கள்